பத்து கன்னிகைகளும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும் Jeffersonville, Indiana, USA 60-12-11M 1.காலை வணக்கம். இக்காலையில் மீண்டும் இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். வெளியே மோசமான கால நிலை காணப்படுகிறது. ஆனால் ஓ, உள்ளேயோ, மிகவும் அருமையாக இருக்கிறது. உள்ளேயிருந்து கொண்டு, வெளியே பார்ப்பதும், (அவ்வாறில்லையா?) வெளியே இருந்து கொண்டு உள்ளே பார்ப்பதும் நன்றாக இருக்கிறது. கடந்த இரவில் நல்ல ஓய்வு கிடைத்தது, அதனால் இக்காலையில் நன்றாக இருக்கிறது. நமக்கு கடந்த இரவில் அருமையான வேளை உண்டாயிருந்ததல்லவா? அற்புதமான வேளையது! அதை நான் போற்றுகிறேன். ஷ்ரிவ் போர்ட்டில் நடைபெற்ற கூட்டத்தைப் போலவே நமக்குண்டாயிருந்த நேற்றிரவுக் கூட்டமும் இருந்தது. ஏறத்தாழ ஷ்ரிவ்போர்ட்டில் ஏற்பட்ட ஆவியின் அசைவு தொடர்ந்து இப்பொழுதும் இக்கூட்டத்திலும் ஏற்பட்டதாக இருந்தது. எனவே அவருடைய தயவு, இரக்கம் இவைகளுக்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்களும் கூட உங்கள் ஆவியை அவரிடம் ஒத்துழைப்போடு சமர்ப்பித்து இருந்தீர்கள்: அதினால் அவரும் நம்மை நடத்தவும் வழிகாட்டவும் முடிந்தது, அதற்காக உங்களுக்கும் நன்றி. 2.நீங்கள் பேசுவதைக் கேட்டு கோபமடையும் கூட்டம் உங்கள் முன் இருந்தால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் ஒன்றையும் வெளிப்படுத்தமாட்டார். உங்களோடு மனதொருமித்து கிரியை செய்யும் ஒரு கூட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். ''அவர்கள் ஓரிடத்தில் ஒருமனப்பட்டு கூடி வந்தார்கள். அப்பொழுது வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாயிற்று என்று பார்க்கிறோம். பார்த்தீர்களா? ஆனால் உங்களுக்கு கிடைத்திருப்பது... நான் எவ்வளவு அதிகமாய் ஜெபித்தாலும் சரி, நான் ஒருவேளை அபிஷேகம் என்மேல் தங்கினவனாய் இங்கே உள்ளே நடந்து வருகையில், அந்த கசப்புணர்வு மக்களிடையே காணப்பட்டால், அப்பொழுது அவையொன்றும் கிரியை செய்யாது. அவ்வித உணர்வு அவரை உடனே துக்கப்படுத்துகிறது. அவர் ஒன்றையும் வெளிப்படுத்த மாட்டார். ஆனால் அபிஷேகத்துடன் இங்கே உள்ளே நடந்து வருகையில்; அபிஷேகத்தின் கீழாக சபையினரும் இருப்பதை நீங்கள் உணருகையில், அப்பொழுது தான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். அப்பொழுது அவர் அசைவாடி நமக்கென மகத்தான காரியங்களைச் செய்கிறார். பாருங்கள்? 3.மேய்ப்பன் அவர்களிடம் நான் இன்னும் பேசவில்லை.... ''நம்பிடுவாய்'' என்ற பாடலைக் கேட்டதும் நான் உள்ளே வந்து விட்டேன். அவர் இன்று காலைக்காக என்ன தீர்மானித்திருக்கிறார் என்பதைக் குறித்து அவரிடம் பேசவில்லை. இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களே! என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லுவேன். நான் இந்த சிறிய பாடவகுப்பை ஆரம்பித்து, 11 மணி வரைக்கிலும் நான் தொடர்ந்து பேசுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஆராதனையை மீண்டும் எடுத்து நடத்தி,பிரசங்கிக்க ஆரம்பித்து விடுங்கள். என்ன சரிதானே? அது எப்படியிருக்கும்? (சகோதரன் நெவில் அவர்கள்,'ஆம், அபிஷேகத்தின் கீழாக நடத்தப்படுகையில், அதை தடை செய்யாமல், நீங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே இருங்கள்'' என்று கூறுகிறார் -சகோதரன் பிரன்ஹாம் அவர்கள், “அபிஷேகமானது பின்னால் இங்கேயும் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அபிஷேகமானது இங்கும் வருகிறது. அவர் ஒரு... ஆசி). 4.சகோதரன் நெவில் அவர்கள் எப்பொழுதும்... இதற்கு முன் இங்கு வந்திராத புதியவர்களுக்கு அவரைக்குறித்து நான் கூற விரும்புகிறேன். அவரது முகத்திற்கு முன்பாக முகஸ்துதியாக எதுவும் நான் சொல்லவில்லை. அவர் ஒரு மிகவும் கிருபை பெற்றவர்ரான மனிதர். எப்பொழுதும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் வேதவாக்கியத்தை வாசித்து, அதை ஜீவித்துக் காண்பிப்பவராக காணப்படுகிறார். அவர் எப்பொழுதும் கிறிஸ்துவுக்குள்ளாக 'கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்' என்னப்பட்டவராக இருக்கிறார். அவர் எப்பொழுதும் பிறரை கனம்பண்ணுகிற அவ்விஷயத்தில் முந்திக்கொள்ளுபவர். நான் அவரை அறிந்த நாள் முதலாய் அவர் அப்படிப்பட்டவராகவே இருந்து வந்திருக்கிறார். அவர் இக்கூடாரத்தில் வந்த நாள் முதலாய் அல்ல, அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவரை அறிந்த காலம் முதற்கொண்டே அவர் அவ்விதமாகத்தான் இருந்து வந்திருக்கிறார். முதன் முதலாக நான் அவரை சந்தித்து அவரை அறிந்து கொள்ள சென்ற பொழுது உள்ளதை நான் நினைவு கூருகிறேன். அவர் ஹோவர்ட் பார்க் என்ற இடத்திலுள்ள மெதோடிஸ்ட் சபையில் பிரசங்கிப்பதைக் கேட்க சென்றிருந்தேன். அது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. அது இருபது அல்லது அதற்கு மேலாக உள்ள வருடங்களுக்கு முன்பாக என்று கருதுகிறேன். அப்பொழுதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். அவர் ஒரு வேலையும் செய்து வந்தார். அவர் ஹென்றிவில் என்ற ஊரிலிருந்து வந்தவர். அங்கே அவர் வனங்கள் சம்மந்தமான பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தன் பிழைப்புக்காக அவ்வேலையை செய்துகொண்டே பிரசங்கமும் செய்து வந்தார். நானும் சமீபகாலம் வரையிலும் அவ்வாறு வேலைசெய்து வந்திருக்கிறேன். அதே விதமாகத்தான் அவரும் இருந்தார். அதன் பிறகு, நாங்கள் இருவரும் தேவனுடைய ஊழியத்தைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு இருந்த கட்டத்தை ஆரம்பித்தோம். எனவே நான், எங்களிருவருடைய புதிய எஜமானனுக்காக மகிழ்ச்சி கொள்ளுகிறோம். சகோதரன் நெவில் அவர்களே! நீங்களும் அவ்வாறு இருக்கிறீர்களல்லவா? ஆம் ஐயா! நான் நிச்சயமாக இவ்வேலையை விரும்புகிறேன். ஆம் ஐயா. நான் அவரைக் குறித்து மிகவும் திருப்தியடைந்திருக்கிறேன். 5.இப்பொழுது சிறுவர்க்கான ஞாயிறு பள்ளி வகுப்பை அவர்கள் நடத்தப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்களுக்கென இருந்த அந்த அறையில் தடுப்புகளெல்லாம் பிரித்து அகற்றப்பட்டதால் அவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது, அதனால் சபையினர் கூடி வர இடங்கொள்ளுமளவுக்கு இடம் கிடைத்துள்ளது. 6.இன்றிரவில் நாம் அந்த முடிவான மகத்தான காலமாகிய லவோதிக்கேயாவைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். நேற்றிரவில் நாம் பிலதெல்பியாவின் காலத்தை எடுத்துக் கொண்டு, லவோதிக்கேயா சபையின் காலத்தின் துவக்கத்திற்குள் வந்து, இருசபைக் காலத்திற்கும் நடுவில் இருக்கும் அந்த இடைப்பட்ட காலத்தைக் குறித்தும் பார்த்தோம் (the lapover). அதன் பிறகு, ''திறந்த வாசல்'' 'கொஞ்சம் பெலன்'' ''என் வார்த்தையைக் காத்துக் கொண்டாய்', ''என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருந்தாய் என்பவைகளைப் பற்றிய இவ்விரு சபைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய மகத்தான இரகசியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். அச்சிறு சிறு காரியங்களையெல்லாம் தேவன் எவ்வாறு நமக்கு மிக அற்புதமாகமெய்ப்பித்துக் காண்பித்தார் என்பதைப் பார்க்கையில், நாம் அதற்காக மிக மிக நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். 7.நம் மத்தியில் புதிதாக விஜயம் செய்துள்ள வியாதியுள்ள மக்கள் யாராகிலும் இருப்பின், ஒரு காரியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அதாவது வியாதியஸ்தருக்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று நாம் ஜெபம் வைத்திருக்கிறோம். அது கர்த்தருக்கு சித்தமானால் நடக்கும். நான் அதை 'கர்த்தருக்கு சித்தமானால்' என்று எப்பொழுதும் குறிப்பிடுவதை கவனியுங்கள். ''கர்த்தருக்கு சித்தமானால்“ என்று கூறவேண்டும் என்று வேதம் கூறுகிறது. இது வரைக்கிலும் நமக்கு திடட்வட்டமாகத் தெரியவில்லை. நான் இங்கிருப்பேனா, அல்லது சபையானது இங்கு இருக்குமா, நாம் யாவரும் இங்கு இருப்போமா என்றும், மற்றுமுள்ள விஷயங்களையும் அவர் எனக்கு சொல்லவில்லை. அப்படியானால், அது அவருக்கு சித்தமாயிருக்குமானால், நாம் இங்கு இருப்போம், பாருங்கள். அவருக்கு சித்தமில்லையெனில், அப்பொழுது நிச்சயமாக நாம் இருக்கமாட்டோம். 8.வானொலியின் மூலமாக சகோ. நெவில் அவர்களும், மற்றும் இங்கிருக்கிற இந்த சகோதரன் மற்றும் வானொலி ஒலிபரப்புச் செய்கிற ஏனையோரும் அதைப்பற்றி தொடர்ந்து அறிவித்துக் கொண்டேயிருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜெபிப்பதற்காக பெருங்கூட்டமான மக்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே ஞாயிறுகாலையில் முடிந்த அளவு முன் கூட்டியே வந்துவிடுங்கள். நாங்களும் வந்துவிட விரும்புகிறோம். நல்லது, நாம் பார்க்கலாம். ஒருவேளை இது போல் பெருங்கூட்டமாக வந்துவிட்டால், அச்சமயங்களில், ஜெப அட்டைகள் கொடுத்து ஒழுங்கு செய்வதுதான் சரியாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு மக்கள் திரண்டு விடுவர். ஆகவே அதை ஒழுங்குபடுத்திச் செய்தால் அப்பொழுது ஒவ்வொருவராக வந்து ஜெபித்துக் கொண்டு போகலாம். அது மக்கள் மத்தியில் குழப்பத்தை நீக்கிவிடும். அப்பொழுது, உங்கள் அட்டையானது வரிசைப்படி அழைக்கப்படுகிற வரையிலும் நீங்கள் எழுந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நீங்கள் வியாதிப்பட்டு, உடல் நிலை மோசமாக இருந்து கொண்டிருந்தால், நீங்கள் எங்கே உட்கார்ந்திருக்கிறீர்களோ, அங்கேயே இருக்கலாம், வீணாக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. உங்களுடைய அட்டையானது அழைக்கப்படும் போது, மேலே வந்து ஜெபித்துக் கொண்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம். பிறகு அதேபோல், அடுத்தவர் தன் முறைப்படி வருவார். இவ்வாறான முறையை நான் அனைவருக்கும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். நான் வழக்கமாக, ஒரு சில பேர்களை முன்னுக்கு அழைப்பதுண்டு, அவர்கள் காத்துக் கொண்டிருக்கையில், யாராவது உடல் நிலை பாதிப்பால் கஷ்டமாக உணருகையில் அவர்கள் அமருவதற்காக ஆசனங்களை வாலிபர்களைக் கொண்டு போடச் செய்வதுண்டு. அதைவிட அவர்கள் இருக்குமிடத்தில் தத்தமது ஆசனங்களிலேயே அமர்ந்திருக்கச் செய்து, அவர்களுடைய எண்ணானது அழைக்கப்படுகையில் வந்து ஜெபித்துக் கொண்டு போகலாம். அது வரையில் அவர்கள் ஆசனங்களிலேயே காத்திருக்கலாம். 9.வேதத்தின் மகத்தான போதகங்களில் ஒன்றான தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கிறேன். தெய்வீக சுகமளித்தல் என்பது, தெய்வீக சுகமளித்தலைப் பெறுவதை விட அதிகம் அர்த்த முள்ளதாய் உள்ளது. தெய்வீக சுகமளித்தல், மீண்டும் வரப்போகிற ஒரு தேவன் உண்டு என்று கூறுகிறது. தெய்வீக சுகமளித்தல் எதைக் குறித்து பேசுகிறது? அது நமது உயிர்த்தெழுதலின் அச்சாரமாகும். தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இல்லாவிடில், அப்பொழுது உயிர்த்தெழுதல் என்ற ஒன்றும் இருக்காது. இப்பொழுதும் நம்மை ஞானஸ்நானம் செய்விக்க பரிசுத்த ஆவி என்ற ஒன்றும் இருக்காவிடில், அப்பொழுது வரப்போகிற உலகில் நித்திய ஜீவன் என்ற ஒன்றும் இருக்காது. “நமது மீட்பின் அச்சாரமாயிருக்கிறது இது என்று வேதம் பரிசுத்த ஆவியைக் குறித்து கூறுகிறது. அச்சாரம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது முன் பணமாக இருக்கிறது, பாருங்கள். நீங்கள் போய் ஒரு பண்ணையை விலைக்கு வாங்கினீர்களென்றால், அதற்கு விலைக்கிரயமாக பத்தாயிரம் டாலர்கள் வேண்டுமென்று சொன்னால், நீங்கள் அதற்கான முன்பணமாக இரண்டாயிரம் டாலர்களை செலுத்தினால், அதை அவர்கள் அச்சாரம் என்றழைக்கிறார்கள். இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது வரப்போவதின் அச்சாரமாக இருப்பின், ஓ, முழுக்கிரயமும் செலுத்தப்படும் போது அது என்னவாயிருக்கும்? அது மகிமை பொருந்தினதாயிருக்கும்! 10.இப்பொழுது இன்று காலையில், கர்த்தருக்கு சித்தமானால், சபைக்காலங்களுக்கு இடையில் உள்ள அந்த சில காரியங்களை நாம் இணைக்கப்போகிறோம். அங்கே ஏதோ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மீதியாயிருக்கிறவர்கள், நித்திரை செய்யும் கன்னியர், புத்தியுள்ள கன்னியர், பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுதல், மிருகத்தின் அடையாளம் போடப்படுதல் ஆகிய இந்தக் காரியங்களைப் பற்றி பார்க்கலாம். இது காலத்தின் முடிவாக இருக்கிறது, அனைத்துக் காரியங்களும் இங்கே இந்த ஒரே இடத்தில்தான் வந்து விழுகிறது. எனவே நாம் குளிர்காலத்திற்கு முன்பாக மீதமுள்ளவைகளையும் பார்த்து முடித்து வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை முடித்தாக வேண்டும். அது எவ்வாறு ஒன்றாக இணைகிறது என்பதைப் பாருங்கள். 11.திரு வுட் அவர்களே, நாகரிகமானது அதேவிதமாக பயணம் செய்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மனிதனானவன் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் தோன்றியது முதற்கொண்டு இருந்ததுபோலவே, தொடர்ந்து ஆறு புலன்களை அல்லது ஐம்புலன்களைக் கொண்டவனாய் தான் இருக்கிறான். ஆனால் இந்த கடைசியில் சிறிது காலத்திற்குள், அதாவது கடந்த நூறு ஆண்டுகளில்... என்னே! அவன் மாட்டு வண்டியில் மெதுவாக வந்து கொண்டிருந்தவன். கடந்த நூறு ஆண்டுகாலத்தில், அவன் மாட்டு வண்டியிலிருந்து மணிக்கு இரண்டாயிரம் மைல்கள் வேகத்தில் பறக்கும் ராக்கெட் காலத்திற்குள் வந்து விட்டான். மாட்டு வண்டி யுகத்திலிருந்து ராக்கெட் யுகத்திற்குள் மிக வேகமாக வந்துவிட்டான். பாருங்கள், இக்காரியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான், ஏன், கடந்த ஐம்பது ஆண்டுகாலத் திற்குள்தான் இதெல்லாம் நடக்க ஆரம்பித்தது. 12.யூடிக்காபைக் என்ற இடத்தில், நான் ஒரு சிறுவனாக இருந்த பொழுது, அங்கே எல்மெர் ஃப்ராங்க் என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வழக்கறிஞர். அவர் அந்த சாலையில் குடியிருந்த லஷர் என்ற பெயருள்ள வாலிபமான பெண்ணை மணந்து கொண்டார். அப்பெண்ணின் தந்தையிடம், என் தந்தை பணியாற்றினார். அவர்களிடத்தில் ஒரு மோட்டார் வாகனம் இருந்தது. அதில் ஒரு க்ராங்கும் இருந்தது. (க்ராங்க் என்றால், வாகனத்தின் சக்கரத்தை சுழலச் செய்வதற்காக உள்ள வளைவு திருகு என்னப்படும் பாகமாகும் - மொழி பெயர்ப்பாளர்). நீங்கள் அந்த க்ராங்கை, வாகனத்தின் பக்கவாட்டில் சென்று இயக்கிவிட வேண்டும். அவ்விதமானதொரு அமைப்புள்ள வாகனம் அது. அதற்கு ஒரேயொருகியர் தான் உண்டு. அவ்வாகனத்திற்கு ரப்பரினால் ஆன பெரிய ஒலிப்பான் (ஹார்ன்) பொருத்தப்பட்டிருக்கும். அதைக் கொண்டு தான் அந்த வண்டி போகையில் ஹார்னை ஒலிக்கச் செய்ய வேண்டும். அந்த வண்டி பயங்கர வேகமாகிய மணிக்கு பத்தொன்பது மைல்கள் வேகத்தில் போகும் என்று கூறினார்கள். என் தந்தை சாக்குகளில் மணலை அடைத்து அவ்வண்டியில் வைத்துக் கொண்டு வந்து, அது அவர்கள் கூறுகிறபடி மணிக்கு பத்தொன்பது மைல்கள் வேகத்தில் உண்மையிலேயே ஓடிக்கூடியது தானா என்று பார்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். ஆனால் அந்த சாலைகளை நீங்கள் பார்க்க வேண்டும், உ, ஊ : அந்த வாகனம் இந்த வழியாக மணிக்கு பத்துமைலும், மேலும் கீழுமாக இருந்த இந்த வழியில் ஒன்பது மைல்கள் வேகத்திலும் சென்றது. பாருங்கள்? இப்படியாக இரண்டையும் கூட்டினால், மணிக்கு பத்தொன்பது மைல்கள் கிடைக்கிறது. 13.நாங்கள் யாவரும் சிறுவர்களாக இருக்கையில், அப்பொழுது பிள்ளைகள் நாங்கள் ஐந்து பேர்கள். என் தாயார் எங்களை குளிப்பாட்டி விடுவார்கள். நாங்கள் வேலியருகில் நின்று, அந்த வண்டி வருவதை பார்க்க ஆவலோடு காத்திருப்போம். அநேக மைல்களுக்கப்பால் அது வந்து கொண்டிருக்கையிலேயே அதன் பெரிய உறுமல் சப்தமானது கேட்கத் துவங்கி விடும். அது பெரிய முழக்கத்தோடு வரும். அந்த வண்டி வரும் போது அதன் சப்தத்தை கேட்கும் யாவரும் நின்று, தங்கள் குதிரை வண்டிகளை சாலையை விட்டு அகற்றி, குதிரைகளைப் பிடித்துக் கொள்வார்கள். அவ்வாகனமோ சாலையில் வரும் போது பயங்கரமாயிருக்கும். அது நான் ஏழு வயதாயிருக்கும் போது என்று எண்ணுகிறேன். அது சுமார் 1914ம் ஆண்டில் அவ்வாறிருந்தது. அப்போது இருந்த நிலைமைக்கு, அது முதற்கொண்டு இக்காலம் வரையிலும் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பாருங்கள். இது கடந்த நாற்பதாண்டு காலமாக ஏற்பட்டவை தான் என்பதைப் பாருங்கள். இன்றைக்கு இங்கு உள்ள இந்தக் காரியங்களை யெல்லாம் உண்டாக்க, மனிதனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஏனெனில் வேதமானது, அந்த விதமாக மனிதன் செய்வான் என்பதை முன்னுரைத்திருக்கிறது. கடைசி நாட்களில் அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள். அறிவும் பெருகிப்போம்.'' 14.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகூம் தீர்க்கதரிசியானவன், இங்கு சிக்காகோவிலுள்ள வாகனப் போக்குவரத்துக்கான விரைவு நெடுஞ்சாலைகளைக் கண்டு எழுதியுள்ளதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவன் கூறினான்: ''அவைகள் அகலமான வீதிகளில் கடகடவென்றோடி, (தமிழ் வேதாகமத்தில் 'வீதிகளில் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகமத்திலோ அகலமான சாலைகளில் என்று கூறப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்) இடது சாரி வலது சாரி வரும். ''நான் பழங்காலத்துப் பாணியிலுள்ள ஆஸ்லோ மற்றும் இதர நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்த நாடுகளில் தெருக்கள் நடந்து செல்லக்கூட இடமில்லாத வகையில் அமைந்திருக்கும். ஒரு பெரிய இரதமானது அவர்களுடைய நகரத்தில் ஓடுவதற்கு மட்டுமே வசதியாக தெருவானது அமைந்திருக்கும். இங்கிருந்து அந்தச் சுவர்வரைக்கிலுள்ள தூரம் தான் தெருவானது அமைந்திருக்கும். அதாவது ஒரு இரதம் ஓடுவதற்கு மட்டுமே போதுமான அகலம் உள்ள தெருவாக அது இருக்கும். நல்லது, ஆனால் நாகூம் கண்டு சொன்னது என்னவெனில், ''அகலமான வீதிகள்' என்று தான். அவைகள் மின்னல்களைப் போல் வேகமாய்ப் பறக்கும்'' (நாகூம் 2:4) என்றான். 'அவைகள் தீவட்டிகளைப் போல் விளங்கி' (நாகூம் 2:4) என்று நாகூம் கூறுகிறான். அவ்வண்டிகளிலுள்ள விளக்குகளைப் பற்றியே அவன் அவ்வாறு கூறுகிறான். “அவைகள் ஒன்றுக்கெதிராக ஒன்று ஓடிவரும்' என்று கூறினான். விபத்துக்கள் அவைகள். அந்த தீர்க்கதரிசி தன் காலத்திற்கு அப்பால் எதிர்வரும் காலத்தினுள், நான்காயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் இவைகள் வருவதை பார்த்தான். அதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். அது ஆவிக்குரிய தூண்டுதலை கொடுப்பதாக இருக்கிறது. 15.ஆனால் நாமோ கடைசி காலத்திற்குள் இருக்கிறோம். நண்பர்களே! அதேவிதமாக வேத வாக்கியமும் இருக்கிறது. சரியாக இந்தக் கடைசி காலத்திலே அதில் சொல்லப் பட்டவைகளெல்லாம் சம்பவித்துக் கொண்டு வருகின்றன. இன்று காலையில் கூட நான், தேவன் நமக்கு உதவி செய்வாரெனில், இவற்றில் சில காரியங்களை, நம்மால் முடிந்த அளவுக்கு, ஒன்று சேர்த்து இணைத்துப் பார்க்கலாம் என்று எண்ணினேன். பின்பு, இன்றிரவில் அந்த மகத்தான கடைசி காலத்தில், அதாவது லவோதிக்கேயா சபையின் காலத்தில், அது எவ்வாறு தன்னுடைய செய்தியை பெற்றுக் கொண்டது என்றும், அதன் பிறகு, அது எவ்வாறு அதை விட்டு விலகி, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை அலட்சியம் செய்து, நேராக அது அனலுமின்றி குளிருமன்றி வெதுவெதுப்பான நிலைமைக்குள் சென்று, அதினால் தேவனுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடும்படியான நிலைமைக்கு வந்தது என்பதைப் பற்றியும் பார்ப்போம். பாருங்கள், வேறு விதமாக கூறினால், அந்த சபையைப் பற்றி எண்ணிப் பார்த்தாலே தேவனுக்கு வயிற்றை உமட்டிக் கொண்டு வருகிற அளவுக்கு அது அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது. ''என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்'' என்று அவர் கூறினார். 16.இப்பொழுது இன்று காலையில் நான் குறிப்பிட்டுக் காட்டும் படி சில வேத வாக்கியங்களை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். அதற்கு முன்பு, ஜெபத்திற்காக நாம் சற்று நேரம் எழுந்து நிற்பது நமக்கு அப்படியொன்றும் கடினமாக இராது என்று நான் கருதுகிறேன். எங்கள் இரக்கமுள்ள பரம பிதாவே, நாங்கள் மீண்டும் இந்த ஓய்வு நாளில் கூடி வருகையில், வெளியிலே, மழையானது தூற ஆரம்பித்து, மிகவும் கடுமையான குளிர்காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ இன்றைக்கு எங்கள் தலைகளுக்கு மேல் ஒரு கூரை இருப்பதற்காகவும், எங்களுக்குகூடி வர ஒரு சிறிய இடமிருப்பதற்காகவும், எமது மனச்சாட்சி எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று கூறும் எந்தவொரு வழியிலும் கூடி வந்து தேவனை ஆராதிப்பதற்கு வசதியான ஒரு தேசம் இன்னும் எங்களுக்கு இருப்பதற்காகவும், மகிழ்ச்சி அடைகிறோம். பிறகு, உம்முடைய வார்த்தையிலே, இந்நிலைமை நீண்ட காலத்திற்கு நீடித்திருக்காது என்பதைக் காண்கிறோம். எனவே பிதாவே, இதிலிருந்து நாங்கள் பெற்றுக் கொள்வதற்கென்றே வைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்தவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக எங்களை விசேஷித்த வண்ணமாக அபிஷேகியும் என்று ஜெபிக்கிறோம். எங்களால் கிரியை செய்ய முடியாத வரப் போகிற அந்த வேளைகளுக்காக நாங்கள் ஆயத்தமாக இருந்திட எங்களுக்கு உதவி செய்யும். இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பதை நாங்கள் அறியோம். அது ஒருவேளை வாரக்கணக்கில் இருக்கக்கூடும், மாதங்கள் கணக்கில் இருக்கக்கூடும், அல்லது வருடக்கணக்கில் இருக்கக்கூடும், நாங்கள் அறியோம். ஆனால் வரப்போகும் என்றாவது ஒரு நாளில் இவ்வாறு செய்ய இயலாமற்போகும். எனவே, பிதாவே, நீர் எங்களை உமது தெய்வீக வழி நடத்துதலின் கீழாக வைத்து, எங்கள் சிந்தைகள் உம்மைக் குறித்தே இருக்கும்படி செய்து, எங்கள் இருதயத்தின் தியானம் உமது சமுகத்தில் ப்ரிதியாக இருக்கும் படி செய்தருளும் என்று ஜெபிக்கிறோம். ஓ கர்த்தாவே. எங்களுடைய பாவங்களை மன்னியும். நாங்கள் பாவம் செய்து, உம்முடைய வழியை விட்டு விலகினோம் என்று நாங்கள் பாவ அறிக்கை செய்து, பாவ மன்னிப்பைக் கேட்கிறோம். நாங்கள் உம்முடையவர்கள் என்று அழைக்கப்பட சற்றேனும் தகுதியுடையவர்களல்ல, கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட உம்முடைய வேலைக்காரர்களாக மட்டுமாவது எங்களை வைத்துக் கொள்ளும், கர்த்தாவே. நாங்கள் செய்ய வேண்டுமென நீர் எங்கள் மேல் சுமத்தும் எந்தவொரு வேலையையும் செய்ய நாங்கள் விருப்பமுள்ளவர்களா யிருப்போம். அதை நாங்கள் செய்ய விருப்பமுள்ளவர்களா யிருக்கிறோம், எங்களை மட்டும் உம்முடைய இராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அதினால் நாங்கள், இவ் வுலகை எதிர் நோக்கியுள்ள இந்தப் பெரிய பயங்கரமான வேளையில் கிரியை செய்ய எங்களுக்கு இயலுமே, கர்த்தாவே. உம்முடைய பிரசன்னத்தினாலே இப்பொழுது எங்களை ஆசீர்வதியும், உம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு எங்களுக்குப் போதித்தருளும்; இங்கு ஒருமித்துக் கூடி வந்துள்ள எங்கள் மூலமாக மகிமைப்பட்டருளும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம். ஆமென். 17.முதலாவதாக இங்கு வந்துள்ள எனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அடையாளம் கண்டு கொள்ள விரும்புகிறேன். அவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை நான் இன்று காலை முதற்கொண்டே சுற்று முற்றும் நோட்டம் விட்டுக் கொண்டேயிருக்கிறேன். இரவு நேரத்தில் நண்பர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்வது சற்று சிரமமான விஷயம் தான். ஏனெனில் நம்முடைய ஒளியமைப்பில், பின்னால் தொங்கிக் கொண்டிருக்கிற விளக்குகள் நிமித்தமாக மக்களை அடையாளங் கண்டுகொள்வது கடினமாய் இருக்கிறது. இந்த பிரசங்க பீடத்திலிருந்து கொண்டு, இரவு நேரத்திலும் சரி, பகல் நேரத்திலும் சரி, மக்களை சரியாக பார்த்து அடையாளங் கண்டுகொள்வது கடினமாயுள்ளது. தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கிற நமது நண்பர்கள் பலரை நான் பார்க்கிறேன். இன்றைக்கு பகல் வேளையில் இன்னின்னார் வந்துள்ளனர் என்று அடையாளங் கண்டுகொள்வது, இரவு நேரத்தை விட சுலபமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல இயலாதபடி, அவர்கள் அநேகராய் இருக்கின்றனர் ஆனால் உங்களையெல்லாம் நான் பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க விரும்புகிறேன். வேத வாக்கியங்களின்படி, நான் இந்த கடிந்து கொள்ளுதலை யெல்லாம் செய்து சத்தியத்தை கொண்டு வர வேண்டியுள்ளது. நான் அவ்வாறு செய்ய வேண்டுமென சுயமாக விரும்பி அப்படிச் செய்யவில்லை. ஆனால் எவ்வாறு செய்ய வேண்டுமென தேவன் எழுதிவைத்திருக்கிறாரோ, அதைச் செய்தாக வேண்டும். அதைச் செய்ய வேண்டுவது தான் முக்கியமாயிருக்கிறது. அப்படியிருந்த பிறகும், பல்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் அநேகர், இன்னமும் கூட என்னுடன் கூட அமர்ந்திருக்கிறதை நான் காண்கையில், இவர்களை நான் மிக மிக அதிகமாக பாராட்டுகிறேன். தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 18.இப்பொழுது...(சகோதரன் ஸ்ட்ரிக்கர், 'சகோதரன் பிரன்ஹாமே, என்று அழைக்கிறார் - ஆசி.). ஆம் சகோதரனே. (இங்குள்ள அனைத்து மக்கள் சார்பாகவும் நான் பேசிட சபையின் அனுமதி எனக்கு இருக்குமென்றால், நாங்கள் அனைவரும் உங்களை பாராட்டுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்''). நன்றி, சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே. (“நாங்கள் உம்மை நேசிக்கிறோம்''). நன்றி, சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே. ('நீங்கள் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளவைகளுக்காக தேவையான கிருபை உங்களுக்குக் கிடைக்க நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நாங்களும் அச்சமயங்களில் உங்கள் பட்சமாக நிற்கக்கூடும் படியும் ஜெபிக்கிறோம் . உங்களுக்கு நன்றி, சகோ.ஸ்டிரிக்கர் அவர்களே. (சபையார் ஆமென் என்று கூறுகிறார்கள் - ஆசி). சபையே உங்களுக்கு நன்றி. இதைக் கூறும் நீங்கள் அருமையானவர்களாய் இருக்கிறீர்கள். நான் அதை வெகுவாக மெச்சுகிறேன். 19.நேற்றிரவில் யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அது சகோ. ஃப்ரெட் என்று நினைக்கிறேன். அவர் என்னை அழைத்து, நேற்றிரவு கூட்டம் முடிந்து வீடு திரும்பப் போகையில், தன்னிடம் ஒரு சகோதரன் தான் கண்டதாக கூறின தரிசனம் அல்லது சொப்பனம் பற்றி என்னிடம் எடுத்துரைத்தார். அதில், நான் பூமியின் வளைவான பகுதியில் நிற்பதாகவும், என் பின்னால் கருமேகம் சுருண்டு நிற்பதாகவும் காணப்பட்டுள்ளது. அவன் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஆனால் அது... தேவன் கிரியை செய்து முடிக்கிற வரையிலும் அவனால் ஒன்றும் செய்ய இயலாது. அதன்பிறகு, அப்பொழுது நான் போய்விடுவதற்கு நேரமாகியிருக்கிறது. எனவே ஆனால், நான் - இதன் காரியம் என்னவெனில், ''பெரிய ஆளாக'' நான் இருக்க விரும்பியதே கிடையாது. அவ்விதம் ஆகிட நான் விரும்பியதில்லை. ஆனால் நான் “ஜீவனின் சங்கீதத்தைப் பற்றித்தான் எண்ணுகிறேன். மகத்தான மனிதர்களின் ஜீவியங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன (பவுல் என்ன செய்தார், ஐரேனியஸ் என்ன செய்தார், லூத்தர் என்ன செய்தார்,வெஸ்லி என்ன செய்தார்,அல்லது பரிசுத்த மார்ட்டின் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள்). மகத்தான மனிதர்களின் ஜீவியங்கள் யாவும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.அதினால் நாம் நம்முடைய ஜீவியங்களையும் உன்னதமானதாக ஆக்க முடியும் உலகைவிட்டுப் பிரிந்து செல்லுகையில் நமக்குப் பின்னால் காலத்தின் மணற்பரப்பில் அடிச்சுவடுகளை விட்டுவிட்டு செல்கிறோம். அடிச்சுவடுகள், ஒருவேளை இன்னொன்றாக இருக்கும்,வாழ்க்கையாகிய இருண்ட சமுத்திரத்தில் பயணம் செய்கையில்,(நான் போய்விட்ட பின்பு, பாருங்கள் போய்விட்ட பிறகு) கைவிடப்பட்ட நிலையில், விசுவாசக் கப்பல் சேதமடைந்த நிலையில் உள்ள எந்தவொரு சகோதரனே (இப்புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படியுங்கள்) அதில் கண்டுணர்ந்து, மீண்டும் இதயத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். (அதுதான் காரியம்) நாம் நம் தலைகளை உயர்த்தி, அப்பொழுது கிரியை செய்வோம் எந்தவித போராட்டத்திற்கும் ஆயத்தமான இருதயத்தோடு இருப்போம். (நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா?) வாய்பேசாத, ஓட்டிவிடப்படும் நிலையில் உள்ள கால்நடைகளைப் போல் இருக்க வேண்டாம் (வார்த்தையண்டை ஓட்டிவிடப்பட வேண்டும்) ஆனால் யுத்தத்தின் நாயகனாக இருந்திடுங்கள் (நான் அதை விரும்புகிறேன்). 20,எனது சிறிய சகோதரனாகிய ஜார்ஜ் அவனுக்கு பிடித்தமான பாடலைப் பாடுவான். அப்பாடலை அவனது அடக்க ஆராதனையிலும் பாடப் பெற்றிருந்தான். நானும் அவனும் உட்கார்ந்து பாடுவோம். நான் 'ஜீவனின் சங்கீதம் என்ற பாடலையும், அவன் உட்கார்ந்து, மரணத்தை கடத்தல்' என்ற பாடலையும் பாடுவான். பாருங்கள்? நீங்கள் அப்பாடலை கேட்டிருக்கிறீர்கள். சூரிய அஸ்தமனத்தின் வேளையில் மாலை நேர நட்சத்திரம் தோன்றுகையில், எனக்கென தெளிவான அழைப்பு வந்திடுமே அம்மரண வேளையில் துக்கங்கொண்டாடுதல் இருக்க வேண்டாம், அப்பொழுது நான் கடலுக்குள் போகப் புறப்பட்டு விடுவேன் (இதை நீங்கள் அநேக தடவைகளில் கேட்டிருக்கிறீர்கள்.) நேரம் தூரம் இவைகளால் புறம்பே இருப்பவைகளெல்லாம் அசையும், வெள்ளங்கள் என்னை தூரத்தில் கொண்டு செல்லும், மரணத்தை நான் கடக்கையில், எனது மாலுமியை முகமுகமாய் கண்டிடுவேன் என நான் நம்புகிறேன். (என் தம்பி அதைக் கடந்திருப்பான் என்று நிச்சயமாயிருக்கிறேன்) அவன் பாடி முடித்த பின்பு நான் பாடும் பாடல் இதோ: என் பின்னால் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன காலத்தின் மணற்பரப்பில் கால் அடிச்சுவடுகள் பதிந்தன, அதினால் மற்றவர்கள் அதைக் கண்டு, அப்பாதையில் தொடர்ந்து வரலாம், இதை மனதில் பதித்து, தொடர்ந்து செல்லுங்கள். ஏனெனில், ஒரு மகத்தான நாளில் இயேசு வருவார். இன்று காலையில் அதைப்பற்றித் தான் நாம் படிக்கப் போகிறோம். அப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டிருக்கும். 21.நான் மெய்யான சபை மற்றும் கள்ளச்சபை என்பதைப் பற்றி பேச விரும்புகிறேன். நான் இதைப்பற்றி இன்று காலையில் சிந்திக்கையில், இந்த சபைக் காலங்களின் செய்தியில் இதைப்பற்றி பேச இயலாமற்போனால், ஒருவேளை கர்த்தருக்கு சித்தமானால், சீக்கிரத்தில் ஒரு சிறிய தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்து, ஆதியாகமம் தொடங்கி வேதாகமம் முழுவதிலும் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் தீவிரமாக கடந்து சென்று, அதைப்பற்றி படிக்கலாம் என்று எண்ணினேன். அவ்விரண்டு சபைகளும் என்ன செய்யப் போகின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம். பின்பு, ஒருவேளை, என்றாவது ஒரு நாளில், நாம் சபைக் கட்டிடத்தை கட்டி விட்டோமென்றால், அப்பொழுது, இன்னும் கூடுதலாக மக்கள் அமருவதற்கு இடம் உண்டாயிருக்கும். எவ்வளவு பேர்கள் வந்துவிட்டுப் போகிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மக்கள் ஏராளமாய் வருகிறார்கள், நமக்கு போதுமான இடம் இல்லாமல் இருக்கிறது. ஒருவேளை கோடை காலத்தில், மிகவும் உஷ்ணமாக இருக்கும் போது, அப்பொழுது, அந்த உயர்நிலைப் பள்ளியின் அரங்கத்தை எடுத்துக் கொண்டு, அதிலே கூட்டங்களை ஒழுங்கு செய்து கொண்டு, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையும், இன்னும் வேறு எதையாவதையோ, அல்லது தானியேலின் புத்தகம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, அவைகளை ஒன்றாக இணைத்து, நாம் படிக்கலாம். 22.இப்பொழுது, நாம் யூதர்களைப் பற்றி பார்க்கப் போகிறதில்லை. யூதர்கள்.... நான் ஏற்கனவே கூறிய வண்ணமாக, கி.பி.1500ல் இருண்ட காலங்களில், கத்தோலிக்க மார்க்கத்தின் குருக்களாட்சியானது, சபையையும், அரசையும் ஒன்றாக இணைத்து விட்டு, அது அவர்களது “ஆயிரவருட அரசாட்சிக்கு பிந்தினகாலம்'' ஆக இருந்தது. அவர்கள், கிறிஸ்துவைப் போல் ஒருவர், கிறிஸ்துவுக்குப் பதிலாளாக, ஒரு சிங்காசனத்தில் அமர வேண்டியவராக சபையானது ஏற்றுக்கொண்டு விட்டபடியினால், தாங்கள் சரியாக ஆயிரம் ஆண்டுக்கால் அரசாட்சியின் காலத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டனர். சபையும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்து, யாவும் நன்றாக ஆகிவிட்டபடியினால், அதுவே, ”மகத்தான ஆயிரம் ஆண்டுக்கால அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று நம்பினர். அவர்கள் இன்னமும் அவ்வாறு தான் விசுவாசிக்கிறார்கள். ஆனால் அது ஒரு பிழையான காரியமாகும். ஏனெனில், கிறிஸ்துவின் வருகை ஏற்படாமல், ஆயிரமாண்டு கால அரசாட்சி ஆரம்பிக்காது. கிறிஸ்து ஆயிரம் ஆண்டுக்கால அரசாட்சியை கொண்டு வருகிறார், அவரே செழிப்பின் குமாரனாயிருக்கிறார். அவர் வரும் பொழுது, சபையானது மேலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். நாம் அடுத்தபடியாக எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்? சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகத் தான். 23.சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், சபை எடுத்துக் கொள்ளப்படும் பொழுது நியாயத்தீர்ப்பு இல்லை, பாருங்கள். நியாயத்தீர்ப்பை நீங்கள் இங்கேயே சந்தித்துவிட்டீர்கள். அதுதான் சரி. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் நியாயத்தீர்ப்பினின்று நீங்கலாயிருக்கிறார்கள். இயேசு கூறினார்: “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' நாம் எவ்வாறு அதைப் பெறுகிறோம்? நாம் கிறிஸ்துவுக்குள் வந்து, ஒரு சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். 1. கொரிந்தியர் 12ம் அதிகாரம் “ஒரு சரீரம்' என்று கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். தேவன் அச்சரீரத்தை ஏற்கனவே நியாயந்தீர்த்திருக்கிறார். கிறிஸ்துவின் அனுமதியின் மூலமாகவும், அவருடைய கிருபையின் மூலமாகவும், அவர் தமக்குள் நம்மை கொண்டு வருகிறார். 1 கொரிந்தியர் 12ம்அதிகாரம் (13ம் வசனம்). ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு நியாயத்தீர்ப்பினின்று விடுவிக்கப்பட்டிருக் கிறோம். ஏனெனில் அவர் அந்த நியாயத்தீர்ப்பை தாமே ஏற்றுக் கொண்டு விட்டார். ஓ, இதற்காக நீங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவில்லையா? அவர் நமக்காக நியாயத்தீர்ப்பை தன் மேல் எடுத்துக்கொண்டார். இனி நியாயத்தீர்ப்பே இல்லை. ஆனால் அது, அவருக்குள் வர மறுக்கிறவர்களுக்கு உண்டு, அச்சரீரத்திற்குள், அந்த இரகசியமான சரீரத்திற்குள் வர மறுப்பவர்களுக்கு உண்டு. நாம் எவ்வாறு அதற்குள் பிரவேசிக்கிறோம்? வெறுமனே கைகளை குலுக்கிக்கொள் வதினாலா? இல்லை. கடிதத்தின் வாயிலாகவா? இல்லை. ஏதாவது ஒரு வகை தண்ணீர் ஞானஸ்நானத்தினாலா? இல்லை. ''ஒரே ஆவியினாலே'', பரிசுத்த ஆவியினாலே, நாம் யாவரும் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். 24.இன்று காலையில் நாம் அதைப்பற்றி கூர்மையாகப் பார்க்கப் போகிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் அச்சரீரத்திற்குள்ளாக இருக்க வேண்டும். அல்லது அதற்கு புறம்பே இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒருஏற்பாடு இல்லை. கிறிஸ்தவர்களிலே, ரொம்ப நல்ல கிறிஸ்தவர்கள் என்று ஒரு வகுப்பார் கிடையாது. ஒன்று நீங்கள் கிறிஸ்தவர், அல்லது கிறிஸ்தவர் அல்ல என்ற நிலை தான் உண்டு. கறுப்பு - வெள்ளை பறவை என்ற ஒன்றோ, குடித்து - தெளிவாக உள்ள மனிதன் என்றோ இருக்க முடியாது. அவ்விதமானதொன்று உங்களுக்கு இருக்க முடியாது. ஒன்று நீங்கள் கிறிஸ்தவராக இருக்க வேண்டும், அல்லது கிறிஸ்தவர் அல்ல என்ற நிலை இருக்க வேண்டும். ஒன்று நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும், அல்லது கிறிஸ்துவுக்கு புறம்பேயிருக்க வேண்டும். 25.இப்பொழுது இவைகள் ஒரு போதனை (teaching) போல் தோன்றலாம். நான் ஒரு போதகன் (teacher) என்ற நிலையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறவன். ஆனால் போதித்தல் என்பது கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு விசேஷித்த வரமாயிருக்கிறது, அது வெட்டுகிறது. முதலாவதாக அப்போஸ்தலர்கள், அதன் பிறகு தீர்க்கதரிசிகள், பின்பு போதகர்கள், மற்றும் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், சரீரமாகிய சபையில் ஐந்து ஊழியவரங்கள் இவைகள். அவற்றில் போதித்தல் என்பது ஆவியின் வரங்களில் லொன்றாகும். நான் படித்து ஆராய்ந்து, சரியெனக் காண்கிற தெதுவோ அதை மக்களுக்கு கொண்டுவர வேண்டிய தாயுள்ளது. வேத வாக்கியங்களைப் படித்து அவைகளை ஒன்று சேர்த்து நான் கொண்டுவர வேண்டியுள்ளது. ஆனால், கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே, கிறிஸ்துவின் சரீரம் அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும். 26.இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையைக் குறித்துப் பேசுகின்றன. புறஜாதியினர், யூதர், எத்தியோப்பியர், ஆப்பிரிக்கர்கள், ஆகிய ஒவ்வொரு இனமக்களும், புறஜாதிகளாக இந்த ஒருசரீரத்தை உருவாக்குகின்றனர். அவர்கள் கறுப்பராக, வெள்ளையராக, பழுப்பு நிறத்தவராக, மற்றும் அனைத்து நிறத்தவராக, பல்வேறு நிற மலர்களால் ஆன மலர்ச் செண்டைப்போலுள்ளனர். அது அவ்வாறு தான் உள்ளது. அதை தேவன் தன்னுடைய பலிபீடத்தில் படைக்கிறார். அவர்கள் அனைத்து ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரரில் இருந்து வந்தவர்கள். ஆனால் இப்பொழுது, நீங்கள் 3ம் அதிகாரத்தை தாண்டி விட்டால் (சபைக்காலங்கள் இவற்றில் அடங்கியுள்ளன). தேவன் திரும்பி வந்து, யூதர்களை சேர்த்துக்கொள்கிறார். அந்தக் காலத்தில் சபையானது இனிமேல் காணப்படவேயில்லை. அது யூதர்களின் காலம். தேவன் யூதர்களோடு, ஒவ்வொரு தனி நபர்களாக காரியமாற்றுவதில்லை. அவர் இஸ்ரவேலரோடு, எப்பொழுதும் ஒரு ஒட்டுமொத்த ஜாதியாகத்தான் பார்த்து காரியமாற்றுகிறார். 27.அன்றொரு நாள், அதைப்பற்றி ஒருவருக்கு கேள்வியுண்டாயிற்று. ''கலப்படமான மார்க்கம்'' என்ற தலைப்பில் நான் பிரசங்கித்த போது (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2, எண்.13- ஆசி.) நான் குறிப்பிட்ட ஒன்றின் பேரில் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. வேதமானது முறை தவறிப்பிறந்த குழந்தை, அதாவது வேசிப்பிள்ளை, கர்த்தருடைய சபையில் பத்து தலை முறைகளுக்கு பிரவேசிக்கலாகாது என்று கூறப்பட்டுள்ளதைக் குறித்து நான் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். பத்து தலை முறையென்றால், 400 ஆண்டுக்காலமாகும்; அவ்வளவு காலத்திற்கு முறைதவறிப் பிறந்த குழந்தையும் அதன் தலைமுறையினரும், கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. கலப்படமாய் பிறத்தல் அவ்வளவு மோசமான விளைவை உண்டாக்குகிறது. ஒரு குழந்தையானது, அதன் தாய், தன் புருஷனோடு சேராமல் அந்நிய புருஷனோடு சேர்வதினால் உண்டாகிப் பிறந்ததாய் இருக்குமானால், அதுவே கலப்படமாய்ப் பிறந்த குழந்தையாகும். அக்குழந்தை தன் தகப்பனாயிருக்க வேண்டியவருக்குப் பிறக்காமல், தன் தாய் அந்நிய புருஷனோடு சேர்ந்ததினால் பிறந்ததாயிருக்கும். பாருங்கள்?அது தேவனுக்கு முன்பாக மிகுந்த தீமையானதாக இருந்தது. தேவனுக்கு முன்பாக சரியான வித்து மீண்டும் தோன்றிட பத்து தலைமுறைக்காலம் கடந்து செல்லவேண்டியுள்ளது. ஆனால் அது இந்தக்காலத்திற்கு பொருந்து வதாயிருக்காது. இப்பொழுது உங்களுக்கு புதிய பிறப்பு உண்டாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுக்கு ஒரே பிறப்புதான் உண்டாயிருந்தது. அதுவும் இனச் சேர்க்கையினால் பிறப்பிக்கப் பட்டவையாயிருந்தது. இப்பொழுது நமக்கு புதிய பிறப்பு உண்டாயிருக்கிறது. அது ஆவிக்குரியதாயுள்ளது, அது தானே தெரிந்தெடுக்கப் பட்டவர்களை பிறப்பிக்கிறது. நாம் கிறிஸ்து இயேசுவிலே, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த புதிய சிருஷ்டிகளாயிருக்கிறோம். புதிய சிருஷ்டிகள்! இந்த சிருஷ்டி என்ற வார்த்தையை இங்கேயுள்ள நல்ல கல்விமான்களாயிருக்கிறவர்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் அதைப்பற்றி கவனிக்க வில்லையெனில், அதைப் பற்றிப் பாருங்கள். சிருஷ்டி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் 'ஒரு புதிய சிருஷ்டி' என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. ஓ, நீங்கள் இவ்வுலகில் இனச்சேர்க்கையினால் பிறந்து மாம்சத்தில் இருக்கையிலேயே, விண்ணுக்குரிய பிரகாரமாக ஒரு புதிய சிருஷ்டியாகவும் பிறந்தவர்களாயிருக்கிறீர்கள். ஒரு புதிய மனிதனை சிருஷ்டிக்கும் தேவனுடைய புதிய படைப்பாக அது இருக்கிறது. புதிய சிருஷ்டி என்பது ஒரு பிறப்பாகும். மாம்சத்தில் பிறப்பதற்கு பிறப்பு எப்படி அவசியமோ, அவ்வாறே, ஆவிக்குரிய பிறப்பும் இருக்க வேண்டும். மாம்சத்தின் பிறப்பைப் போலவே, ஆவிக்குரிய பிறப்பும் அவசியமாயிருக்கிறது. 28.விவாகம் செய்து கொள்ளும் ஒரு இளம் தம்பதிகள், மணந்து கொண்டு ஒருவேளை இப்படிக் கூறலாம்: ''எங்களுடைய முதல் மகனுக்கு 'யோவான்' என்று பெயரிட்டு அழைக்கப் போகிறோம்'' என்று அவன் பிறக்கவேயில்லையென்றால், யோவான் என்பவன் அங்கே இல்லவேயில்லை அதேவிதமாகத் தான்... நீங்கள் ஒரு வேளை... பரலோகத்தைப் பற்றி உங்களுக்கு பல்வேறு புராண கட்டுக் கதையின்படியான அநேக கருத்துக்கள் இருக்கக்கூடும். அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நீங்கள் மறுபடியும் பிறக்காவிடில், நீங்கள் அங்கே இருக்க மாட்டீர்கள். அதுதான் சரி, பாருங்கள். அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும். ஏனெனில், அது பிறப்பின் வழியாகத் தான் சாத்தியமாகும். தேவன் தமது பிரமாணங்களை விதித்துள்ளார். எனவே யாவும் அவருடைய பிரமாணங்களின்படி தான் நடைபெற வேண்டும். 29.இப்பொழுது, இவர்களில், யூதர்களில் மீதியாயிப்பவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். நாம் முதலில் அவர்களைப் பற்றி எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஏனெனில் அது வைக்கப்பட்டுள்ள இடம்... எப்பொழுதும் அங்கே மூன்று விதமான மக்கள் எல்லாக் காலத்திலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறார்கள். அதை மனதில் பதித்து வைத்திருங்கள். அவையாவன: விசுவாசி, விசுவாசியாக நடித்துக்காட்டுபவன், அவிசுவாசி. அந்த விதமான மூன்று வகுப்பார். நமக்கு தருணம் அளிக்கும் பொருட்டு தள்ளிவிடப் பட்ட யூதன் இருக்கிறான், அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாயுள்ள சபை உள்ளது, மற்றும் ஆவியால் நிரப்பப்பெற்றுள்ள சபையும் உள்ளது. 30.ஒரு சமயம், சார்லி பொஹேனென் என்பவர், நான் பணிபுரிந்த பப்ளிக் சர்வீஸ் கம்பெனியின் தென் மாவட்டங்களின் தலைவராக அல்லது, கண் காணிப்பாளராக இருந்து வந்தார். நான் ஒரு வாலிபனாக இருந்த அக்காலத்தில், வேதவாக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் என்னை அழைத்து, 'பில்லி, பத்மு தீவில் இருந்த யோவான் கொஞ்சம் சிவப்பு மிளகாய் தின்று விட்டு கெட்ட சொப்பனம் கண்டிருக்க வேண்டும்.'' என்றார். ''மிஸ்டர் பொஹேனென் அவர்களே, நீங்கள் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது' என்றேன். அவர் எனது மேலதிகாரியாக, மேற்பார்வையாளராக இருந்தார். ''நல்லது, உலகில் யார் தான் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது?'' என்றார். ''அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்த ஆயத்தமாயிருக்கும் போது, அது புரிந்து கொள்ளப்படும்'' என்று நான் பதிலளித்தேன். அது தான் சரி. அவர் கூறினார்: “ஓ, என்னே ! நான் அதைப் படிக்க முயலுகிறேன். எனது மேய்ப்பரும் அதை படிக்க முயலுகிறார். ஆனால் அதின் பேரில் நாங்கள் மோசமானதொரு குழப்பத்துக்கு தான் வரவேண்டியுள்ளது என்றார். அவர் மேலும், சீனாய் மலையின் மேல் மணவாட்டி நிற்க நாம் காண்கிறோம். அதன் பிறகு, மணவாட்டிக்கெதிராக வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை அனுப்புகிறது. மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தோடு அது யுத்தம் பண்ணப்போகிறது. பின்பு மணவாட்டி பரலோகத்திலும் இருக்கிறாள். ஒரே வேளையில் மூன்று காரியங்கள் நடை பெறுகின்றன'' என்று கூறினார். ''அது ஆவிக்குரிய பிரகாரமான அறிவு இல்லாதிருப்பதினால் தான்'' என்று பதிலளித்தேன். “நல்லது, அவர்கள் ஒரே வேளையில் மூன்று இடங்களிலும் காணப்படுகிறார்களே என்று கூறினார். நான் அதற்கு, ''ஆம் ஐயா, ஆனால் அவ்விதமாக அவர்கள் அங்கே இடம் பெற்றிருக்கவில்லை. பாருங்கள், நீங்கள் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை மணவாட்டி என்று அழைத்தீர்கள். ஆனால் அவர்கள் மணவாட்டியல்ல, அவர்கள் யூதர்களாவர். வலுசர்ப்பமானது எவர்களுக்கெதிராக யுத்தம் பண்ணும்படி தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினதோ, அவர்கள் தான் மீதியாயிருக்கிற , மீதியாக வைக்கப்பட்டுள்ள ஸ்திரீயின் வித்தானவர்கள். அவர்கள் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும், இயேசுவின் சாட்சியை உடையவர்களுமாவர். மணவாட்டியோ மகிமையில் இருக்கிறாள்“ என்று பதிலளித்தேன். கவனித்தீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 14ம் அதிகாரத்திலுள்ள இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் சீனாய் மலையின் மேல் நிற்கிறார்கள். அது சரியாக அப்படியே உண்மையாயிருக்கிறது. தங்கள் பிதாவின் நாமத்தை தங்கள் நெற்றியில் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அது சரிதான் அவர்கள் யூதர்கள் யூதர்களில் மீதியாயிருப்பவர்கள். 31.அதன் பிறகு, இங்கே வலுசர்ப்பமானது வருகிறது. அது ரோம் குருக்களாட்சியாகும். அப்பொழுது ஏற்கனவே சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு, மகிமையில், அங்கே மூன்றரை ஆண்டுகள் கலியாண விருந்தில் இருக்கிறது. அதன் பிறகு வலுசர்ப்பம் வருகிறது. வலுசர்ப்பம் எப்பொழுதும் ரோமாபுரியையே குறிக்கிறது. அது சிவப்பான வலுசர்ப்பமாகும். அது அது தான் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தும்படி, வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தில், வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபமடைந்திருந்தது. அந்த ஸ்திரீயானவள் சகல ஜாதிகளையும் இருப்புக் கோலால் அரசாளும் ஆண்பிள்ளையை பெற்றெடுக்கவிருந்தாள். வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, ஸ்திரீயின் வித்தாயிருக்கிற மீதியாயிருக்கிறவர்களோடு யுத்தம் பண்ணப்போனது. ஆனால் இந்த சிவப்பான வலுசர்ப்பமானது, முதலில் இந்த ஸ்திரீக்கு முன்பாக நின்றது. ஸ்திரீயானவள் இந்தக் குழந்தையை பெற்று எடுத்தவுடனேயே, அக்குழந்தையை பட்சிக்கும்படி அது ஆயத்தமாக நின்றது. இஸ்ரவேல் என்ற ஸ்திரீயாகிய இஸ்ரவேல் சபைக்கு முன்பாக அவள் பெற்றெடுக்கப் போகும் குழந்தையாகிய இயேசுவை பட்சிக்கும்படி நின்றது யார்? ரோமாபுரிதான் அது, ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொன்று போடும்படி உத்தரவு பிறப்பித்தான். அதன்படி அத்தேசம் முழுவதிலும் எபிரெயக் குழந்தைகளை யெல்லாம் வெட்டிக்கொலை செய்தார்கள். அவ்வாறே இயேசுவுக்கு முன்னடையாளமாயிருந்த மோசேயையும் பிடித்துக் கொலை செய்ய பார்வோன் முயன்றான். அவன் குழந்தைகளையும் கொன்றான். ஆனால் மோசேயை அவனால் பிடிக்க முடியவில்லை. ஓ - ஓ - ஓ, தேவன் அவர்களை எவ்வாறு மறைப்பது என்பதை அறிவார்! 32.நீங்கள் மறைக்கப்பட்டருக்கிற படியினால் மகிழ்ச்சியடையவில்லையா? ஓ! மறைந்து கொள்வதற்கான ஒரு ஸ்தலம் உண்டு. வேதம் கூறுகிறது: ''நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் ஜீவன் மறைந்திருக்கிறது, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள்'' என்று. நீங்கள் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களை மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். பிசாசு தேடினாலும் உங்களை கண்டுபிடிக்க அவனால் முடியாது. பாருங்கள்? உங்களுடைய ஜீவியங்கள் கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்குள் அது மறைந்திருக்கிறது. மேலும் அது பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டும் உள்ளது. 33.இப்பொழுது, இந்த மீதியாயிருப்பவர்களான இவர்கள், நித்திரை செய்யும் கன்னியராவர், இவர்களோடு யுத்தம் பண்ணும்படி தான் வலுவர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை அவர்களுக்கு பின்னாக ஊற்றிவிட்டான். இவர்கள் ஸ்திரீயின் வித்தாகிய மீதியாயிருக்கிறவர்கள் ஆவர். மீதியாயிருக்கிறவர்கள் என்பவர் யார்? இங்கே தான் நீங்கள் இந்த சாயல்களை ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டும். மாம்சத்தின்படியான ஒரு சபையானது இருக்கிறது. அதை நான் இங்கே வரைந்து இன்னும் கொஞ்சம் தெளிவாக்கிட விரும்புகிறேன். இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களே உங்களுடைய நேரத்தில் கொஞ்சம் நான் எடுத்துக் கொண்டால் அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். (சகோதரன் நெவில் அவர்கள், ''ஆமென், எனக்கென நேரம் எதுவும் இல்லை ''என்று கூறுகிறார்-ஆசி). 34.அங்கே யார் இருக்கிறார்கள்? அவிசுவாசி. அவர்களை நான் இங்கே யு.பி. என்று எழுதுகிறேன். (கரும்பலகையில் அவிசுவாசிக்கு ஆங்கில வார்த்தையான unbeliever ஐ UB என்று சுருக்கமாக சகோ. பிரான்ஹாம் அவர்கள் குறிப்பிடுகிறார் மொழிபெயர்ப்பாளர்). அது பாவியைக் குறிக்கிறது. அடுத்து, இங்கே இன்னொன்று இருக்கிறது, அது தான் சடங்காச்சாரமான மார்க்கத்தை குறிக்கிறது. அதை நான் “எஃப்ஓ” (FO) என்று குறிப்பிடுகிறேன். அது சடங்காச்சார சபையைக் குறிக்கும். அடுத்து மூன்றாவதாக இரட்சிக்கப்பட்ட சபை இருக்கிறது. அதை “எஸ்ஏ'' (SA) என்று குறிப்பிடுகிறேன். அது இரட்சிக்கப்பட்ட சபையாகும். இவையாவற்றையும் எப்பொழுதும் மனதில் பதித்திருங்கள். இப்பொழுது இந்த இரட்சிக்கப்பட்ட சபையில் இருசாரார் இருக்கின்றனர். இந்த சபையில் இங்கேயும் இருகிறார்கள். அது கிறிஸ்துவினால், உவமையாக சொல்லப்பட்டது. ஒரு பிரிவார் நித்திரை செய்யும் கன்னியர், இன்னொரு சாரார் தங்கள் விளக்கில் எண்ணெயை உடையவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் யாவரும்... எத்தனை பேர்கள் அந்த உவமையை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? இன்னும் ஒரு நிமிட நேரத்தில் அதைப் பார்க்கப் போகிறோம். 35.அதைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களைப்பற்றி பார்ப்போம். அதனால் நாம் அதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் குறிப்பெடுத்துக் கொள்ளுகிறவர்கள், வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். நமக்கிருக்கிற நேரத்தை நாம் இதை விளக்குவதற்கென்று எடுத்துக் கொள்வோம். (நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கப் போவதில்லையே... ஆராதனை முடிவிலா, நல்லது ) எனது கைக்கடிகாரத்தை நான் இங்கே வைத்திருந்து, நேரத்தை கவனித்து, உரிய நேரத்தில் முடித்து வெளியேறுவோம். ஏறக்குறைய சுமார் 2 மணி நேரம் நமக்கு இருக்கிறது. கர்த்தர் தாமே நமக்கு இப்பாடத்தை கற்றுத்தருவாராக. “இவைகளுக்குப் பின்பு...” 36.இப்பொழுதும் நாம்... 6ம் அதிகாரம் வெள்ளைக் குதிரையைப் பற்றிப் பேசுகிறது. அது பூமி முழுவதிலும், ஜெயிக்கிறவராகவும் ஜெயிக்கப் போகிறவராகவும் புறப்பட்டுச் செல்கிற பரிசுத்த ஆவியானவர் ஆவார். பின்பு, மங்கின நிறமுள்ள குதிரை வருகிறது. அதை மரணம், பாதாளம் இவை பின் தொடர்ந்தது. இவ்விதமாக ஒவ்வொரு குதிரைகளிலும் ஏறியிருக்கிறவர்கள் கடந்து சென்றார்கள். ''இவைகளுக்குப் பின்பு என்றால், இந்த பெரிய அழிவிற்குப் பிறகு என்பதாகும். முதலாவதாக பரிசுத்த ஆவியானவர், ஜெயிக்கிறவராகவும், ஜெயிக்கப் போகிறவராகவும் பூமி முழுவதிலும் கடந்து செல்கிறார். அதன் பிறகு வருவது, மிகப் பெரிய பஞ்சகாலத்தில் உள்ளதாகும். “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை யென்றும், எண்ணெயையும் திராட்ச இரசத்தையும் சேதப்படுத்தாதே'' என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் இந்த முத்திரைகளைத் திறக்கிறார். 37.இவைகளுக்குப் பின்பு, பூமி நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். வெளி.7:1-3 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ஊழியக்காரர்கள் என்னப்பட்டவர்கள் எப்பொழுதும் தேவனுடைய ஊழியக்காரர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். ஆபிரகாம் அவருடைய ஊழியக்காரனாக இருந்தான். புறஜாதியார் ஊழியக்காரர் அல்ல. அவர்கள் மணவாட்டியாக இருக்கிறார்கள். அவர்கள் குமாரனாக இருக்கிறார்கள். சபையானது குமாரனாக இருக்கிறது. யூதர்கள் ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். ஓ, உங்களால் இயலுமென்றால்... நமக்கு போதுமான நேரம் இருக்குமெனில் இவ்விதமான வார்த்தைகளை அலசி ஆராய்ந்து பார்க்க முடியும். அநேக தடவைகளில் எனது அறையில் நான் அவ்வாறு ஒத்து வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து பார்த்து, அதை ஒழுங்குபடுத்துவதுண்டு, யூதர்கள் ஊழியக்காரராயிருக்கின்றனர். நான் இங்கு நின்று கொண்டு, இருக்கிற நேரத்தை யெல்லாம், “ஒரு ஊழியக்காரன்'' என்கிற விஷயத்தைப்பற்றி எடுத்துக் கொள்வேனென்றால், மற்ற விஷயங்களை நான் தொட முடியாது. எனவே, நான் சொன்னதை நினைவில் கொண்டு, அதை வேதம் பூராவும் தொடர்ந்து தேடிப் பாருங்கள். அப்பொழுது, யூதன் தேவனுடைய ஊழியக்காரனாயிருக்கிறான் என்பதை நீங்கள் காணுவீர்கள். 38.எசேக்கியேல் 4ம் அதிகாரத்தை நாம் திரும்பிச் சென்று பார்ப்போமானால், அங்கே என்னே ஒரு அழகான ஒத்ததான ஒரு காரியத்தை நாம் காண்கிறோம்! அவ்வசனத்தில், ''இவ்விதமான காரியம் இதற்கு முன் சம்பவித்ததுண்டோ ?'' என்று கேட்கிறார். எசேக்கியேல் உயரமான சுவற்றைப் பார்க்கிறான். அங்கே அவன் அந்நகரத்தில் செய்யப்பட்ட அருவருப்புக்களை யெல்லாம் கண்டான். அங்கே நான்கு புருஷர் சங்கரிக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அவர்கள் எருசலேம் நகர முழுவதிலும் சென்று, யாவரையும் சங்கரிக்கும்படி புறப்பட்டு வந்தனர். அவர்கள் சங்கரிக்கும்படி போகப்புறப்படும் முன்னர், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். ஏனெனில், தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெண்மையான ஆடை தரித்த ஒருவன் வந்தான். எத்தனை பேர்கள் அதை வாசித்திருக்கிறீர்கள்? எசேக்கியேல் 4ம் அதிகாரம் அந்தப் புருஷன், தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தான், வெண்மையான ஆடை அணிந்திருந்தான். கர்த்தர் அவனை நோக்கி, ''முதலாவது நீ தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோடும் முன்னர், நகரத்தினுள் போய் எவரையும் நீ சங்காரம் செய்ய வேண்டாம்'' என்று கூறினார். அவன் புறப்பட்டுப் போய், சிறு குழந்தைகளிடமும் கூறி, உரியவர்களையெல்லாம் முத்திரையிட்டான். 39.அதன் பிறகு, சங்கரிக்கும் ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேர்களும், புறப்பட்டு வந்து உள்ளே சென்று, ஈவு இரக்கமின்றி யாவரையும் முழுவதுமாக வெட்டிச் சாய்த்துக் கொண்டே போனார்கள். அவர்கள் புருஷர், ஸ்திரீகள் சிறு பிள்ளைகள் ஆகியோரில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த புருஷன் எவர்களையெல்லாம் முத்திரையிட்டாரோ, அவர்களைத் தவிர மற்ற யாவரையும் வெட்டிக் கொன்று போட்டனர். அந்த மகத்தான...இச்சம்பவமானது, புவியில் வந்த நம்முடைய கர்த்தரின் நாட்களுக்குப் பிறகு நடந்தவையாகும். அவைகளைப் பற்றி கர்த்தரும் மத்தேயு 24ம் அதிகாரத்தில் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். எப்படியெனில், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது வீட்டின் மேல் இருக்கிறவன் இறங்காதிருக்கக்கடவன், வயலில் இருக்கிறவன் வீட்டில் போய் தனது அங்கியை எடுத்துக் கொள்ள திரும்பிப் போகாதிருக்கக்கடவன், ஆனால் யூதேயாவில் இருக்கிறவர்கள்...'' ஜோசிபஸ் என்பவர் அதைப் பற்றி எழுதியுள்ளார், அவர்கள் எவ்வாறு ஓடிப்போனார்கள் என்பதை யெல்லாம் விவரிக்கிறார். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நம்பினவர்கள் மாத்திரமே தப்பித்துக் கொண்டனர். சைன்யமானது சூழ்ந்து கொண்டதை அவர்கள் கண்டபோது, அவர்களை அந்த படை தங்களை வளைத்து போட்டது என்று கண்டபோது… தீத்து. . . அதாவது கி.பி 96 ல், தீத்து எருசலேம் மதிலை சுற்று போட்டதை கன்டபோது, அவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மரப்பட்டைகளையும், நிலத்தின் புல்லையும் புசித்தனர். உண்மையாகவே ஒருவர் இன்னொருவருடைய குழந்தைகளை வேவித்து புசித்தனர். அவர்கள் முற்றுகையினால் யூதர்களை பட்டினிபோட்டு அவர்கள் செயலற்றுப்போகச் செய்து, அவ்வேளையில் உள்ளே நுழைந்து, அவர்கள் இரத்தமானது ஒரு ஓடையைப் போல் வாசல் வழியாக வழிந்தோடும் அளவுக்கு அவர்களை சங்கரித்தனர். அவர்கள் ஆலயத்தை சுட்டெரித்தனர். மதில்களை இடித்து கீழே தள்ளினர், அவ்வாறு இன்று வரையிலும் அது உள்ளது. 40.தேவாலயம் இருந்த அதே இடத்தில் ஓமர் பள்ளி வாசலானது கட்டப்பட்டது. இயேசுவும் அதைப்பற்றி மத்தேயு 24ம் அதிகாரத்தில் பேசியிருக்கிறார். ''மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன், நீங்கள் அதை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும்போது. இங்கே இதை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார் (வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் என்றார்). பார்த்தீர்களா? இந்த அருவருப்பை நீங்கள் காண்கையில், ஓமர் பள்ளிவாசல் அங்கு அருவருப்பாக, முன்பு ஒருகாலத்தில் பரிசுத்த ஸ்தலமாக இருந்த இடத்தில்... இன்றைக்கும் தேவாலயம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அதே இடத்தில் அந்த முஸ்லிம் பள்ளி வாசலானது அமைக்கப்பட்டுள்ளது. இயேசு கூறியவாறும், தானியேல் கூறியவாறும் முகம்மதியர்களின் அந்த பள்ளி வாசலானது அங்கே நின்று கொண்டிருக்கிறது. இயேசுவும் அவ்வாறு நடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். 41.அந்த தீர்க்கதரிசிகளும், தேவனும் அந்த காரியங்களை முன்னுரைத்திருப்பதைக் கவனியுங்கள், சகோதரரே, அது உங்களை, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறியச் செய்து, நம் கழுத்தின் பின்புற முடியை குத்திட்டு நிற்கச் செய்தல் வேண்டும். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். வேறு ஒன்றும் நடக்கும்படி ஒன்றும் மீதியாக இல்லை. இவ்வாறு நடக்கும் என்று அவர் கூறிய பிரகாரமாகவே இவையாவும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அது நம்மை தைரியமூட்டி, நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். இவை யாவும் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது'' என்று கூறி இயேசு நம்மை எச்சரித்திருக்கிறார். ''உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறபடியால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்'' என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோமே, அதைப் போலத்தான் இது உள்ளது. உலகம் முழுவதையும் நாம் ஆதாயப்படுத்தினாலும் அதினால் நமக்கு என்ன பயன்? எப்படியும் அதை இழந்து விடத்தான் போகிறோம். அந்த விதமாக அதை நாம் நமக்கு ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது. ஒரேயொரு விதமான ஆதாயப்படுத்திக் கொள்ளுதல் தான் உண்டு, அது கிறிஸ்துவின் மூலமாகத் தான். கிறிஸ்துவை எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் வெல்லக் கூடியவர்களாக இருப்பீர்கள். இவ்வுலகை விட்டு நீங்கள் கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், இந்த ஆராதனை முடிவதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் கடந்த சென்று விடக்கூடும். இன்று சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் கடந்து சென்று விடக்கூடும். சூரியன் நாளை காலை உதயமாவதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் இவ்வுலகை விட்டுப் போய்விடக்கூடும், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பாக ஒரு வேளை நீங்கள் போய்விடக் கூடும். நாம் யாவரும் கூட ஒரு வேளைபோய் விடக்கூடும். நாம் எப்பொழுது இவ்வுலகைவிட்டு கடந்து செல்லப் போகிறோம் என்பதை அறியோம். ஆனால் நீங்கள் இங்கிருக்க முடியாது, இதை விட்டுப்போய் விடத்தான் வேண்டும். எனவே அதை ஏற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது மதியீனமான தொன்றல்லவா? மரணத்தோடு நீங்கள் நெருங்கி, மரணத்தோடு சரசமாடிக் கொண்டிருக்கிறீர்கள். 42.அது பழங்காலத்திய , பனிக்கட்டியின் மீது வழுக்கி யோடுவதற்காக மரத்தினாலான ஒருவகை வண்டியில் ஏறிக் கொண்டு போவது போல் உள்ளது. அதில் ஏறிக் கொண்டு சுற்றிலும் சறுக்கிக் கொண்டே வரும் பொழுது, அவர்களையும் அறியாமல் திடீரென ஒரு சரிவில் வழுக்கிக் கொண்டே போய் விடுவார்கள், மரணத்திற்கு மிகவும் சமீபமாக வருவார்கள். அவ்விதமாக தான் நீங்களும் சுற்றிலும் சறுக்கிக் கொண்டே வந்து வழுக்கி விழப் பார்க்கிறீர்கள். எந்த நிமிடத்தில் ஏதோ ஒன்று உங்களை கவிழ்த்து நீங்கள் இல்லாமற் போகும்படி செய்யப் பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருதயம் நின்று விடுதல், மோட்டார் வாகன விபத்து, மற்றும் வேறெந்த ஒன்றும் எந்த நேரமும் நேரிட்டு, நீங்கள் மரிக்க நேரிடலாம். அப்பொழுது நீங்கள் போய்ச் சேரவேண்டிய உங்களுடைய நித்திய போக்கிடம் சரியாக உங்களுக்கு முன்பாக உள்ளது. அதைப்பற்றி யோசித்துப் பாரும், நண்பரே. 43.“பாழாக்கும் அருவருப்பை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது, இயேசு புவியில் வந்து விட்டுப் போனதற்குப் பிறகு, தீத்து வந்திட்ட நாட்களிலே, அங்கே தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்துக் கொண்டு வந்த அந்த நபர் பரிசுத்த ஆவியானவர் தாமே. அவர் எருசலேம் முழுவதிலும் உருவக்கடந்து போய், உரிய மக்கள் மேல் அடையாளத்தைப் போட்டார். சபை உறுப்பினரே, ஒரு காரியத்தை நீர் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறதாக கூறிக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ''நகரத்திலெங்கும் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் தவிர வேறு எவர் மேலும் அடையாளத்தைப் போடாதே' என்று அவருக்குச் சொல்லப்பட்டது. இப்பொழுது உலகத்தைப் பற்றியும் அவர்களுடைய நிலையைப் பற்றியும் பாரமடைந்திருக்கிற நிலையில் உள்ளவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? நல்லது, ''நான் மெதோடிஸ்ட், நான் பாப்டிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன். அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?'' என்று கூறுகிறார்கள். இழந்து போகப்பட்டவர்கள் மேல் தொடர்ந்து இருக்கும் பாரமல்ல அது. அது இனிமையாகும். உங்கள் ஆத்துமாவில் எந்தவொன்றும் எழும்பி உங்களுக்குள் கசப்பை போட்டு விட இடம் கொடாதிருங்கள். உங்களை ஒருவர் எவ்வளவு மோசமாக நடத்தியிருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்த வேண்டாம். ஒரு போதும் கசப்பு வேண்டாம். உங்களுடைய ஆத்துமாவில் கசப்பானது நங்கூரமிட்டு விடும் குற்ற உணர்வு உடையவர்களாக ஆகாதிருங்கள். அதுதானே பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தி, உங்களை விட்டு நீங்கச் செய்து விடும். நிச்சயமாக அதுதான் நடக்கும். 44.இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நான் இங்கே ஒரு தவறான காரியத்தைப் பேசிவிட்டிருந்தேன். வழக்குரைஞர்கள் என்னை அழைத்திருந்தனர். என் மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாள்.... ஏதோ என் தலையே பிரிந்து வந்ததைப் போல் நான் உணர்ந்தேன். நான் திரும்பிப் போய்விட்டேன். அவர்கள் தொலைபேசியின் மூலமாக இன்று மதியம் அங்கு வரும்படி அவரிடம் சொல்லுங்கள்“ என்று என் மனைவியிடம் கூறினார்கள். மேடா என்னிடம் கூறினாள் ''வழக்குரைஞர்கள் பேசினார்கள்'' என்றாள். நான் வாசலை விட்டு வெளியே நழுவிக் கொண்டே, “நான் இங்கே இல்லை என்று கூறிவிடு' என்று அவளிடம் சொன்னேன். ''பில்'' என்று அவள் கூறினாள். இப்பொழுது நான் இங்கே இல்லை என்று கூறிவிடு என்றேன் நான். அப்படிச் சொல்லிவிட்டு நான் வெளியே போய் விட்டேன். பிறகுநான் வெளியே போய்விட்டு, மனதில் மிகவும் துக்கமடைந்தவனாய் வீடு திரும்பினேன். அவள் வழக்குரைஞரிடம் நான் சொன்னதை கூறிவிட்டாள். அக்காரியம் அவளை மிகவும் புண்படுத்தியிருந்ததை நான் கண்டேன். வியாதியுற்றிருந்த ஒரு சிறு குழந்தைக்காக ஜெபிக்கும்படி ஒரு மனிதன் வந்திருந்தார். நான் அதற்காக ஜெபிக்கப் போனேன். அக்குழந்தையின் மேல் நான் என் கையை வைத்து ஜெபிக்க ஆரம்பித்த பொழுது, ஏதோ ஒன்று என்னிடம், ''நீ ஒரு மாய்மாலக்காரன், நீ என்ன செய்தாய் என்று நீ அறிவாய்'' என்றது. நான் அம்மனிதனிடம், ''ஐயா, நான் உமது குழந்தைக்காக ஜெபிக்க அருகதையற்றவன். என்னில் உள்ள பரிசுத்த ஆவியானவர் துக்கமடைந்துள்ளார். நான் குழந்தையின் மேல் என் கைகளை வைத்து ஜெபிக்க எனக்கு தேவையில்லை. நான் என்னை சரி பண்ணிக் கொண்டு வருமளவும் காத்திருங்கள்“ என்றேன். நான் எனது வழக்குரைஞரிடம் போய், நான் தவறு செய்தேன்'' என்று கூறினேன். 'நீங்கள் வெளியே போய்விட்டிருந்தீர்கள் என்று நான் நினைத்தேன்“ என்றார். 'இல்லை, தவறான ஒன்றை உங்களிடம் சொல்லும்படி நான் என் மனைவியை ஆக்கிவிட்டேன். நான் அதற்காக வருந்துகிறேன். நான் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. என்னை அதற்காக மன்னிப்பீர்களா?' என்று நான் அவரிடம் கேட்டேன். அந்த விஷயத்தில் என்னை மன்னிக்கும்படி என் மனைவியையும் கேட்டேன். 45.அதற்குப் பிறகு க்ரீன்ஸ் மில் என்ற இடத்திற்கு நான் சென்றேன். அது ஒரு ஜூலை மாதத்தில் நடந்தது. அந்த சமயத்தில் அங்கே காட்டில் மிகவும் நிசப்தமாக இருக்கும். நான் குகையில் அந்த மதியம் முழுவதும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். நான் குகையை விட்டு வெளியே போய், பாறையின் மேல் போய் நின்றேன். என்னால், மலைகளுக்கு அப்பாலும் பார்க்க முடிந்தது. மிகவும் அழகான காட்சியாயிருந்தது; இலைகள் மற்றும் யாவும் அசையாமல் அமைதியாக இருந்தது. அப்பொழுது மாலை சுமார் 5 மணி இருக்கும், அல்லது 6 இருக்கும். அது கோடை காலமாயிருந்தது, ஒன்றும் அசையவில்லை, மிகவும் அமைதியாயிருந்தது. மிகவும் உஷ்ணமானபகலாக அன்று இருந்தது. ''பரம பிதாவே, ஒருசமயம் நீர் மோசேயை பாறையின் மேல் நிறுத்தி அவனுக்கு முன்பாக கடந்து சென்றீர். நான் செய்த பொல்லாங்கை நீர் மன்னித்தருளுவீரானால், நீர் மீண்டும் ஒரு தடவை எனக்கு முன்பாக கடந்து சென்று நான் உம்மை காணும்படி செய்வீரா?'' என்று கேட்டேன். அப்பொழுது எனது இடது பக்கத்தில் உள்ள மலையின் பக்கமாக சிறு சுழற்காற்று உண்டாகி, இலைகளை நன்கு அசையச் செய்து என்பக்கமாக அது தாழ இறங்கி வந்து வீசி, காட்டுக்குள் கடந்து சென்றது. அதைக் கண்டு நான் ஒரு குழந்தையைப் போல் கதறினேன். நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, “என் பாவம் இப்பொழுது எனக்கு மன்னிக்கப்பட்டது என்று அறிவேன்'' என்று கூறினேன், பாருங்கள்? எப்பொழுதும் கசப்பான வேர் உங்களை விட்டு அகன்று போகும்படி பாருங்கள். உங்களுக்கு யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டாம். தேவன் அங்கே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, அது பொல்லாங்கு யாவையும் உங்களைவிட்டு அகன்றிருக்கும்படி செய்யும். 46.கிறிஸ்துவின் எச்சரிக்கையைப் பெற்றிருந்த கிறிஸ்தவர் களின் காரியமானது, இன்று காலையில் நாம் பேசிக் கொண்டிருக்கிற காரியத்திற்கு சாயலாயிருக்கிறதை கவனியுங்கள். இயேசுவின் இந்த எச்சரிக்கையைப் பெற்றிருந்த இந்த கிறிஸ்தவர்கள், அவர் சொன்னபடி அழிவானது ஏற்படப்போகிறதை அறிந்திருந்தபடியினால், உரிய சமயத்தில், ஆபத்து வருவதற்கு முன்கூட்டியே எருசலேம் பட்டணத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். இப்பொழுது சபை அங்கத்தினர்களை கவனியுங்கள். இவர்களுக்கு அந்நாட்களில் இருந்தவர்கள் முன்னடையா ளமாயிருந்தார்கள். அக்காலத்தில் மக்கள் சபையைச் சேர்ந்து கொண்டு, சபைக்குப்போனார்கள். அவர்கள், ''ஓ, படைகளானது சூழ்ந்து கொண்டு வருகிறது. எனவே நாம் இப்பொழுது கர்த்தருடைய வீட்டிற்குள் சென்று ஜெபம் செய்வோம்'' என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் பிந்திவிட்டனர். அது ஒரு இம்மியளவு கூட பலனளிக்கவில்லை. பாருங்கள். 47.ஆனால் இந்த சீஷர்களோ இயேசு முன்னுரைத்த எச்சரிப்பை அறிந்திருந்து, அதன்படி சம்பவிக்கப்போவதை கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்கள் அதனால் தப்பித்துக்கொண்டு விட்டனர். வரலாற்றாளர்கள் இயேசுவின் சீஷர்கள் எவ்வாறு எருசலேமின் அழிவிலிருந்து தப்பித்தக் கொண்டனர் என்பதைக் குறிப்பிடுகையில்,''அந்த நரமாம்சத்தை தின்ற, அதாவது இயேசு என்றழைக்கப்பட்ட வருடைய சரீரத்தை தின்றவர்கள்; அவர்களை இயேசு குணமாக்குவதுண்டு (பாருங்கள், சீஷர்கள் இராப்போஜனம் எடுத்ததை, வரலாற்றாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கி றார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது, அவர்கள் மாம்ச சுபாவமுள்ள மனிதர்தானே, விசுவாசியல்ல, வெறும் வரலாற்றாளர்கள் தான் அவர்கள்) அவர்கள் பூமியின் மேல் வந்த அழிவின்று தப்பினார்கள்'' என்று எழுதியுள்ளார்கள். 48.அவர்கள் தப்பித்த பிறகு, எருசலேம் முழுவதும் அழிக்கப் பட்டதைப் பாருங்கள். இப்பொழுது அது இங்கே பரிபூரணமாக முன் மாதிரியாக இருக்கிறது. அது வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரம். இப்பொழுது கவனியுங்கள். உலகத்திற்குள்ளாக, தீத்து எருசலேமை முற்றுகையிட்ட காலம் தொடங்கி, 1914ம் ஆண்டு வரையிலும் உள்ள இடைப்பட்ட காலத்தில் எப்பொழுதாவது முழு உலகமும் ஒரு பெரிய யுத்தத்தை செய்து கொண்டதாக வரலாற்றில் ஒரு சமயத்தை நானும் காணவே முடியவில்லை. இப்பொழுது கவனமாக கேளுங்கள். இந்த இடத்தில் தான் திருவாளர்ருத்தர் ஃபோர்ட் அவர்கள் தவறான முடிவுக்கு வந்திருக்கிறார். நிச்சயமாக இங்கே தான். இப்பொழுது கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, (இவ்விதமாக அந்நால்வரும் பூமியின் நான்கு மூலைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள்) பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு,(வேதத்தில் காற்றுகள் என்பது “போர், சண்டை ' என்ற அர்த்தத்தை கொடுக்கிறது என்றும், பிசாசானவன் ஆகாயத்தின் அதிகாரப்பிரபு என்பதையும் எவரும் அறிந்திருப்பர்) பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு,ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குத் திசையிலிருந்து (அத்திசையிலிருந்து இயேசுவும் வருவார்) ஏறி வரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப் படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். வெளி.7:1-3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத் தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். 49.தேவனுக்கு நேரம் என்பது கிடையாது, அவர் நித்தியமான வராயிருக்கிறார். நாம் காலக்கணக்குப் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அங்குலங்கள், சதுரங்கள், இத்தனை கல் தொலைவு என்பன போன்றவை தான். ஆனால் தேவனோ நாட்களின் துவக்கமும் முடிவுமில்லாத, நித்தியமான வராயிருக்கிறார், பாருங்கள், அவர் நித்தியமான வராயிருக்கிறார். 1914ம் ஆண்டில் முழு உலகமும் ஜெர்மனியை நோக்கி ஒரு உலக யுத்தத்திற்காக அணி வகுத்துச் சென்றது. ஆம், முழு உலகமும் ஒரு உலக யுத்தத்திற்காக புறப்பட்டன. அங்கே ஒரு வினோதமான காரியம் நடந்ததை நீங்கள் கவனித்தீர்களா? எனது நல் நண்பராகிய இங்கே அமர்ந்திருக்கிற சகோ. வுட் அவர்களின் தந்தையே, நீங்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். பாருங்கள், அவர்கள்.... அவர் யேகோவா சாட்சிகளிலிருந்து மனந்திரும்பியவர் ஆவார். 50.ஆகவே, அவர்கள் யாவரும் யுத்தத்திற்கு புறப்பட்டுச் சென்றார்கள். அது 1914ம் ஆண்டு என்று நன்கு நினைவிலிருக்கும். அவர்களுக்கு இது நாள் வரையிலும், யார் அந்த யுத்தத்தை நிறுத்தியது என்பது தெரியாது என்பது வினோதமாக இல்லையா? (''உலக யுத்தத்தின் வீழ்ச்சி'' என்ற புத்தகத்தின் இரண்டாவது வால்யூமில், 44ம் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். அப்புத்தகத்தின் தொகுதிகள் யாவும் என்னிடம் உள்ளன). கெய்சர்வில் ஹெம், தான் அதற்காக உத்தரவு ஒன்றையும் பிறப்பிக்கவில்லை என்று கூறினார். ஆனால் திடீரென யுத்தமானது நின்று போனது, ஒருவருக்கும் ஏன் நின்று போனது என்பது தெரியாது. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென முன்னணியில் வந்து, அவர்களிடம் கூறினார்கள். “எல்லாம் முடிந்தது, யுத்தம் நின்றது என்று. அவர்கள் ஏற்கனவே சமாதான உடன்படிக்கையில், என்ன நடக்கிறதென்று அறியாமல் கையொப்பம் இட்டிருந்தனர். அவைகள் யாவையும் குறித்து பேச வேண்டுமானால், ஒன்றிரண்டு நாட்கள் பிடிக்கக் கூடும். அவர்கள் அறிந்திருக்க வில்லை. ஆனால் நாம் அதிலுள்ள முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம். தேவன் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்காக, அவரே இதைச் செய்தார். அந்த தூதன் அதை நிறுத்தினான். அத்தூதர்கள் சங்கரிக்கும் ஆயுதங்களை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு சென்றார்கள், ஏன்? முழு உலகையும் அழிப்பதற்காக இன்னொரு தூதன் கூறினார், ''சற்றுப்பொறுங்கள், அதைச் செய்யாதீர்கள், ஏனெனில்,நாம் நமது தேவனுடைய ஊழியக்காரருடைய நெற்றிகளில் முத்திரை போட்டாக வேண்டும்'' என்று. 51.சரியாக, பெந்தெகொஸ்தே எழுப்புதல் உண்டான சமயம் அது. 1906ல் அது துவங்கியது. யுத்தம் 1914ல் துவங்கியது. உங்களில் எத்தனை பேர்கள் அதை அறிவீர்கள்? அந்த பழைய நாட்களை நினைவில் வைத்துள்ள பழங்காலத்து பெந்தெகொஸ்தேக் காரர்கள் யாராகிலும் இங்கே உண்டா? நிச்சயமாக. அக்காலங்களில், பரிசுத்த ஆவியானவர் மக்கள் மேல் விழ ஆரம்பித்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தருக்காக ஜெபித்தார்கள். அதன் துவக்கமாக அக்காலம் இருந்தது. அல்லது இரு காலங்களுக்கும் இடைப்பட்ட காலமாக அது இருந்தது. அவ்வாறு அது பிறந்த பொழுது, உண்மையான சபையானதும் ஏற்பட்டது. அதன்பின்பு, பெந்தெகொஸ்தேயினர் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட், சர்ச்ஆஃப் காட் ஆகிய ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் தங்களுடைய ஸ்தாபன கொள்கைகளுக்குள் சென்று, வழி தவறினர். இப்பொழுது இருக்கிறது போலவே அப்பொழுதும் இருந்தனர். எனவே அது .... நாம் காலத்தின் கடைசியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். யாவும் முடிவுக் கட்டத்தை நோக்கி இறங்கி வருகிறது, யாவும் சரியாக இந்தக் கடைசிக் கட்டத்திற்குள் ஓடிவருகின்றது. 52.இப்பொழுது, இந்த நான்கு... நீங்கள் கவனித்து பாருங்கள், போர் சரியாக பதினோராம் மாதமாகிய நவம்பரில் 11ம் தேதி, பகல் 11ம் மணி வேளையில் நின்று விட்டது. அது சரியாக வருடத்தில் 11ம் மாதம், மாதத்தில் 11ம் நாள், நாளின் 11ம் மணிவேளையாக இருந்தது. அதைக் குறித்து இயேசு என்ன சொன்னார்? முதலாம் மணி வேளையில் ஒருவன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றான். அவனுக்கு 1பணம் கூலியாக கிடைத்தது. கடைசியாக சிலர் வேலைக்குச் சென்றார்கள். அவர்கள் தான் பதினோராம் மணி வேளையில் சென்றவர்கள். அது சரியாக இருக்கிறதல்லவா? அங்கே அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பதினோராம் மணி வேளையில் உள்ளவர்கள். அவர்கள் பிந்தினோர் ஆவர். இப்பொழுது அவர்கள் வருவதற்கு உரிய வேளையாகி விட்டது. அவர்கள் யூதர்கள் மத்தியிலிருந்து உள்ளவர்கள். இப்பொழுது ஒன்று சேர்ந்து ஒரு தேசமாக உருவாகி விட்டார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும், ஈரான் முதற்கொண்டு பல்வேறு தேசங்களிலும் சிதறடிக்கப்பட்டு விட்டார்கள். அங்கே அவர்கள் இருந்த பொழுது, இயேசு பூமியில் இருந்தார் என்பதனை அறியாதிருந்தார்கள்; ஒரு புதிய ஏற்பாடு உண்டு என்பதையோ, அல்லது வேறு எதையுமோ அறியாதிருந்தார்கள். 53.இப்பொழுது நீங்கள் லைஃப் என்ற பத்திரிக்கையில் அவர்கள் தங்கள் சுய தேசத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருப்பதைக் குறித்த படங்கள் பிரசுரித்துள்ளதைப் பார்க்கலாம். ''அத்தி மரம் துளிர் விடுவதை நீங்கள் காணும் போது'' என்று இயேசு கூற வில்லையா? யூதர்கள் எப்பொழுதும் அத்தி மரத்தினால் உவமையாக சொல்லப் படுகிறார்கள். ''இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே, இந்த சந்ததி ஒழிந்து போகாது'' என்று இயேசு கூறினார். இப்பொழுது அவர்கள் ஏற்கனவே தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் ஏற்கனவே ஒரு தேசமாக ஆகி, தங்கள் சொந்த நாணயத்தையும், சொந்தக் கொடியையும் உடையவர்களாக இருக்கின்றனர். அத்தேசம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவள் தன் நாட்டில் குடியேறிவிட்டாள். அவள் ஆயத்தமாக இருக்கிறாள். இப்பொழுது எதற்காக ஆயத்தமாயிருக்கின்றனர்? அவர்களிலுள்ள இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆகிய இஸ்ரவேலர் முத்திரையிடப் படுவதற்காகவே. இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதைப் பற்றிப் பார்ப்போம். நான் உண்மையான யூதர்களைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகின்றேன். அவர்கள் யூதர்கள், வால் ஸ்ட்ரீட்டிலுள்ள எப்பொழுதும் ஏமாற்றி திருடும் கூட்டமாகிய யூதர்களை நான் குறிப்பிடவில்லை. அங்கே தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளும் மிகவும் உண்மையான யூதர்களைப் பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன். (அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள வால் ஸ்ட்ரீட் என்ற இடம் தான் அமெரிக்காவின் பங்குச் சந்தையாகும். உலகின் பெரிய பங்குச் சந்தையுங் கூட. இங்கு யூதர்கள் ஆகிய வர்த்தகளின் ஆதிக்கம் தான் அதிகம் - மொழிபெயர்ப்பாளர்) 54.இப்பொழுது உண்மையான யூதர்கள் மீண்டும் பாலஸ்தீனாவில் கூடி வந்து கொண்டு இருக்கிறார்கள். தீர்க்கதரிசி என்ன உரைத்தானோ, அதே விதமாக, இஸ்மவேலும், ஈசாக்கும் ஒருவர் கழுத்தை ஒருவர் நெறிக்கும் படியான அளவுக்கு அருகருகில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். கடைசி நாட்களில் இவ்வாறு அவர்கள் அங்கே இருப்பார்கள் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள படி, அவர்கள் அவ்வாறே அங்கே வாசம் பண்ணுகிறார்கள். இஸ்மவேல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசம் பண்ணுகிறானென்றால், ஈசாக்கு அதற்கடுத்த தெருவில் இருக்கிற அளவுக்கு மிகவும் அருகருகே அவர்கள் வாசம் பண்ணுகிறார்கள். முகம்மதியர்களும், யூதர்களும்மான அவர்கள், ஒருவருக்கொருவர் எவருக்கும் சொந்தமில்லாத இடத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 55.இப்பொழுது, நாம் பெற்றிருக்கிற இந்த செய்தியோடு அந்தக் காரியம் தொடர்புடையதாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிப் பார்ப்போம். இஸ்ரவேல் என்ற ஒரு நாடு ஏற்படுவதைப் பற்றி கைச்சாற்றிடப்படும் அதே வேளையில், அதேமணி நேரத்தில், அதே நாளில், அதேமாதத்தில் நான் இந்தியானாவிலுள்ள க்ரீன் மில் என்னுமிடத்தில் இருந்தேன். அப்பொழுது அந்த தூதன் அங்கே எனக்கு தரிசனமாகி, இந்த செய்தியோடு என்னை ஊழியக்களத்திற்கு அனுப்பினார். அங்கே அவர் அந்த நதிக்கரையில் என்னை சந்தித்து என்ன நடக்கும் என்று கூறிய பிறகு, அதற்கு பதினோரு ஆண்டுகள் கழித்து, இஸ்ரவேல் தேசமாக உருவாவதற்கான தீர்மானம் கைச்சாற்றிடப்பட்ட அதே நேரத்தில் அவர் எனக்கு தமது உத்தரவைக் கொடுத்தார்.அது யாவும் ஒன்றோடொன்று சம்மந்தப்பட்டுள்ளது. 56.பாருங்கள், கர்த்தருடைய தூதனானவர் இப்பொழுது பூமியில் இருந்து கொண்டு, எங்கும் சுற்றித்திரிந்து, கர்த்தருடைய வருகைக்காக யாவற்றையும் ஆயத்தப்படுத்தக் கொண்டிருக்கிறார். அதே தூதர்கள் தான் சோதோமுக்குள் சென்று, அவர்களுடைய பாவங்களின் கூக்குரல், கேட்டதன்படியே இருப்பதைப் போய் கண்டார்கள். ''எங்களிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிய இறங்கி வந்திருக்கிறாம்'' என்றார்கள். நீங்கள் அதை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? ஒரு தூதன் அங்கே போனான். (ஒரு தூதனானவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமோடு தங்கிவிட்டார்). சோதோம் அப்பால் இருந்தது. இரு தூதர்கள் அங்கே சென்று அவர்களுக்கு பிரசங்கித்து, அச்சிறு குழுவாகிய உறங்கும் கன்னியரை வெளியே கொண்டு வந்தனர். பாருங்கள்? சரி. (ஆனால் ஒரு தூதனானவர் ஆபிரகாமோடு தங்கி விட்டார்). இந்த தூதர்களோ சோதோமில் பிரசங்கித்தார்கள். நவீன பில்லிகிரகாம் மற்றும் உள்ளோரும் அவர்களை வெளியே இழுத்தனர். 57.ஆனால் ஆபிரகாமோடு தங்கிவிட்ட இந்த தூதனானவரோ, தன்னுடைய முதுகு கூடாரத்தின் பக்கமாக திரும்பியிருக்கும்படி நின்று கொண்டிருந்தார். ''ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?'' என்று கேட்டார். அவள் விவாகமானவள் என்பதும், அவன் விவாகமானவன் என்பதும் அத்தூதனுக்கு எப்படித் தெரியும்? அவனுக்கு மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவளது பெயர் என்ன என்றும் அவளுடைய பெயர் சாராள் என்பதும் எப்படி அவருக்குத் தெரியும்? அவருக்குப் பின்புறமாய் அவள் கூடாரத்தில் இருந்தாள். 'நல்லது, நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்தேன்“ என்றார் அவர். ''நான்'' அவர் யாரென்று நீங்கள் கண்டுகொள்ள வில்லையா? ''ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன். அப்பொழுது உன் மனைவியாகிய சாராள் இந்த குழந்தையை பெற்றிருப்பாள்'' என்றார். அவருக்குப்பின்னாக கூடாரத்தின் வாசலில் நின்றிருந்த சாராள் அதைக் கேட்டபோது நகைத்தாள். தூதனானவரின் முதுகுப் புறமானது சாராள் இருந்த கூடாரத்திற்கு எதிராக இருக்கும்படி இருக்க, அவர், ''சாராள் ஏன் நகைத்தாள்?'' என்றார். தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு அவர் கொடுத்த அடையாளத்தைப் பார்த்தீர்களா? சோதோமில்அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளத்தைப் பார்த்தீர்களா? மீண்டும் அங்கே மூன்றுவிதமான பிரிவினர் இருக்கிறார்கள். நாம் மீண்டும் அவர்களை பார்க்கிறோம். நாம் பெற்றிருக்கிறோம். 58.இந்த பெரிய ஊழியக்காரர்கள் எல்லாம், அந்த உலகையெல்லாம் வளைய வந்து கொண்டிருக்கிறார்கள். பில்லிகிரகாம் பரிசுத்த ஆவியைப்பெற்ற பிறகு, இதற்குள்ளாக வர முடியவில்லை. அவருடைய ஊழியகளம் அங்கே தான் இருக்கிறது. அவர் அதை கண்டு கொண்டுள்ளார். தேவனும் அவரை அங்கே தான் வைத்திருக்கிறார். பாருங்கள்? அறிவினால் நிறைந்த அந்த பிரசங்கத்தைக் கொண்டு, இங்கே உள்ளதை அவர் கேட்டிருந்தும் கூட, அவர் சோதோமுக்குள் இருக்கும் உறங்கும் கன்னியருக்கு கிருபை கிடைத்து அவர்களை காப்பாற்றிட முயற்சிக்கிறார். பாருங்கள்? ஆனால் இங்கோ , ஆபிரகாமும் அவனது வகுப்பினரும் இருக்கிறார்கள். “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார். பாருங்கள், அத்தூதர்கள் இப்பூமியில் இருந்து கொண்டு அதே காரியத்தைச் செய்து கொண்டிருப்பார்கள். அதனால் தான் பில்லிகிரகாம் பாப்டிஸ்ட்டுகள் மற்றும் இன்ன பிற சபைகளுக்குள்ளும் சென்று கொண்டிருக்கிறார். அவ்விதமாகத் தான் அவர் செய்தாக வேண்டும். ஜேக் ஷில்லர் மற்றும் ஏனைய பெரிய மனிதர்களைப் பாருங்கள் அவர்கள் எழுப்புதல் பிரசங்கிகள் ஆவர். அவர்கள் மக்களை சுண்டி இழுக்கிறார்கள். எனவே அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர்கள் அங்கே அற்புதங்கள் ஒன்றும் செய்யவில்லை. ஒரு சில காரியங்களை, அதாவது மக்களை குருடாக்குவதைச் செய்தார்கள். அனால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் அவர்களை குருடாக்கிப் போட்டிருக்கிறது, பாருங்கள். வேதம் அவ்வாறு கூறுகிறது. ஆனால் இங்கே நின்றிருந்த இவரோ, ஆபிரகாமுக்கும், அவனுடைய கூட்டத்தாராகிய தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கும் இவ்வடையாளங்களை, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களை செய்தார். 59.1914ல் உலகம் யுத்தத்திற்கு சென்றது. அது முதற்கொண்டு அவர்கள் சமாதானமா யிருக்கவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் சண்டையிட்டுக் கொண்டே யிருக்கிறார்கள். இன்னமும் அவர்கள் அதே காரியத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்? அத்தூதர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்'' ஓ தேவனே, இரக்கமாயிரும்! நான் தரிசனத்தில் கண்ட அம்மகத்தானதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். (முழுவதும் அழிவுக்குள்ளாகின்றது). அது வந்து அழிக்கிறவரையிலும், அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளாதபடிக்கும், இஸ்ரவேல் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று ஒருமித்து கூடுகிற வரையிலும், செய்தியானது இஸ்ரவேலுக்குச் சென்று, பரிசுத்த ஆவியாகிய முத்திரையினால் அவர்கள் முத்திரையிடப்படுகிற வரையிலும், அணுகுண்டுகளையும், யுத்தங்களையும் அத்தூதர்கள் தடுத்து நிறுத்தி பிடித்து வைத்திருக்கிறார்கள். பாருங்கள், புறஜாதியார் மத்தியிலிருந்து அவரது நாமத்திற் கென ஒரு கூட்டம் மக்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு; இந்த காலத்தில் தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதன் பிறகு, இஸ்ரவேல் மட்டுமே, மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் அளவுக்கு செய்தியை பெறுகிறது. தானியேல் அவ்வாறு உரைத்தான். அவர்கள் அவ்வாறு செய்வார்கள், அங்கே அது இருக்கும் என்றும் உரைத்திட்டான். அங்கே 70 வாரங்கள் இருந்தது. ஏழு ஆண்டுகள் யூதர்களுக்கான இரட்சிப்புக்காக விடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அந்த எழுபதாவது வாரத்தின் நடுவிலே அதிபதியாகிய மேசியா, அவர் தான் கிறிஸ்து, வந்திடுவார், அவர் அப்பொழுது சங்கரிக்கப்படுவார் என்று தானியேல் கூறினான். இயேசு மூன்றரையாண்டுகள் பிரசங்கத்தார். அதன்பிறகு அவர் சங்கரிக்கப்பட்டார். அன்றாட பலி அத்தோடு நிறுத்தப்பட்டது. அதை தானியேல் கூறியுள்ளான். சரி. 60.அதன்பிறகு, ஒரு இடைப்பட்ட காலமானது புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் இந்த காலத்திற்குள் வருகிறார்கள். பிறகு, யூதர்களுக்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதியாக விடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொண்டால், நாம் அங்கே சரியாக முடிவு காலத்தைக் குறித்து தெளிவாகப் பார்க்கலாம். (சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம் வரையிலும் தோன்றவேயில்லை. அந்த முடிவின் கட்டத்தில் மோசேயும், எலியாவும் மீண்டும் தோன்றி, யூதர்களுக்கு பிரசங்கிக்கின்றனர். அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட இரு மனிதர்களோ, அல்லது சாட்சாத் அவர்கள் இருவருமோ வருவார்கள். அவர்கள் இருவரும் மரிக்கவில்லை. ஆகவே, அவர்கள் அவர்களை கொன்று விட, அவர்களது சரீரங்கள் சோதோம் என்னப்பட்ட தெருவில் கிடக்கும். அங்கே நமது கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். அது எருசலேமாகும். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜீவன், அதாவது ஜீவ ஆவியானது அவர்களுக்குள் வந்து, அவர்கள் உயிரோடெழும்பி, மேலே எடுத்துக் கொள்ளப் பட்டார்கள். அப்பொழுது மூன்றிலொரு பங்கு பூமியானது வெடித்துச் சிதறியது. அவர்கள் யூதர்கள் மத்தியில் அற்புத அடையாளங்களைச் செய்கிறார்கள். 61.இதோ இங்கே இந்த யூதர்கள் இருக்கிறார்கள். இவர்க எண்டைக்குத் தான் அவர்கள் இருவரும் பிரசங்கிக்க வருகிறார்கள். அந்த யூதர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகிற வரையிலும், உலகத்தினால், அவர்களால் ஒருவரையொருவர் குண்டுவீசி அழித்து, அழிவைக் கொண்டு வர இயலாது; இங்கேயிருக்கிற வேதாகமம் அவ்வாறு கூறுகிறது: அவன் அந்த நான்கு தூதர்களையும் கண்டான். அவர்கள் என்ன பெறப்போகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் பெற்றது போலவே, யூதர்களும் பரிசுத்த ஆவியைப்பெற்றாக வேண்டியதிருக் கிறது. வேதாகமத்தைப் படிக்கிற நாம் யாவரும், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த மனிதன் பரிசுத்த ஆவியானவர் தான் என்பதை உணர்ந்திருக்கிறோம். நல்லது, இங்கே அதே தூதன் தான் பரிசுத்த ஆவியோடு, அதாவது ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலோடு'' மீண்டும் வருகிறார். எபேசியர் 4:30ல், பரிசுத்த ஆவியினால், மீட்கப்படும் நாள் வரையிலும் முத்திரையிடப்பட்டிருக்கிறதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த யூதர்கள் யாவரும் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பிப்போகிற வரையிலும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. சில வாரங்களுக்கு முன்புதான். அவர்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து அவர்களை வகைப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உறுப்பினராக ஆனார்கள். அது ஆயத்தமாக இருக்கிறது. நாம் முடிவுக்கட்டத்திற்கு வந்திருக்கிறோம். யாவும் முத்திரையிடப்பட்டு விட்டது இப்பொழுது. 62.அவர்கள் யூதர்கள் தான் என்பதை இப்பொழுது நிரூபிக்கப் படுவதை கவனியுங்கள். நான் இப்பொழுது இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன். நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். வெளி.7:3 இந்த வெளிப்பாடு சரியானது தான் என்பதை நிரூபிப்பதற்காக, நான்காம் வசனத்தை கவனியுங்கள்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். வெளி.7:4 “இஸ்ரவேலர்” . அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் இப்பொழுது தான் கூடி வந்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் முத்திரையிடப்படும் நாளுக்காக ஆயத்தமாகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ''யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் ; ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்; காத் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் ; ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்; நப்தலி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்;. இவ்வாறு சிமியோன் முதல் பென்யமீன் கோத்திரம் முடிய உள்ள 12 கோத்திரங்களும் முத்திரை போடப்பட்டதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. 12000-ஐ 12ஆல் பெருக்கினால் வருவது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம். அவர்கள் தான் அது. 63.14ம் அதிகாரத்தில் இப்பொழுது பார்ப்பீர்களானால் ஒரு க்ஷணம் கவனியுங்கள். பின்பு, நான் பார்த்த போது, இதோ, சீயோன் மலையின் மேல் ஆட்டுக் குட்டியானவரையும், அவரோடே கூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக் கண்டேன்“ வெளி.14:1 ''சீனாய்மலை'' இங்கே ஆட்டுக்குட்டியானவர் எடுத்துக் கொள்ளப்படுதலை முடித்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். அவர் திரும்பி வந்தபோது, அன்றிரவில் நாம் பார்த்தவிதமாக, யோசேப்பு புறஜாதிகள் யாவரையும் தன்னை விட்டு அப்புறமாக அனுப்பிவிட்டு, தன் சகோதரருக்கு முன்பாக நின்று, ''நான் தான் யோசேப்பு உங்கள் சகோதரன்'' என்றான். அவர்கள் திகைப்படைந்தார்கள். சபைக்கால் செய்தியில் நாம் கேட்டிருக்கிறதை நினைவில் கொள்ளுங்கள். அவர் எப்பொழுது திரும்பி வருவார்? அவருடைய கரங்களை குத்தியவர்கள் கூட பார்த்து, அவரிடம், 'உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்பார்கள் என்று பார்த்தோம். ''என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதினால் உண்டானவைகள்'' என்று அவர் கூறினார். அவர்கள் புலம்பினார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே அழுது அழுது புலம்பினார்கள். ஏனெனில் அவர்கள், இந்த பொல்லாங்கை செய்தோமே என்று குத்தப்பட்டார்கள். அவர்களுடைய மேசியா தேவனேயாவார். யோசேப்பு தன் சகோதரிடம், 'நீங்கள் ஒருவருக்கொருவர் கோபப்பட வேண்டாம். ஜீவனை உயிரோடே காக்கும்படி தேவனே இதைச் செய்தார்“ என்று சொன்னது போல் தேவனும் யூதர்களிடம் அவ்வாறே கூறுவார். புறஜாதியாருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்படி, தேவன் யூதரின் கண்களைக் குருடாக்கினார் என்று வேதம் கூறுகிறது. நாம் தானே அதைப் பெறும்படி, அவரது நாமத்திற்கென ஒரு ஜனத்தை தெரிந்தெடுக்க, புறஜாதிகளிலிருந்து அவரது மணவாட்டியை பிரித்தெடுக்க, தேவன் இவ்வாறு செய்தார். ஓ, அது அழகாக இருக்கிறது. அவ்வாறில்லையா? நிச்சயமாக அவ்வாறே உள்ளது. 64.அங்கே தான் உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் உள்ளனர். மணவாட்டி இதற்குப் பிறகு தான் வருகிறாள் என்பதையும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் மணவாட்டியல்ல என்பதை காண்பிக்கவும், தொடர்ந்து வாசித்துக் கொண்டே போவோம். 7ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து வாசிப்போம். 9ம் வசனத்திலிருந்து வாசிப்போம். ஏனெனில் 8ம் வசனத்தில் பென்யமீன் கோத்திரத்தார் 12000 பேர் முத்திரையிடப் பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளது. இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்த போது, இதோ, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக் காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், (இங்கே தான் மணவாட்டி வருகிறாள்) வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுது கொண்டு, ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென் என்றார்கள். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.'' (பார்த்தீர்களா?) வெளி.7:9-15. 65.உங்கள் மனைவி என்ன செய்கிறாள்? அவள் உங்களுக்கு வீட்டில் பணிவிடை செய்கிறாள். நீங்கள் அமர்ந்திருக்க அவள் உங்களுக்கு உணவு பரிமாறுகிறாள், உங்கள் ஆடைகளை ஆயத்தம் செய்து கொடுக்கிறாள். அவள் இரவும் பகலும் வீட்டில் பணியாற்றுகிறாள். மணவாட்டியாயிருக்கிற இவள், புறஜாதிகளின் ஜாதிகளிமிருந்து வந்தவர்களாவர்; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக, அவரோடு இரவும் பகலும் இருந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரவிலே, நாம் அதின் பேரில் என்ன பேசினோம் என்பதை யாவரும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? ''சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடையவதுமில்லை; இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல்படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியான வரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜிவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். வெளி. 7:15-17 66.இப்பொழுது, அங்கே உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராகிய இஸ்ரவேலர் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். புறஜாதிகளின் நிறைவு உண்டாகிறவரையிலும் அவர்கள் உள்ளே போக முடியாது. புறஜாதிகள் காலம் முடிவடைந்தாக வேண்டும். இப்பொழுது நான் ஒரு சிறிய என் சொந்த விஷயத்தை குறிப்பிடுவேன், அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஸ்வீடனின் தலைநகராம் ஸ்டாக்ஹோமில் உள்ள பிலதெல்பியா சபைகளின் பொதுக் கண்காணிப்பாளர் லேவி பெத்ரஸ் என்பவர் இந்த யூதர்களுக்கு பத்து இலட்சம் பைபிள்களை, அதாவது சிறிய அளவில் உள்ள புதிய ஏற்பாடு புத்தகங்களை அனுப்பிக் கொடுத்தார். அதில் ஒரு பிரதி அவரிடமிருந்து எனக்கு ஒரு ஞாபகச்சின்னமாக அனுப்பப்பட்டிருந்தது. அவர்களுடைய மொழியானது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்கள் பின்னால் இருந்து முன்னாக வாசித்துக் கொண்டு வருகிறவர்கள். அவர்கள் பாஷை அப்படி. அவர்கள் இப்புத்தகங்களை வாசித்து, “நல்லது, இந்த இயேசு தான் மேசியாவெனில், அவர் மரித்து, அவரது ஆவியானது ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறது எனில், அவர் தீர்க்கதரிசிக்குரிய அடையாளத்தைச் செய்து காண்பிப்பதை நாங்கள் பார்க்கட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்'' என்று கூறினார்களாம். என்னே ஒரு பரிபூரணமான அமைப்பு இது நான், ''ஆண்டவரே, இதோ இப்பொழுதே வேளை வந்திருகிறது. இது தான் சமயம், இங்கே அது வந்திருக்கிறது'' என்றேன். எனவே, நானும், பில்லியும், லாய்ஸம் விமானத்தில் பயணமானோம். 67.நான் இந்தியாவுக்குள் சென்றேன், அங்கிருந்து நான் திரும்பப் பிரயாணமாகையில், ''அங்கே இறங்கி யூதர்களுக்கு செய்தியைப் பிரசங்கிப்பேன். 'இதோ இங்கே சத்தியம் இருக்கிறது' என்று அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பேன்“ என்று கூறினேன். யூதர்கள் எப்பொழுதும் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பவர்கள். நாம் யாவரும் அதை அறிவோம். ஏனெனில் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று தேவன் அவர்களுக்கு உரைத்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறார்கள். ''உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி என்று தேவன் கூறினார். அந்த தீர்க்கதரிசி சொல்லும் காரியம் நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுக்க வேண்டும், ஏனிெனல் நான் அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் கூறிய வார்த்தை நிறைவேறாமற் போனால், அந்த தீர்க்கதரிசியை நம்ப வேண்டாம். ஏனெனில் நான் அவனோடு இருக்கவில்லை. ஆனால் அவன் கூறியது நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள். ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். யூதர்கள் அதை அறிவார்கள். 68.“ஓ என்னே ! அது அற்புதமானதாய் இருக்காதா? நான் அவர்களில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் பேர்களை வரவழைத்து, அங்கே நிற்கச் செய்திடுவேன், அவர்கள் வேதாகமத்தை வாசிக்கிறவர்களாக இருக்க வேண்டாம். இது மேசியாவானால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்து காண்பிக்கட்டும் என்று எனக்குள் எண்ணினேன். எனது கையில் டிக்கெட் ஆயத்தமாக இருந்தது. அராபிய விமானக் கம்பெனியின் விமானத்தில் பயணம் செய்வதற்கு பயணம் செய்பவர்களை விமானத்திற்கு வரும்படி அழைத்து முடிக்க இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தன. எனவே நான் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நின்றிருந்தேன். அப்பொழுது நான் எனக்குள், ஓ தேவனுக்கு ஸ்தோத்திரம், இன்னும் இரண்டு மணிநேரம். அப்பொழுது யூதர்கள் முழு நிச்சயத்தோடே பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்றுக் கொண்டதைப்போல் இவர்களும் பெற்றுக் கொண்டதைப்போல் இவர்களும் பெற்றக்கொள்ளப் போகிறார்கள்'' என்று எண்ணி னேன்: மேலும், நான் எனக்குள், 'நீங்கள் போய் ஒரு கூட்டம் ஜனங்களை அழைத்து வந்து, அவர் இன்னமும் மேசியா தானோ என்பதை காணும்படி செய்யுங்கள் என்பேன்“ என்று எண்ணினேன். 'உங்களுடைய முற்பிதாக்கள் எந்த அடிப்டையில் இந்த மேசியாவை புறக்கணித்தார்களோ, அதே அடிப்படையில் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கரங்களை உயர்த்திடுங்கள்; இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள்'' என்று சொல்லுவேன் என்று நினைத்தேன். அப்பொழுது உலகில் அவர்கள் உள்ள பகுதியில் போய் அவர்கள் சுவிசேஷத்தை பரவச்செய்வார்கள். இந்த செய்தியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பொழுது, தலைவர்களைப் பிடியுங்கள். அவர்களின் நாடித்துடிப்பாய் இருக்கின்ற தலைவர்களைத் தொடுங்கள். அவர்கள் இதை துவக்கட்டும்'' என்று சொல்லுவேன் என்று நான் மேலும் நினைத்தேன். 69.அப்பொழுது எனக்குள் ஏதோ ஒன்று, ''இப்பொழுது போகாதே, வேளையானது இன்னமும் வரவில்லை'' என்று கூறியது. பார்த்தீர்களா, புறஜாதிகளின் நாளானது இன்னமும் முடிவடையவில்லை, பாருங்கள். “ஓ, இது என்னுடைய எண்ணம் தான்' என்று அப்பொழுது தான் சிந்தித்தேன். நான் மீண்டும் புறப்பட்டேன், அப்பொழுது, என்னால் தாங்க முடியாத அளவுக்கு எனக்குள் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. நான் விமானம் நிறுத்திவைக்கும் ஷெட்டின் பின்பக்கமாகச் சென்று தலை வணங்கி, 'பிதாவே, நீர் தான் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறீரா?'' என்று ஜெபித்தேன். “இப்பொழுது இஸ்ரவேலுக்குப் போகாதே, வேளையானது இன்னும் வரவில்லை'' என்று அவர் கூறினார். உடனே நான் உள்ளே போய், எனது டிக்கெட்டை மாற்றிக் கொண்டு, வேறு வழியாக போக பாதையை மாற்றினேன். வேளையானது இன்னமும் வரவில்லை என்பதை பாருங்கள். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் செய்தியானது இஸ்ரவேலுக்குப் போகும். தேவன் அவர்களிடமாக மோசேயையும் எலியாவையும், வெளிப் படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி அனுப்பிடுவார். அவர்கள் அற்புத அடையாளங்களைச் செய்து காட்டுவார்கள்; அது யேகோவாவின் அடையாளமாகும். அப்பொழுது புறஜாதிகளின் காலமானது முடிவடைந்திருக்கும். புறஜாதி சபையை விட்டு கிருபையானது அகன்று விட்டிருக்கும்; பெந்தெகொஸ்தே யுகமானது முடிவடைந்திருக்கும். ஸ்தாபனங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் அவர்கள் உறங்கும் கன்னியரோடு எழும்பி வருகிறார்கள்; நாம் சிறிது நேரத்திற்குள் அந்த விஷயத்திற்குள் செல்லுவோம். ஆனால் அவர்கள் அந்த பிரிவில் தான் வருவார்கள். 70.ஆனால் அவர்கள் அதைச் செய்யும் பொழுது, யூதர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவார்கள்; அவர்களுக்கு ஒரு எழுப்புதலுண்டாகி, அது மழை பெய்யாது வானத்தை அடைக்கும் காரியத்தைச் செய்யும். அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். இறுதியாக ரோமானிய குருக்களாட்சியானது... கத்தோலிக்க சபையானது யூதர்களோடு செய்து கொண்டிருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டு விடுவார்கள். அப்பொழுது அங்கே... அவர்கள் தங்களுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தமானது. அவர் அங்கே செல்லுவார். தேவன் ஆதி நாட்களில் இஸ்ரவேலுக்காக யுத்தம் செய்தது போல, நின்று அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர்கள் முடிவில், அந்த இரு தீர்க்கதரிசிகளையும் கொன்று விடுவார்கள். அவர்கள் தெருவில்கிடப்பார்கள். அவர்கள் மேல் துப்புவார்கள். சிலவாரங்களுக்கு முன்பாக, அங்கே அந்த பெந்தெகொஸ்தே ஊழியக்காரரையும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் கொன்று போட்டது போல் நடக்கும். அப்பிள்ளைகளின் சிறிய வயிறு மிகவும் பெரிதாக உப்பிப்போயிற்று. மக்கள் அப்பிரேதங்களின் பக்கமாக நடந்து சென்று, அவர்கள் மேல் துப்பி, அவர்களது உடல்கள் அடக்கம் பண்ணப்படாமல், அப்படியே மூன்று அல்லது நான்கு நாளாக வெயிலில் கிடந்தன. அதே காரியத்தையே அவர்கள் செய்வார்கள். வேதம் அவ்வாறு கூறுகிறது. அங்கே சரியாக இதே காரியத்தை அவர்கள் செய்வார்கள். அவர்கள் அவர்களைக் கொலை செய்யும் பொழுது, மூன்று நாட்கள் அவர்கள் பிரேதங்கள் வீதிகளில் கிடக்கும் பொழுது, ஜீவ ஆவி இரு தீர்க்கதரிசிகளுக்குள் பிரவேசித்து அவர்கள் எழுந்து நின்று, மகிமைக்குள் ஏறிச்செல்வார்கள். பிறகு, ஏறக்குறைய அதே வேளையில் தான் வெடி வெடிக்க ஆரம்பிக்கிறது. அதுதான் கடைசி நேரம். அப்பொழுது தான் அவள் முடிந்துபோவாள். 71.ஆனால் அது சம்பவிப்பதற்கு முன்பாக, புறஜாதிகள், தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி... அங்கே உங்களில் சிலர், இக்காலைகளில் ஒன்றில் மேசையருகே அமர்ந்திருப்பீர்கள். அதில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், இன்னொருவர் கைவிடப்படுவார். முடிவாக நீங்கள் அதிசயப்படுவீர்கள், 'இது என்ன விஷயம் என்று. ஒரு மோட்டார் வாகனத்தை உங்கள் மனைவியோடோ அல்லது உங்கள் கணவனோடோ பேசிக்கொண்டே ஒட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கக் கூடும், நீங்கள் கேட்பதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் திடீரென அங்கு இருக்கமாட்டார்கள். கல்லறைக்கு ஓடிச் செல்வீர்கள், சில கல்லறைகள் திறந்திருக்கும், வேறு சில இன்னமும் அப்படி மூடியே கிடக்கும். ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை''. அப்படியே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அது அப்பொழுது முடிவடைந்திருக்கும். 72.அது ஒரு இரகசிய வருகையாக இருக்கும், அது எப்பொழுது சம்பவிக்கப் போகிறது என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள். நாம் ஆயத்தமாகவும் விழிப்புடனும் இருக்கும்படி கட்டளையிடப் பட்டிருக்கிறாம். எந்த மணிவேளை என்பதை நாம் அறியோம். ஆனால் அது என்னவாயிருந்தாலும் சரி, கடந்த காலத்தில் மரித்தவர்களுக்கு நாம் முந்திக் கொள்வதில்லை. இயேசு தோன்றியதுமே, முழு ஜாமமும் விழித்தெழுகிறது. மரித்தவர்களோ, உயிரோடிருக்கிறவர்களோ, யாராயிருந்தாலும் சரி. முதலில், நாம் அவரை சந்திப்பதில்லை. நாம் ஒருவரையொருவர் முதலில் சந்திப்போம். வேதம் கூறுகிறது எபேசியர் 5-தாம் அதிகாரம்,“கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்த வர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. தங்களுடைய சாட்சிகளை தங்களுடய இரத்தத்தினால் முத்திரையிட்ட அந்த விலையேறப் பெற்ற மக்கள். ''நித்திரையடைந்த வர்களை நாம் முந்திக் கொள்வதில்லை. ஏனெனில்.... எக்காளம் தொனிக்கும் அப்பொழுது ஒன்று சம்பவிக்கும். சுவிசேஷத்தின் ஏதோ ஒன்று தொனிக்கும். அது தானே அவருடைய வருகையை அறிவித்தலாகும். ''கிறிதுவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிரோடு எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் காத்திருக்கும் நாமும் மருரூபமடைவோம். ஒரு க்ஷணத்தில் ஒரு இமைப்பொழுதில், நாம் மறுரூபமடைவோம், சுருக்கங்கள் மறைந்து போகும். நரைமயிர் நீங்கிவிடும், ஒருமாற்றம் ஏற்படுவதை நாம் நன்கு உணருவோம். நாம் நின்று கொண்டிருக்கையில், நமக்குப் பிரியமானவர்களை முதலில் நாம் சந்திப்போம். ''அதோ அங்கே அம்மா இருக்கிறார்கள், அப்பா இருக்கிறார்கள், அதோ அங்கே என்று பிரிய சிநேகிதன் இருக்கிறான். ஓ, அல்லேலூயா, நாம் ஆயத்தமாக இருக்கிறோம்'' என்று சொல்லுவோம். மரித்துயிர்த்து அவர்களோடு கூட நாம் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை சந்திப்போம் என்று வேதவாக்கியம் கூறுகிறது. இதுவே வருகையின் ஒழுங்காகும். 73.ஓ, எனக்கு வயது சென்ற தந்தையை காண்பது எவ்வளவு நன்றாயிருக்கும்! ஓ, என்னே! விசுவாசத்தோடு மண்ணுக்குள் சென்ற நமக்கு மிகவும் பிரியமானவர்களை சந்திப்பது எவ்வளவு அருமையாயிருக்கும் தேவனுடைய இனிமையைப் பாருங்கள். அவரை முதலில் நாம் சந்திப்போமானால், 'அம்மா அங்கே இருக்கிறார்களா, அம்மா கடைசியாக அதை அடைந்தார்களா? அவர்களுக்கு மிகவும் உறுதியாக பிரசங்கித்தோம், நாம் முயற்சி செய்தோம்; அவர்கள் இங்கு இருக்கிறார்களா? ஜா அங்கிள் இங்கு இருக்கிறார்களா? சகோதரன் இன்னார் இங்கு இருக்கிறாரா?'' என்றெல்லாம் நாம் கேட்போம் என்று அவர் அறிந்தே இருக்கிறார். ''கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், உம்மை நேசிக்கிறோம், ஆனால்...'' என்று கேட்போம். முதலாவதாக நாம் ஒருவரையொருவர் சந்திக்கப் போகிறோம். ஓ, ஓ, ஓ . அவர்கள் அங்கு இருக்கிறார்களா என்று நாம் வியக்கத் தேவையில்லை. நாம் யாவரும் அங்கே இருக்கிறோம். அவர்கள், “ஆமென், மகிமையும், ஞானமும், கனமும், வல்லமையும், பெலனும் உண்டாவதாக” என்று கூறியது ஆச்சரியமல்ல. இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் கிரீடங்களை கழற்றி விட்டு, தரையிலே வணக்கமாய் விழுந்து, அவர்கள் யாவரும் தரையிலே விழுந்து கிடந்து, அவரைத் தொழுது கொண்டனர். 74.இந்நாட்களில் ஒன்றில் நாம் பூமிக்கு அப்பால், பூமியின் வளையத்திற்கு அப்பால், எங்கோ ஆகாயத்தில் நிற்போம். அப்பொழுது நாம் இன்னமும் பரலோகத்தில் போய் விடமாட்டோம்; நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். ரெபெக்காள் விரைவாக தீர்மானித்தாள். தான் ஈசாக்கை சந்திக்க எலியேசருடன் ஒட்டகத்தின் மேலேறி செல்வோம் என்று அவள் தீர்மானித்த பொழுது, தனக்கு கணவனாக ஆகப்போகிற ஈசாக்கின் முகத்தை அவள் இதற்கு முன் பார்த்ததேயில்லை. ஆயினும் தேவன் அவளை அவனிடம் நடத்திக் கொண்டு இருந்தார். மாலையின் குளிர்ச்சியான வேளையில், ஈசாக்கு வயல்வெளிகளில் போவதற்காக போய்க் கொண்டிருந்தான். அது மாலை வேளையாயிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது ரெபெக்காள் ஒட்டகத்தின் மேலேறிவந்து கொண்டிருக்கிறாள். எலியேசர் அவளிடம், ''இதோ அவர் வருகிறார்'' என்று கூறினான். அப்பொழுது ரெபெக்காள் ஒட்டகத்தை விட்டிறங்கி, தன் முகத்தின் மேல் இருந்த முக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவள் இதற்கு முன் அவனைப் பார்த்ததே கிடையாது. அறிந்திருக்கவில்லை.... அவன் தான் அவளுடைய கணவன் என்று, அவனை இதற்கு முன்பார்த்ததே கிடையாது. அவள் அவனை விசுவாசத்தினால் சந்திக்க போவதாக இருந்தாள். (அவர் எப்படி தோற்ற மளிப்பார் என்பதை நான் அறியேன், ஆனால், ஓ, அவரை நான் சந்திக்கும் பொழுது!) அவனை அங்கே வெளிகளில் அவள் சந்தித்த பொழுது, அது கண்டதும் காதலாக மலர்ந்தது. அவனும் அவளை இதற்கு முன்பு கண்டதில்லை. அவன் கண்டபோது, அது கண்டதும் காதலாக மலர்ந்தது. இங்கே இவர்கள் ஒருவரையொருவர் வெளிகளிலே சந்திக்க வருகிறார்கள். அவன் அவளைத் தன் தந்தையின் இராஜ்யத்தினுள் கொண்டு வந்து அவளை விவாகம் செய்து கொண்டாள். 75.அதேவிதமாகத் தான், கர்த்தர் கீழே இறங்கி வருகிற வழியிலே, அவரை மத்திய ஆகாயத்திலே, சபையானது ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சந்திக்கும். ஓ, அது எப்பேர்ப்பட்ட உறவாக இருக்கும், கண்டதும் காதலாகத் தான் இருக்கும். நாம் பூமியின் வளையங்களிலே நின்று கொண்டிருக்கும் பொழுது, அந்த மீட்பின் பாடல்களைப் பாடும் போது, அது எப்படியாயிருக்கும்! ஓ, என்னே எப்படியாய், நாம் நமக்கு அவர் அளித்த நம்மை மீட்கும் கிருபையைக் குறித்து, அவரைப் பாடித் துதிப்போம். பூமியின் வட்டத்தை, தலை வணங்கியவாறு, தூதர்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருக்கையில், நாம் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி அறியாமலிருப்பார்கள். அத்தூதர்கள் இழக்கப்படவில்லை. இரட்சிக்கப்படுவது என்றால் என்ன என்பதை அத்தூதர்கள் அறியமாட்டார்கள். நாம் தான் இழக்கப்பட்டோம். நாம் தான் அவ்வாறிருந்தோம். அப்பொழுது, எவ்வளவு பயங்கரமான காரியம் நமக்கு முன்பாக இருந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்வோம், அவரோ நம்மை சகல கோத்திரங்களிலும், பாஷைக் காரரிலும், ஜாதிகளிலும் இருந்து தம்முடைய இரத்தத்தினாலே மீட்டார். ஓ, அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி கொண்டாடுதலான நாளாயிருக்கும்! 76.நான் அப்பாடலை விரும்புகிறேன். ஆகாயத்தில் ஆனந்த சந்திப்பொன்றுண்டு. இனிமையாய், இனிமையாய், ஈற்றிலே நான் வான்வெளிக்கப்பால் உள்ள வீட்டிலே உன்னை சந்தித்து வாழ்த்துவேன். அழிவுள்ளோர் காதுகளில் கேட்டிராத பேரின்ப கீதம் பாடுவோம். அது மகிமையாயிருக்கும், நான் அறிவிக்கிறேன், தேவனுடைய சொந்தக் குமாரன் நடத்திச் செல்லுவார் ஆகாயத்தில் நாம் அவரை சந்திக்கையில். முட்செடியருகே நின்ற மோசேயையும் வீர தாவீதையும் அவன் கவணையும் சொப்பனம் காணும் யோசேப்பையும் குறித்து அறிந்துள்ளீர். தானியேலும் சிங்கக்கெபியையும் பற்றி எப்போதும் பாடுகிறோம். ஓ, இன்னும் இவ்விதமான அநேகர் வேதத்திலுண்டு. அவர்கள் யாவரையும் காண நான் வாஞ்சிக்கிறேன் என்று அறிவிக்கிறேன் (அது சரிதான்) அவர்களை சந்திப்பது எவ்வளவாய் ஆனந்தமாயிருக்கும் அது ஆகாயத்தில் சந்திக்கும் போது நடக்கும் (அந்நாளுக்காக காத்திருக்கிறேன்!) 77,அதோ அங்கே உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் வருகிறார்கள். அவர்கள் பிறகு சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வார்கள். புறஜாதிகள் மேல் ஒளியானது வீசிக் கொண்டிருக்கையில், அதே வேளையில் அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. யூதர்கள் அதை மறுதலித்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, ஒளியானது. புறஜாதியார் எடுக்கப்பட்ட பிறகு, ஆவியானவர்அவர்களுக்கு சாட்சி கொடுக்கும்படி இருவர் மேல் வருகிறார். அப்பொழுது யூதர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தான் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களாவர். அவர்கள் காணாமற் போன இஸ்ரவேல் வீட்டார். அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்பொழுது மணவாட்டியானவள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள். 78.அங்கே பத்து கன்னியர் காணப்படுகிறார்கள். நாம் மத்தேயு எழுதின சுவிசேஷம் 21ம் அதிகாரத்தை இப்பொழுதே எடுத்துக் கொள்வோம். பாருங்கள், நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஓ, நான் வேதாகமத்தை நேசிக்கிறேன். எனது இளைப்பாறுதலை நான் பரலோகத்தில் எடுக்கையில், அது என்னே ஒரு அருமையான பயணமாயிருக்கும்! அங்கே பரலோக இசைக்குழு இசைக்கும் பாடல் இசையை நான் கேட்பேன் எனது இரட்சகரின் முகத்தை நான் காண்பேன். நித்திய பசுமை மரத்தின் கீழ் நதியின் கரையில் அமர்ந்து, எனது இளைப்பாறுதலை பரலோகத்தில் கழிக்க நான் வாஞ்சிக்கிறேன், நீயும் உனதிளைப்பாறுதலை கழிக்க என்னுடன் வாராயோ? 79.இப்பொழுது, மத்தேயு எழுதின சுவிசேஷம் 25ம் அதிகாரம் என்று நம்புகிறேன். நான் 21ம் அதிகாரம் என்று கூறினேனல்லவா? நான் இங்கே 21ம் அதிகாரம் என்று குறித்து வைத்துள்ளேன். ஆனால் அது தவறு. அது 25ம் அதிகாரம் தான். நான் இக்காலையில் சற்று விரைவாகச் செல்ல வேண்டும். நான் களைப்பாக தாமதித்து எழுந்தேன். எனவே நான் அவசரம் அவசரமாக சில வேதவாக்கியங்களை குறித்து வைத்துக் கொண்டதில், 25க்குப் பதிலாக, 21ம் அதிகாரம் என்று குறித்து வைத்துவிட்டேன். அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். இப்பொழுது அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களு மாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங் கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத்தாமதித்த போது, (அது சபைக் காலங்களிலே) அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 80.காலம் முழுவதிலும், அவர்கள் யாவரும் மரித்தனர், நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். தாங்கள் மரித்ததாக அவர்கள் கூறவில்லை. ஆனால் அவர்கள் “நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்''. பார்த்தீர்களா? நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்தக் கன்னிகைள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போன போது மணவாளன் வந்து விட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள். (இப்பொழுது, அவர்கள் அவிசுவாசிகள் அல்லவென்பதைப் பாருங்கள். அவர்கள் நல்லவர்கள் தான்) அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 81.இப்பொழுது இந்த ஐந்து புத்தியுள்ள கன்னியர். வேதத்தில் எண்ணெயானது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. நாம் யாவரும் அதை அறிவோம். எனவே தான் நாம் வியாதியஸ்தரை எண்ணெய் பூசி ஜெபிக்கிறோம். எனவே புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தார்கள். அது பரிசுத்த ஆவியாகும். எனவே அவர்கள் கலியாண விருந்துக்குள் பிரவேசிக்கத் தக்கதாக ஆயத்தமாயிருந்தார்கள். நான் எசேக்கியேல் 9ம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நான் இங்கே சுமார் பதினைந்தும் அதற்கு மேலுமாக வேதவாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன். எனவே எண்ணெயானது. இந்த வாரத்தில் நடந்த வகுப்பில், எண்ணெயானது ''பரிசுத்த ஆவியைக் குறிக்கும் என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம் என்று நம்புகிறேன். நாம் யாவரும் அதை அறிவோம். 82.இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் இருசாராருமே கன்னியர் தான். இதை நான் இப்பொழுது எடுத்துக் கொள்கிறேன். இங்கே நாம் இந்த இரு சாராரையும் பற்றிப் பார்த்துவிடுவோம். இது ஒரு கன்னிகை, அது ஒரு கன்னிகை இது புத்தியுள்ள கன்னிகை, அது புத்தியில்லாத கன்னிகை, ஆனால் இருவருமே கன்னியர் தாம். கன்னிகை என்ற அந்த வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு அதன் அர்த்தத்தை நீங்கள் ஆராய்ந்தால், “பரிசுத்தமாக, சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட'' என்ற அர்த்தங்களை தருகிறது. 'பரிசுத்தமாக்கப்பட்ட' என்ற வார்த்தை , ”பரிசுத்தவானாக்கப் பட்ட' என்பதிலிருந்து வருகிறது, அது ''சுத்தமான'' என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. எபிரெய வார்த்தையைப் போல..... கிரேக்க மொழியில், “பரிசுத்தமாக்கப்பட்ட' என்பது, ''சுத்தமான'' என்று அர்த்தமாகிறது. எபிரெய பாஷையில் ''பரிசுத்தமாக்கு” என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? நமக்கு சுத்தமான'' என்று இருக்கிறது. நாம் மூன்று வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறோம், மூன்றுக்குமே ஒரே அர்த்தம் தான் உண்டு. ஆனால் அது வேறுபட்ட வார்த்தைகளாக கூறப்பட்டுள்ளது. 'சுத்தமுள்ள, பரிசுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட'' ஆகிய மூன்று வார்த்தைகளையும் போல். மூன்றுமே ஒரே வார்த்தை தான். 83.நாய் என்ற (Dog) வார்த்தையைக் குறித்து சொன்னால் ஆங்கிலத்தில் நான் அதை Dog என்று கூறுவேன். ஜெர்மானிய பாஷையில் அது 'ஹண்ட்' (Hund) என்று உள்ளது. அது சரிதானே? சகோதரன் நார்மன் அவர்களே, ஸ்பானிஷ் பாஷையில் நாய்க்கு, ''அஜோ' (Aj0). “அஜோ, ஹண்ட், நாய்'' என்றும் நாயைத் தான் குறிக்கிறது. எனவே அது ஒரு சொல் தோற்றம் தான். எனவே “சுத்தமான'' என்பதற்குரிய சொல் கிரேக்க மொழியில் ''பரிசுத்தமாக்கப்பட்ட'' என்ற அர்த்தத்திலும், எபிரெய பாஷையில், ''பரிசுத்தமான” என்ற அர்த்தத்திலும் உள்ளன. 'பரிசுத்தமான, சுத்தமான, பரிசுத்தமாக்கு' ஆகிய இவையாவும் ஒரே வார்த்தை தான். எனவே இது அசுத்தமான, அழுக்கடைந்த சபை அல்ல. அது பரிசுத்தமாக்கப்பட்ட, சுத்தமான சபையாகும். பத்து கன்னியர் மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுப் போனார்கள். அதன்அர்த்தம் என்ன? இந்த சபைகள் யாவும்.... இங்கே இந்த ரோமன் சபையில் அல்ல. ஆனால் ஏனைய ஸ்தாபனங்களில், நிக்கொலாய் மதஸ்தரில் பாப்டிஸ்ட்டுகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள். ப்ரெஸ்பி டேரியன்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள். நசரேய சபைக்காரர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள். யாத்திரை பரிசுத்தம் சபையார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள். அது சரிதானே?அவர்கள் யாவருமே மணவாளனை சந்திக்கப் புறப்பட்டார்கள். 84.அவர்கள் ஒவ்வொரு வரும் மணவாளனை சந்திக்கும்படி போய்க் கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் அதை கனம் பண்ணியிருந்தால், அப்பொழுது அவர்களையும் அவர் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். சபைக் காலங்களின் செய்தியில் அதே விஷயத்தை தேவன் நம்மோடு அன்று இரவில் பிலேயாமின் உவமையைக் குறித்து, அதாவது “பிலேயாமின் உபதேசம்' என்பதைப் பற்றி பேசியதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? இங்கே பிலேயாம் நின்று கொண்டிருக்கிறான். அது அருமையான, மகத்தான, பெரிய ஸ்தாபிக்கப்பட்ட தேசமாயிருந்தது. அவர்கள் தேவனில் விசுவாசம் கொண்டவர் களாயிருந்தார்கள். ஏனெனில் பாலாக் வந்தபோது என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். அல்ல, பிலேயாம் வந்த போது, என்ன செய்தான் என்று பாருங்கள். பிலேயாம், இஸ்ரவேலர் வணங்கிய அதே தேவனுக்கு, யேகோவாவுக்கு, அதேவிதமான பலிகளைச் செலுத்தினான். அவன் ஏழு பலிபீடங்களை உண்டாக்கினான். ஏழு என்ற எண் தேவனுடைய பூர்த்தியான, முழுமையான எண்ணாக இருக்கிறது. 85.'அவர் ஆறு நாட்கள் கிரியை செய்தார், ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். ''ஏழு என்பது பூர்த்தியடைந்ததைக் குறிக்கிறது, பாருங்கள். இவ்வுலகில் அவர் ஆறு நாட்கள் வேலை செய்தார். முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோது, உலகமானது தண்ணீரால் அழிக்கப்பட்டது. இரண்டாவது இரண்டாயிரமாண்டில் கிறிஸ்து வருகிறார்; இப்பொழுது இது மூன்றாவதான இரண்டாயிரம் ஆண்டுக்காலம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரண்டாயிரம் ஆண்டுகளின் முடிவில் முக்கியமான ஒன்று சம்பவித்திடுகிறது; அப்பொழுது உலகமானது மீண்டும் ஒரு தடவை அசைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுக் காலத்தில் அவர் உலகை கட்டினார். ஆறாயிரம் ஆண்டுக்காலம் சபையானது உலகுக்கு எதிராக பாடுபடுகிறது; அதன்பிறகு ஏழாயிரமாண்டு தான், ஆயிரவருட அரசாட்சிக்காலமாகிய ஆயிரமாண்டுக் காலமாகும். அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது சபைக்குங்கூட ஏழு சபைக்காலங்கள் உண்டாயிருக்கிறது. தேவன் .... அதுதான் சபைக் காலங்களின் முழுமையான பூர்த்தியான எண்ணாக இருக்கிறது. அவையாவும் ஏழாக இருக்கிறது. ஏழு என்ற எண் தேவனுடைய பூர்த்தியான முழுமையான எண்ணாக இருக்கிறது. ஏழு சபைக்காலங்கள், சிருஷ்டிப்பின் ஏழாயிரம் ஆண்டுக்காலங்கள், யாவும் ஏழு என்ற எண்ணில் தான் அமைந்துள்ளன. 86.அங்கே கன்னிகைகள் அவரைச் சந்திக்கும்படி புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால் புத்தியில்லாத கன்னியரிடம், அவர்கள் விளக்குகளில் எண்ணெய் இல்லை, ஆனால் அவர்கள் மற்ற யாவையும் உடையவர்களாக இருந்தார்கள்; அவர்கள் சுத்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவிலே விசுவாசங் கொண்டவர்களா யிருந்தார்கள். தங்கள் ஸ்தாபனங்கள் அவர்களை பிரசங்கிக்க அனுமதித்த வார்த்தையை அவர்கள் பிரசங்கித்தார்கள். இரண்டாம் வருகையைப் பற்றியும், பாவ நிவாரண பலியைக் குறித்தும் அவர்கள் பிரசங்கித்தார்கள். அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஒரு நல்ல பாப்டிஸ்ட் வேதபண்டிதர் ஒருவரோடு எப்பொழுதாவது நீங்கள் விவாதிக்க நேர்ந்தால், நீங்கள் அவரோடு பேசும் விஷயத்தைக் குறித்து சரியானபடி அறிந்து வைத்திருங்கள். நிச்சயம் நீங்கள் அப்படி செய்துதான் ஆகவேண்டும். 87.இப்பொழுதே மத்தேயு 24:24-ஐப் படித்துப் பாருங்கள்; அப்பொழுது அது மிகவும் நெருக்கமாக உள்ளதை நீங்கள் காணலாம். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, இக்கடைசி நாட்களில் இரு ஆவிகளுமே மிகவும் நெருக்கமாக ஒத்துக்காணப்படும் என்று இயேசு கூறியுள்ளார். அது மிகவும் ஒத்திருப்பது போல் இருக்கும். அது பெந்தெகொஸ்தேயினரையும் கூட சுழன்றிடச் செய்துவிடும். நிச்சயமாக. மத்தேயு 24-24-ஐ யாராவது எடுத்துவிட்டீர்களா? எனக்கு அங்கே கிடைக்கவில்லை. சகோதரி உங்களுக்கு கிடைத்துவிட்டதா? அல்லது வேறு யாருக்கும் கிடைத்ததா? மத்தேயு 24, கிடைத்ததா? பென்? நல்லது, படியுங்கள். (ஒரு சகோதரி பின்வரும் வசனத்தை வாசிக்கிறார்கள் - ஆசி.) “ஏனெனில் கள்ளக்கிறிஸ்தவர்கள் எழும்புவார்கள்...'' கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்”. 'கள்ளக் கிறிஸ்துக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள்'. அங்கே தான் விஷயம் இருக்கிறது. என்ன எழும்பப் போகிறது? 'நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டு கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்புவார்கள். ''நான் இன்னார், இன்னார் என்று கள்ளத் தீர்க்கதரிசிகள் கூறிக் கொள்வார்கள். கூடுமானால்,தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கூட ஏறக்குறைய வஞ்சிக்கப் பார்ப்பார்கள். அதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட ஒரேயொரு வழி தான் உண்டு. நீங்கள் உலகத்தோற்றத்திற்கு முன்னால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தால் தான் இயலும். அது முன்னறிவினால் நீங்கள் தெரிந்து கொள்ளப்படுதலினால் உண்டாவதாகும்; உங்களது பெயர் அப்பொழுது புத்தகத்தில் எழுதப்பட்டிருத்தலினால் அது உண்டாகிறது. “பெரிய அடையாளங்கள்''. 88.அங்கே இரு சபைகளைக் குறித்துப் பாருங்கள். இதைக் குறித்து மக்கள் கண்டுணரச் செய்ய என்னால் கூடுமானால்.... என் ஆத்துமாவில் அவ்விஷயம் கொழுந்து விட்டு எரிகிறது. இச்சபைகள் உண்மையான சபையைப் போலவே, சுத்தம் உள்ளதாகவும், பரிசுத்தமானதாகவும் உள்ளன. இவர்கள் யாவரும் கன்னியர் என்றால், அவர்களும் கன்னியர் தான். அதேபோலவே சுத்தமாயிருக்கின்றன. இருசாராருக் கிடையேயுள்ள ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், இவர்களுக்கு விளக்கில் எண்ணெய் ஆகிய பரிசுத்த ஆவி உள்ளது. பரிசுத்த ஆவியானது அங்கே இருக்குமெனில், அது பெந்தெகொஸ்தே நாளில் உண்டான அதேவிதமான அக்கினியைத் தான் இங்கேயும் உண்டாக்குகின்றது. ஆனால் அவர்களுக்கோ தங்கள் விளக்கில் அக்கினியோ, எண்ணெயோ இல்லை. அவர்களுக்கு சபைச் சடங்காச்சாரம் தான் உள்ளது. முடிந்த அளவுக்கு சபையானது பார்க்க சம்பிரதாயங்களைக் கொண்டதாகத் தான் இருக்கிறது. அருமையான வைப்வங்கள் அவர்களுக்கு உண்டு. (அதற்கெதிராக ஒன்றுமில்லை). சமயாசார கோட்பாடுகள் அங்கே உண்டு; அது உங்களது மனச்சாட்சியைக் கூட அசைத்திடுகிறது. தூதர்களைப் போல் பாடல்கள் பாடுதல் இதெல்லாம் அவர்களிடம் உண்டாயிருக்கின்றன. அவர்கள்... உங்களால் அவர்களுடைய ஜீவியத்தின் மேல் குற்றஞ்சொல்ல முடியாது. ஆயினும் அது தவறாயிருக்கிறது. அவர்களுடைய காரியங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறதேயல்லாமல், முழுமையான வார்த்தையாக அது இல்லை. அவ்விதமான ஒரு கூட்டத்தினர் தான் எடுத்துக் கொள்ளப்படுதலில் கைவிடப்படுகிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள்.... 89.இப்பொழுது கவனியுங்கள். இங்கே மோவாப் வருகிறது. நான் அதன் விஷயத்தை இப்பொழுது எடுத்துக் கொள்கிறேன். அதினால் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். இதோ இங்கே மோவாப் ஒரு பெரிய ஸ்தாபனமாக இருக்கிறது. அதை நான் இங்கே ஸ்தாபனத்திற்கு சாயலாக உதாரணமாக வரைகிறேன். ஸ்தாபனமில்லாத சபைக்கு அடையாளமாக இஸ்ரவேலை இங்கு வரைகிறேன். இதோ இங்கே மோவாபிடம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்த, ஆறு மற்றும் ஏழு பலிபீடங்கள் உள்ளன. இஸ்ரவேலும், ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பலிபீடங்கள் உண்டாக்கினார்கள். அது சரி. மோவாப் தான் உண்டாக்கின ஏழு பலிபீடங்களின் மேலும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு காளைகளை செலுத்தினது. இஸ்ரவேலும் தனது ஏழு பலிபீடங்களின் மேல், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு காளைச் செலுத்தினது. ''ஒரு சமயம் உண்டாயிருக்கும், அப்பொழுது மனிதனாகிய ஒருவர், கிறிஸ்து, பூமியின் மேல் வருவார்; அவரே சர்வ லோகத்தின் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியாயிருப்பார்; எனவே நாங்கள் ஏழு செலுத்தியுள்ளோம்'' என்று மோவாப் கூறினது. (என்ன?)“ பலிபீடத்தின் மேல் ஆட்டுக்குட்டிகள்'. இஸ்ரவேலும் கூறியது, அது மிகவும் சரிதான், பலிபீடத்தின் மேல் ஏழு ஆட்டுக் குட்டிகள்' பாருங்கள்? 90.இப்பொழுதும், ஆதியிலேயே கூட, காயீன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதின்மேல் பலி செலுத்தி, தொழுது கொண்டு, ஆபேல் செய்த யாவற்றையும் இவனும் செய்தான்; ஆனால் தேவனைப் பற்றிய வெளிப்பாடு இல்லாமல் தான் அவையாவையும் காயீன் செய்தான். ஓ, அதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! ஆனால் தேவனுடைய சபையோ, வெளிப்படுத்துதலின் மேல் கட்டப்பட்டுள்ளது. இயேசு அவ்வாறு தான் கூறினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்றார். இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய சத்தியம் ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தலின் மேல்... ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.'' இப்பொழுதும், தேவன் உங்களுடைய சடங்காச்சாரங்கள், கோட்பாடுகள், இவைகளைத் தான் மதிக்கிறார் எனில், அவைகளைச் செய்கிறவர்கள், மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் மற்றும் இன்ன பிற சபையினர் தான்; அவர்கள் உங்களிடம் அதைத்தான் செய்யும்படி எதிர்பார்க்கிறாரென்றால், அத்தோடு இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கித்தும் மற்றும் இன்னபிற காரியங்களையும் பிரசங்கித்து, (அது நிச்சயமாக வேதபூர்வமானது தான்); பாப்டிஸ்ட்டுகளும், ப்ரெஸ்பி டேரியன்களும் இவைகளைச் செய்கிறார்கள்; அப்பொழுது, இருசாராரையுமே எடுத்துக் கொள்ள அவர் கடமைப் பட்டவராயிருக்கிறார்; ஏனெனில் அவர் அதைத் தான் எதிர்பார்க்கிறார் என்று ஆகிவிடும். ஆனால், பார்தீர்களா, தூங்கிக் கொண்டிருக்கிற கன்னிகை வெளிபாடு இல்லாமல் இருக்கிறாள்; புத்தியுள்ள கன்னிகையோ அப்படி அல்ல. அவர்களோ ஒரு ஸ்தாபன மாகவும் மிகப் பெரிய ஜாதியாகவும் இருப்பார்கள். 91.அன்றொரு இரவில் நாம் வாசித்த போது, வார்த்தை கூறியது, அவர்கள் ஒரு ஸ்தாபனமாக இருக்கமாட்டார்கள் என்று. அவர்கள் தேசத்தில் அலைந்து திரிகிறவர்களா யிருப்பார்கள், கூடாரங்களில் குடியிருப்பார்கள், தரித்திரராயும், தாழ்மையோடும் இருப்பார்கள். ஆனால் அவர்களை நீங்கள் சபிக்க முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் நான் அவர்களோடிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இப்பொழுது கவனியுங்கள். இவர்கள் விசுவாசித்த அதே முறைமையை அவர்களும் விசுவாசித்து, அதே தேவனை இவர்களும் தொழுது கொண்டார்கள். பாருங்கள்? ஆனால் அவர்களோடு, அற்புத அடையாளங்கள் பின் தொடரவில்லை. ஆனால் இஸ்ரவேலரோடு, வெண்கல சர்ப்பம், அடிக்கப்பட்ட கன்மலை, இராஜாவின் ஜெய கெம்பீரம், தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசிகள் இவைகள்யாவும் உண்டு. அவர்களிடமோ இவைகள் இல்லை, அவர்களிடம் வெறும் சடங்காச்சாரம் தான் உண்டு, எண்ணெயாகிய ஆசீர்வாதமின்றி இருந்தார்கள். 92.இதேவிதமாகத் தான் நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னிகைகளோடும், புத்தியுள்ள கன்னிகைகளோடும் இருந்தது. அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்களாயிருந்தார்கள். ஆனால் இவர்களிடம் எண்ணெய் எனவே இவர்கள் ''நாங்களும் உங்களைப் போலவே நல்லவர்களாகத் தான் இருக்கிறோம்'' என்றார்கள். அதைப் பொறுத்த மட்டில், நம்மில் நல்லவர்கள் எவருமே கிடையாது. “ஏன், நீங்கள் ஒரு கூட்டம் உருளும் பரிசுத்தராயிருக்கிறீர்கள்'' என்கிறார்கள். நல்லது, அது சரிதான். நம்மில் நல்லவர்கள் எவருமே இல்லை; நாமெல்லாரும் பாவஞ் செய்து தேவமகிமை யற்றவர்களானோம். ஆனால் அதை நீங்கள் அறிந்து கொள்வதற் குரிய ஒரே வழி, சபையை சேர்ந்து கொள்ளுவதினால் அல்ல, நல்லவிதமாக ஜீவிக்க முயற்சி செய்வதினால் அல்ல. ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதினால் மட்டுமே. நான் எப்படி ஜீவிக்கிறேனோ அதன்படியல்ல; அவர் என்னவாயிருக்கிறார் என்பதைப் பொறுத்ததே அது. நான் என்னவாயிருக்கிறேன் என்பதைப் பற்றியது அல்ல அது, அவர் என்னவாய் இருக்கிறார் என்பதாகத் தான் இருக்கிறது. அவருடைய கிருபையினால் நான் அவராக, தேவனுடைய குமாரனாக ஆகும்படி, அவர் என்னைப் போல் ஆனார். அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? 93.இங்கே, ஒரு நித்திரை செய்யும், புத்தியில்லாத கன்னிகை இருக்கிறாள்; இங்கே தன் விளக்கில் எண்ணெயை உடையவளாக ஒரு புத்தியுள்ள கன்னிகையும் இருக்கிறாள். இப்பொழுது திடீரென ஒரு சப்தம் உண்டாயிற்று; “இதோ மணவாளன் வந்துவிட்டார், அவரைச் சந்திக்க எதிர் கொண்டு போங்கள்'' என்று. அதைக் கேட்ட அவர்கள் விழித் தெழுந்தார்கள். ஆனால் அவர்கள் இருசாராரும் விழித்தெழுந்தார்கள். ஆனால் அவர்கள் இருசாராரும் விழித்தெழுந்த போது, இந்த ஒரு கூட்டம் உள்ளே பிரவேசிக்க முடிந்தது, ஏனெனில், இவர்கள் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தார்கள். அதுதான் வித்தியாசத்தை உண்டு பண்ணினது. இன்னொரு பிரிவினரால் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களது விளக்கில் எண்ணெய் இருக்கவில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் செய்ய திரும்பிப் போனார்கள். ஆனால் அவர்கள் அதற்காகப் போயிருக்கையில், யாவும் முடிவுற்றது. ஸ்தாபனங்கள், ''நல்லது, ஒருவேளை நாங்கள் தவறாயிருக்கக் கூடும். ஒருவேளை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக நாங்கள் அவரிடம் திரும்பிப் போவது நல்லதாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். அதைத்தான் அவர்கள் இப்பொழுது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதை நீங்கள் கவனித்தீர்களா?ப்ரெஸ்பிடேரியன்கள்... ஒரு நிமிடம் ஒலி நாடாவில் பதிவு செய்வதை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.).... மணவாளன் வருகிறார். அவர்கள் இப்பொழுது, எண்ணெயை விலைக்கு வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிற பொழுது, அவருடைய வருகையானது எவ்வளவு சமீபமாயிருக்கிறது? சரி, ஜீன் உங்களுடைய ஒலிப்பதிவை ஆரம்பித்திடுங்கள். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?' அவர்கள் எண்ணெய் வாங்க சென்ற பொழுது''. அவர்கள் இப்பொழுது அதை வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து சபைகளும் எழுப்புதலை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்காகத் திரும்பிப் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 94.இப்பொழுது, டாக்டர் பில்லிகிரகாம் அவர்கள் கூட, ''நம்பிக்கையின் தூதன்' என்ற சிக்காகோவிலிருந்து வரும் பத்திரிக்கையில் (Herald of Faith) எழுதியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதில் அவர், ''பெந்தெகொஸ்தே அசைவை நாம் அவமதிக்கக்கூடாது என்று எழுதியிருக்கிறார். “நாம் அவர்களை அலட்சியப்படுத்திவிட முடியாது, ஏனெனில் மற்றெல்லா சபைகளையும் ஒன்று சேர்த்து ஒரு வருடத்தில், அவர்கள் யாவரும் செய்திட்ட ஆத்தும ஆதாயத்தைவிட பெந்தெகொஸ்தேயினர் அதிகமாக ஆதாயப் படுத்தியிருக்கிறார்கள்'' என்று எழுதியுள்ளார். அது சரியாக, அக்கினி பற்றியெறிதலும், அது அசைத்தலும், ஒன்று திரட்டுதலும், வலையை வீசியெறிந்து, இழுத்தலுமாயிருக்கிறது. நீங்கள் ஒரு வலையை கடலில் வீசியெறிகையில்.... இயேசு சொன்னார், 'தேவனுடைய இராஜ்யம் ஒரு மனிதன் சென்று கடலில் வலையை வீசி, அதை அவன் கரைக்கு இழுத்த பொழுது, அதில் அவனுக்கு ஆமைகளும், பாம்புகளும், தவளைகளும், சர்ப்பங்களும், இன்னபிறவும் கிடைத்தன. ஆனால் அவனுக்கு சில மீனும் கிடைத்தன'' என்று. பெந்தெகொஸ்தே செய்தி அதைத்தான் செய்து வருகிறது. அது பூமி முழுவதிலும் தீவிரமாய் பரவுகிறது. அதை வீசியெறிந்து கரைக்கு இழுக்கும் பொழுது, நாம் ஆமைகளையும் க்ராஃபிஷ் எனப்படும் ஒருவகை நண்டுகளையும், க்ராடாட்ஸ் என்ற வகை நண்டுகளையும், தவளைக் குஞ்சுகளையும், நீர் நாய்களையும், நீரில் குதித்தெழும்பும் ஒருவகை நீர்ப் பறவைகளையும், மற்றும் உள்ளவைகளையும் நாம் அந்த வலையில் பெற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் அது என்ன? அங்கே சில மீன்களும் இருக்கின்றன. அவை தான் எஜமானனுக்கு சொந்தமானவைகள். இவ்வொலி நாடா செய்தியைக் கேட்கும், பிரமாணத்தை மிகவும் கடுமையாக ஆசரிப்பதில் விசுவாசங் கொண்டிருக்கிற சகோதரரில் சிலரே, அதை எரித்து விடவிரும்புவீர்களோ? அவர்கள் எப்பொழுது மீன்களாக மாறினார்கள்? வலையானது அவர்கள் மேல் சென்ற பொழுதோ? இல்லை, அவர்கள் துவக்கத்திலேயே மீனாக இருந்தனர், அது சரிதான். உலகத்தோற்றத்திற்கு முன்னரே அவர்கள் தெரிந்தெடுக்கப் பட்டவர்கள். மற்றவைகளோ எஜமானின் உபயோகத்திற்குள் வராதவைகளாகும். 95.அதுதான் உங்களுடைய தவளை. வலையிலிருந்து ஒரு பழைய தவளையை நீங்கள் வெளியே எடுத்துகரையில் எறிந்துவிட்டால், அது “வாப் வாப்''என்று சத்தமிட்டுக் கொண்டே, தண்ணீருக்குள் மீண்டும் திரும்பிவிடும். அங்கே அந்த வயதான நண்டு உட்கார்ந்து கொண்டு, ”ஆ, அந்தக் கூட்டம், ஒரு உருளும் பரிசுத்தரின் கூட்டம் அது'' என்று சொல்லும். அதுவும் மீண்டும் தண்ணீருக்குள் திரும்பிச் சென்று விடுகிறது. ஆ, ஆ, ஆ, ஓ இல்லை முடியாது'' என்று சொல்லி விட்டு, திரும்பவும் அது சேற்றினுள் விரைவாக தப்பி ஓடிவிடுகிறது. வலையில் அகப்பட்ட அந்த வயதான பாம்பும் சிறிது நேரம் சீறிவிட்டு, ''அற்புதங்களின் காலம் முடிவடைந்து விட்டன, டாக்டர் பண்டிதர் இன்னார் இன்னார் என்னிடம் கூறினார், ஆகவே என்னை நீங்கள் முட்டாளாக்க முடியாது' என்று கூறிவிட்டு, அது மீண்டும் தண்ணீருக்குள் திரும்பிச் சென்று விடுகிறது, பாருங்கள். பாம்பு பாம்பாகத் தான் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. தவளை தவளையாகத் தான் ஆரம்பித்தது. அந்தவிதமான மக்களைப் பற்றி பவுலுங்கூட குறிப்பிடுகையில், ''அவர்கள் நம்முடையவர்களாக இல்லாதபடியினால் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள்'' என்று கூறுகிறான். ஊ! சரிதான். அது புத்தியில்லாத கன்னிகையாகும். 96.'அவள் கொஞ்சம் எண்ணெய் வாங்கப்போயிருந்த பொழுது அதைத்தான் அவர்கள் இப்பொழுது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பெரிய சுவிசேஷ சபைகள்யாவும், இம்மகத்தான காரியங்களை கண்டு கொள்ள விரும்பி, வேதத்திற்குத் திரும்பிப்போய், ''எங்களுக்கு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் தேவை'' என்று வேண்டுகின்றனர். நல்லது, அவர்கள் என்னவிதமான ஆராதனையைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு கற்பனை செய்து பார்க்கலாம். அவர்கள் அதைப் பெறப் போகிறதில்லை; அவர்கள் அங்கு சென்று தங்கள் மேல் பூசப்பட்ட அழகு சாதனங்களை யெல்லாம் கெடுத்துக் கொள்ளப் போகிறதில்லை. ஓ இல்லை. அவர்கள் தங்களுடைய சங்கங்களையும் ஸ்திரீகள் ஐக்கிய சங்கங்களையும் விட்டுவிடப் போவதில்லை. ஏசாவைப்போல், ஒருகையால் உலகைப்பற்றிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் தேவனையும் பிடித்துக் கொள்ள முயலுகிறார்கள். அப்படி நீங்கள் செய்ய முடியாது. மாறு கண் உடைய கிறிஸ்தவராக இருக்க முடியாது: தேவனையும் நோக்கிக் கொண்டு, உலகையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உங்கள் முழு பார்வையும் கல்வாரியின் மேல் தான் மையம் கொண்டிருக்க வேண்டும். அங்கே தான் நிலைத்திருங்கள். 97.அவர்கள் அங்கே திரும்பிப் போய் வாங்க முயன்று கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணெயை வாங்க அவர்கள் போன அதே வேளையில் தான் மணவாளன் வந்துவிட்டார். ஓ! சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே, நாம் சமீபமாக அங்கே இருக்கிறோம். நாம் நமது பரம் வீட்டுக்கு சமீபமாக வந்து விட்டோம். இக்காலைகளில் ஒன்றில் கர்த்தரின் எக்காளம் தொனிக்கும், இனி காலம் செல்லாது, காலைப் பொழுது நித்தியத்தில் பிரகாசமாயும், அழகாகவும் விடியும், அப்பொழுது இரட்சிக்கப்பட்ட அவருடையவர்கள் ஆகாயத்திற் கப்பால் உள்ள தங்கள் வீட்டில் ஒன்று கூடுவர். அது எப்பேர்பட்ட நேரமாயிருக்கப் போகிறது! 98.ஆம், நித்திரை செய்யும் கன்னியர்... இந்த நித்திரை செய்யும் கன்னியருக்கு என்ன நேரிடும் என்பதை அறிந்திட நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படித் தானே? ஒரு காரியத்தைப் பற்றி நான் விளக்கிட விரும்புகிறேன். இந்த சபைகளுக்கு என்ன நேரிடப்போகிறது? ஒரு பகுதி தூரம் மட்டுமே கிறிஸ்துவோடு வந்துவிட்டு, கிறிஸ்துவோடு முழுத்தூரமும் கூடப்போகாத இம்மக்களுக்கு என்ன நேரிடப் போகிறது? இப்பொழுதும் ரோமருக்கு எழுதின நிருபத்தில், அது 2:22 என்று நான் நம்புகிறேன். வேதம் கூறியது, பவுல் கூறினான், (ரோமர் 8:9 - மொழிபெயர்ப்பாளர்) ''தேவனுடைய ஆவி உங்களில் இராவிடில், நீங்கள் தேவனுடையவர்கள் அல்ல'' தேவனுடையவர்களாக நீங்கள் இருப்பதற்கு, தேவனுடைய ஆவியையுடையவர்களாக இருத்தல் வேண்டும். நிச்சயமாக அப்படித்தான். ஆவியைப் பெற்றிராவிடில் ஸ்தாபனத்திற்கு சொந்தமானவர்களாகத் தான் நீங்கள் இருப்பீர்கள். 99.அது சரி, ஐயா, “மகா உபத்திரவ காலம் - அவர்கள் அதன் வழியாக கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, நான் இனி மீதியாயிருக்கிற விஷயத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். இப்பொழுது அவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்பட்டார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அதுதான் மகா உபத்திரவ காலமாகும். அவ்வாறில்லையா? மகா உபத்திரவ காலம். இந்த உபத்திரவ காலத்திற்குப் பிறகு, அந்த ஜனங்கள்.... மீதியாயிருக்கிறவர்களைப் பற்றி நான் மீண்டும் எடுத்துக் கொள்ளட்டும். இப்பொழுது பாருங்கள் இங்கே ஒரு துண்டு துணி இருக்கிறது. பெண்ணானவள் அதை இவ்வாறு விரித்து வைத்து, அதிலிருந்து தனக்கு ஒரு ஆடையை தயாரிக்கப்போகிறாள். அவளிடத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள துணிதான் இருக்கிறது. அத்துணியின் ஒவ்வொரு பகுதியும் ஒரேவிதமான துணியாகத் தான் உள்ளது. அது சரிதானே? இருசாராருமே கன்னியர் தான். அது சரி. அவர்களுக்கு கிறிஸ்துவில் விசுவாசம் இருந்தது. தேவபக்தியின் வேஷம் உண்டாயிருந்தது, அவர்கள் ஆலயத்திற்கு சென்று வந்தார்கள்; நல்ல காரியங்களை, தர்மங்களையெல்லாம் செய்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களுடைய கிரியைகளுக்கெதிராக குறையொன்றும் சொல்லக் கூடியதாக இல்லை. ''உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்'' என்று கர்த்தர் கூறினார். ஒவ்வொரு காலத்திலும் அதைக் குறித்து அவர் கூறினார், “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். ஆனாலும் உன்னிடத்தில் குறையுண்டு'' என்றார். பாருங்கள்? 100.அந்த ஸ்திரீயானவள்.... அவள் தன் மனதில், எந்தவிதமாக அவ்வாடையைத் தயாரிக்க விரும்புகிறாளோ அதற்கான மாதிரியைப் பற்றி திட்டமிட்டுக் கொள்ளுகிறாள்; அந்த மாதிரியின்படி எவ்வாறு அத்துணியை வெட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் அவள் சிந்திக்கிறாள்; தான் வெட்டப் போவது என்னவாயிருக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருக்கிறாள். அது சரிதானே? அவள் அம்மாதிரியில் போதுமான சிறந்த பகுதி எதுவென்று எண்ணுகிறாளோ அதை அவள் எடுத்துக் கொள்ளுகிறாள். அது சரிதானே? ஏனெனில் அத்துணி முழுவதும் ஒரேவிதமான துணியாகத் தான் உள்ளது. ஆனால், அவள் விரும்புகிற வண்ணமாக அத்துணியை பிரித்து, கத்தரிக்கோலை எடுத்து, அதை வெட்டியெடுத்துக் கொள்ளுகிறாள். அத்துணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுப் போக மீதியாக இருப்பதுதான் ''மீதியானது'' என்று கூறப்படும் (Remnant) சரி. இந்த மாதிரியானது என்னவாயிருக்கிறது, அது எவ்வாறு அறிந்து கொள்ளப்பட்டது. எதிலிருந்து வெட்டியெடுக்க வேண்டும் என்று அந்த பெண்மணி தெரிந்து கொண்டாளோ, அதிலிருந்து. 101.ஆதி முதல் அந்தம் வரையிலும் முன்னறிவினாலே அறிந்திருந்த தேவனானவர். உலகத்தோற்றத்திற்கு முன்னரே, எங்கிருந்து வெட்டியெடுக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தார். ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் அறிந்தேயிருந்தார். பாவிக்கும், பரிசுத்தவானுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அறிந்தேயிருந்தார். ஒவ்வொரு இருதயத்தின் நோக்கத்தையும் அவர் அறிந்தேயிருந்தார், எனவே, அவர் நம்மை உலகத்தின் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொண்டு, நமது பெயர்களை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் வரைந்தார்; அடிக்கப்படப்போகிற ஆட்டுக்குட்டியாக அவ்வாட்டுக்குட்டி இருந்தது; (அவர் அடிக்கப்படப் போவதற்கு முன்னரே, நமது பெயர்களை எழுதினார்). கிறிஸ்துவானவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று வேதம் கூறுகிறது. அடிக்கப்படுவதற் கென்று அவர் ஆதியில் தெரிந்து கொள்ளப்பட்ட பொழுது, அவர் யாருக்காக அடிக்கப்பட வேண்டுமோ, அதற்குரிய ஜனங்களாக நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம். அதை காண்கிறீர்களா? 102.யாவரும் கன்னிகைகள் தான். இதோ இங்கே அந்த சிறிய மீதியாயிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெட்டப் படும்வதில் விழும் கழிவுத்துண்டுகள் அல்ல இவர்கள். ஓ, இல்லை. அப்பெண்மணி அதை பத்திரமாக எடுத்துவைத்து வைக்கிறாள், அதை அவள் வேறு எதற்காவது உபயோகிக்க முடியும். பாருங்கள்? ஆனால் சபைக்காலத்தில் இங்கே அது உபயோகப்படப் போகிறதில்லை, அங்கே வெட்டியெடுக்கப் பட்ட சபைதான் உபயோகிக்கப்படும். மீதியாயிருக்கிற அவர்கள் உபத்திரவ காலத்தினூடே செல்லுகிறபடியினால், அவர்கள் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியுள்ளது. அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? இங்கே சபையானது பரம் வீட்டிற்கு போகின்றது. இதோ இங்கே மீதமாக விடப்பட்டிருக்கிற மீதியாயிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இங்கே தான் சீயோன் மலையின் மேல் நிற்கிற யூதர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அது மூன்றுவிதமான மணவாட்டிகள் அல்ல. அது தானே மணவாட்டி, அடுத்து மீதியாயிருக்கிறவர்கள்; இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள். சரியாக அதுதான். யோவான் அங்கே பரிசுத்த ஆவியின் உணவைத் தவிர வேறு எதையும் புசித்துக் கொண்டிருக்கவில்லை. எனவே அவன் சரியான நிலையில் தான் இருந்தான். அவனிடத்தில் எந்தவித பழுதும் காணப்படவில்லை என்று நான் கருதுகிறேன். பாருங்கள்? அவர்கள் அதோ அங்கே இருக்கிறார்கள். 103.காலத்தின் இறுதியிலே, “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்'' என்று வேதம் கூறுவதை எத்தனை பேர்கள் அறிந்திருக்கிறார்கள்? பவுல் அவ்வாறு கூறினான். நாம் இப்பொழுது தானியேலின் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பைப் பற்றி பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்தும் அந்தக் காட்சியை நாம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நான் தானியேலின் புத்தகத்திலிருந்து எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அது அதே காரியம் தான். தானியேல் 7ம் அதிகாரம், அங்கே நாம் அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பைப் பற்றி எடுத்துக் கொள்வோம். தானியேலின் புத்தகம் 7ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து துவக்குவோம்: ''அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வெறோரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; (அங்கே நாம் ரோமாபுரியைக் காண்கிறோம்)... இதோ, அந்தக் கொம்பிலே மனுஷக் கண்களுக்கு ஒப்பான கண்களும் (இப்பொழுது கவனியுங்கள், இந்த கொம்பு கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு தந்திரமான காரியமாகும். ஏனைய கொம்புகள் மிருகங்களுக்கு இரையாகின. இந்தக் கொம்பு ஒரு தந்திரமான மனிதனாகும். அஞ்ஞான மார்க்கத்திற்குப் பதிலாக அது போப் ஆகும். அதை நீங்கள் பாருங்கள்) பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. 104.[இப்பொழுது 9ம் வசனத்தைக் கவனியுங்கள்] “நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; அது எப்போது என்றால் புறஜாதிகளுடைய இராஜ்யங்கள் முடிவுபெற்ற பின். அப்படி தான் இந்த தீர்க்கதரிசி பேசுகிறார். அவர் முன்னுரைத்த ஒவ்வொரு காரியங்களும் இந்த கடைசி காரியம் மட்டுமாக கட்சிதமாக நடைப் பெற்றிருக்கிறதை நினைவில் கொண்டிருங்கள். இவைகளை நாம் வரலாற்றை பார்கும் போது அறிந்துக் கொள்கிறோம். சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும், பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது... (அன்றிரவில் நாம் பார்த்த அத்தரிசனத்தில் அது யார் என்று பார்த்தோம்? அது இயேசு தான்). அவருடைய சிரசின்மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. “அக்கினி அவர் சந்ததியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள். (இதோ அவரோடு திரும்பி வருகிற சபையை அங்கே காண்கிறோம்)... கோடா கோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்.... (மணவாட்டி அவருடன் வருகிறாள், மற்றும் உலகில் மீதியுள்ளவர்களுமே )... நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும் அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. 105.நியாயசங்கமானது அமர்ந்தது, புத்தகங்கள் திறக்கப்பட்டன. அப்பொழுது தான் மணவாட்டி திரும்பி வந்து நியாயத்தீர்ப்பில் அமர்ந்திடுகிறாள். தெரிந்து கொள்ளப்பட்ட சபையானது. அந்த மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு, எடுத்துக் கொள்ளப்பட்ட சபையானது திரும்பி வருகிறது. அதற்குப் பிறகு... வெளிப்படுத்தின விசேஷத்தில் அதைப்பற்றி கூறுகிறது. “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' உங்களில் எத்தனை பேர்கள் அதை வாசித்துள்ளீர்கள்? இயேசு மணவாட்டியோடு திருப்பி வருகிறார். மணவாட்டியோடு. 106.யாவும் மூன்று என்ற எண்ணில் காணப்படுகின்றன என்று நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய வருகை மூன்று முறைகள்; முதல் தடவை அவர் தனது மணவாட்டியை மீட்க வந்தார்; இரண்டாவது தடவை அவர் தன் மணவாட்டியை எடுத்துக் கொண்டு போக வருகிறார்; அது ஒரு காதல் விவகாரமாயுள்ளது, அவர் தானே இரகசியமாக வந்து அவளை இரவு நேரத்தில் திருடிக் கொண்டு, உலகை விட்டு எடுத்துக் கொண்டு போய் விடுகிறார். அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம். அது கர்த்தருடைய இரகசிய வருகையாயிருக்கிறது. இரண்டாவது தடவை அவர் வருவது, தன் மணவாட்டியை பெற்றுக் கொள்ளத் தான். முதலாவது தடவை, அவர் அவளை மீட்டுக் கொள்ள வந்தார். இரண்டாவது தடவை அவளைப் பெற்றுக் கொள்ள வருகிறார்; இராஜாவும் இராணியும் வருகிறார்கள். 107.அவர் இங்கே தேசங்களின் மேல் நியாயத்தீர்ப்புக்கென வருகிறார். ''உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால் நீதிமன்றத்திற்கு போகத் துணிகிறதென்ன?அற்ப வழக்குகளை தீர்க்க நீங்கள் அபாத்திரரா? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? என்று பவுல் கூறினான். இங்கே நியாயத்தீர்ப்பானது கிறிஸ்துவினிடமும், அவருடையவர்களிடமும் ஒப்புக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் தான் கூண்டிலேற்றி விசாரிக்கிற வழக்கறிஞர் ஆவர். அவரோ சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். வழக்கறிஞராக மணவாட்டி இருக்கிறாள். இங்கே இவைகள் வருகின்றன. புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புத்தகம் என்ற மற்றொரு புத்தகமும் திறக்கப்பட்டது. முதல் புத்தகம், புறம்பே தள்ளப்பட்ட பாவியைப் பற்றிய புத்தகமாகும். சரி. அவன் துவக்கத்திலேயே ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டவனாய் இருக்கிறான். அவர்கள் தான் வெள்ளாடுகள். அவனுக்கு ஒரு வாய்ப்பும் இல்லை; அவனது துவக்கமே பாவியாகத் தான் இருக்கிறது. எனவே அவன் புறம்பே தள்ளப்படுகிறான். 108.செம்மறியாடுகள் நியாயத்தீர்ப்பில் நிற்கின்றன. அவர்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்; பரிசுத்தவான்கள் அவர்களை நியாயந்தீர்க்க வேண்டும். தேவன் அநீதியுள்ளவரல்ல. ஒரு அஞ்ஞானி தூர தேசத்திலிருக்கையில், நாம் இங்கே அமெரிக்காவில் எட்டு, பத்து மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆலயங்களை எழுப்பிக் கொண்டு, அந்த அஞ்ஞானிக்கு தேவ செய்தியை எடுத்துச் செல்லாமலிருந்தால், தேவன் நம்மை அதற்காக பொறுப் பாளியாக்கி, அவர்களையோ தப்புவிக்க வைத்துவிடுவார். நிச்சயமாக! தேவன் அநீதியுள்ளவரல்ல. இங்குள்ள நீங்கள் இதை இதற்கு முன்பு கண்டிருக்காவிடில், நீங்கள் பொறுப் பாளியல்ல; செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு நாங்கள் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறோம். நீங்களோ அதற்கு நீங்கள் செவிகொடுப்பீர்களா, அல்லது மாட்டீர்களா என்பதற்கு பொறுப்புள்ளவர்களாயிருக்கிறீர்கள். 109.கோவில்களைக் கட்டி கும்பிடுகிற அஞ்ஞானிகள் எழும்புவார்கள்; அவர்களுக்கு அதைவிட மேலாக ஒன்றும் தெரியாது. தேவனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தேவன் அநீதியுள்ளவரல்ல. அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காவிடில், அவர்களை தேவன் ஆக்கினைக்குள்ளாக்க மாட்டார். அவர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவார். எனவே சபையில் ஒவ்வொரு சபைக் காலத்திலும், எபேசு சபைக்காலம் முதற் கொண்டு, இங்கே இந்த சபைக்காலம் வரையிலும், செய்தியானது, கிறிஸ்துவின் உண்மையான செய்தியானது, அது ஆதியில் இருந்ததைப் போலவே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், வல்லமை, உயிர்த்தெழுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சுகமளிக்கும் வரங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம், மற்றும் அவர் போதித்த இன்னபிற காரியங்களோடு பெற்றிருக்கும் மணவாட்டியில் உள்ள ஒவ்வொருவரும், வழக்குரைஞராக நிற்பார்கள். 110.இதோ இங்கே ஒருவருடைய வழக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. ''இன்னின்ன இடத்தில் உனக்கு ஒரு கூட்டம் உண்டாயிருந்தது. நீ அவரிடம் கூறினாயா?'' என்று கேட்கப்படுகிறது. இப்பொழுது வழக்குரைஞர் கூறுகிறார். ''ஆம், நான் அவருக்குச் சொன்னேன்'' என்று. அது புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை மறுக்கமுடியாது. நம்முடைய எண்ணங்கள் கூட அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நீங்கள் மறுதலிக்க முடியாது. 'ஆம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் அவனுக்குக் கூறினேன்“ என்று பதிலளிக்கிறார். ''ஜெஃபர்சன்வில்லில் உள்ள கூடாரத்தில் தானே'' 'ஆம் ஐயா, நான் அதை அறிவேன்“ என்று பதில் வருகிறது. ''ஆம், இங்கே இப்புத்தகத்தில், அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீ கூறியவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்பு, அவர் வேத வாக்கியங்களை யெல்லாம் ஆராய்ந்து, அது சரிதான் என்பதை கண்டு கொண்டார். ஆயினும் அதற்குக் கீழ்ப்படியவில்லை'' 'அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் உங்களை நான் அறியேன்'' என்பார். அங்கே தான் அவர் வெள்ளாடுகளை செம்மறியாடுகளை விட்டு பிரிக்கிறார். செம்மறியாடுகளை தனது வலது பக்கமாகவும், வெள்ளாடுகளை தனது இடது பக்கமாகவும் நிறுத்துகிறார். அங்கே நீங்கள் அந்த மூன்று விதமான மக்களையும் காணலாம். 111.ஆனால் மணவாட்டியாகிய இந்த வகுப்பினர் ஒருபோதும் அந்த வகுப்பினராக இருக்க முடியாது. அப்பொழுது மணவாட்டியானவள், அவரோடு ஆலயத்தில் இருக்கிறாள். ஏனையோர், பாடுபட்டு, தங்களுடைய மகிமையை இராஜ்யத்தினுள் கொண்டு வருகிறார்கள். மணவாட்டியோ மணவாளனோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறாள். மற்றவர்களுக்கோ, இவர்களைப் போல் அவர்கள் புறம்பே தள்ளப்படுவதுமில்லை, அவர்கள் பணிவிடை செய்வார்கள். ஏனெனில் செம்மறியாடுகளாகிய அவர்களை அவர் வெள்ளாடுகளினின்றும் வேறு பிரித்தார். ஆனால் அவர்...ஆனால் வெள்ளாட்டுக்கோ அதைப்பற்றிய அறிவு இல்லை; அதைப்பற்றி அது அக்கறை கொள்ளவில்லை. அவன் ஒரு வெள்ளாடாக இருக்கிறான், வெள்ளாடு என்ற நிலையைப் பற்றி திருப்தி கொண்டிருக்கிறான். எனவே ஒரு வெள்ளாடாக அவன் மரிக்கிறான். அதுவே அவன் முடிவாகும். அவ்வளவு தான். ஆனால் செம்மறியாடோ, அவனுக்கு இருக்குமென்றால்... தேவன் அதை பிடித்துக் கொள்வாரானால்... நான் தேவனைப் பற்றி ஒன்றும் கேள்விப்பட்டிராத தேவனற்ற அந்த அஞ்ஞானிகளோடு நின்று கொண்டு இருந்தேன். எனவே நீங்கள் அந்த மக்களுக்கு இந்த சுவிசேஷத்தை பிரசங்கித்தால்... 112.நான் அங்கே நின்றாக வேண்டும். சமீபத்தில் தேவன் எனக்கு கொடுத்த அந்த மகத்தான ஸ்தலத்திற்கு என்னை எடுத்துச் செல்லுதலில், நான் காண்கையில், நான் அந்த ஜனங்களோடு நிற்க வேண்டியிருந்தது. நான் அவர்களுக்காக பொறுப்புள்ளவனாக இருப்பேன். இலட்சக்கணக்கான மக்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். 'அவர்கள் யாவரும் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?'' என்று நான் கேட்டேன். ''இல்லை, அவர்கள் உன் ஊழியத்தில் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள்'' என்று பதில் வந்தது. ''நான் இயேசுவைக் காண வேண்டும்'' என்று நான் கேட்டேன். 'இல்லை, இன்னமும் சமயம் வரவில்லை. அவர் வருவதற்கு முன்பாக ஒரு சமயம் உண்டாயிருக்கும் ஆனால் அவர் முதலில் உன்னிடம் வந்து, நீ பிரசங்கித்த வார்த்தையின்படியே நியாயந்தீர்க்கப்படுவாய். அவர்கள் அதன் பேரில் தான் இளைப்பாறிக் கொண்டு இருக்கிறார்கள்“ என்று அவர் கூறினார். ''எல்லோரும் அங்கே நின்றாக வேண்டுமோ? பவுலுங் கூட அங்கே நின்றாக வேண்டுமோ?என்று நான் கேட்டேன். “ஆம், பவுல் தான் யாருக்கு பிரசங்கித் தானோ அவர்களோடுங் கூட அவன் நின்றாக வேண்டும்'' என்று அவர் கூறினார். “பவுல் பிரசங்கித்த அதே செய்தியைத் தான் நானும் பிரசங்கித்தேன்” என்றேன். தங்கள் கரங்களையுயர்த்தி, “அதன் பேரில் தான் நாங்களும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்கள். அங்கே தானே அது சரியாக இருக்கிறது. ஆம், மேலும் கூறப்பட்டது: ''பின்பு நாம் யாவரும் ஒன்று சேர்ந்து புசிக்கவும் குடிக்கவும் கூடியதான ஒருசரீரத்தை அடைய பூமிக்குத் திரும்பிப் போவோம். பின்பு, முடிவில்லாத யுகாயுகமாய் ஒன்று சேர்ந்து வாழ்வோம்' என்று. அதுவே கர்த்தருடைய வருகையாயிருக்கிறது. அது சரி தான். இன்னும் ஒரு நிமிடம். இப்பொழுது... இன்னும் கொஞ்சம் நேரத்தில் முடித்தாக வேண்டும். ஏனெனில் நேரமாகிவிட்டது. நம்முடைய சகோதரன் ஞானஸ்நான ஆராதனைக்கோ அல்லது அவர் உபயோகிப்பதற்காகவேறெந்த காரியத்திற்குமான நேரமாக இது இருக்கிறது. 113.நல்லது,இந்த சபையின் காலத்தில், ஓ, இங்கே மிகவும் அருமையான காரியம் ஒன்றிருக்கிறது. நான் இதை மிகவும் விரும்புகிறேன். இச்சபைக் காலங்களில் ஏறத்தாழ ஒன்றையொன்று ஒத்தது போல் கிரியை செய்து வந்த இருவித்தியாசமான ஆவிகள் இங்கே இந்தக் காலம் வரையிலும் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்தாபனமாகும். இன்னொன்று பரிசுத்த ஆவியாகும். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அது அசலுக்கு மிகவும் நெருக்கமாக அதை ஒத்து காணப்படும் என்று இயேசுவுங் கூட எச்சரித்தார். இவ்விரண்டு ஆவிகளும் எதிர்வரும் நியாயத்தீர்ப்புக்கென ஜனங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. சாத்தான் தன் ஜனங்களுக்கு, கிறிஸ்துவைக் காட்டிலும் கூடுதலான ஜனங்களை உடையவனாக இருப்பான் என்று வாக்களித்தான். அவன் அதைப் பெற்றிருக்கிறான்; இப்பொழுது இதை மிகவும் கவனமாகக் கவனித்துப் பாருங்கள். மக்களை அடையாளப்படுத்தும் படி, அது உண்மையானதை விட அதிகமாக இருக்கிறது. 114.அநேகர் ஏவாளைப் போல் இருக்கிறார்கள். வஞ்சிக்கப்படத்தக்கதாக ஏவாள் நீண்ட நேரம் நின்றுவிட்டாள். அவள் அவ்வாறு நின்றிருக்காவிடில், வஞ்சிக்கப்படுதலே இருந்திருக்காது. ஆனால் ஏவாளோ நின்றுவிட்டாள். அவள் அவ்வாறு நின்றுவிட்ட போது, அங்கே தான் அவள் வஞ்சிக்கப்பட்டாள். தொடர்ந்து நிலை நிற்பதற்குப் பதிலாக இப்பொழுது நான் கூறுவதை கவனமாகக் கேட்கிறீர்களா? கவனியுங்கள். ஏவாள் வஞ்சிக்கப்பட்ட தன் காரணம் என்னவெனில்... அதை நாம் சேர்ந்து சொல்லுவோம். அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று அறிந்து கொள்வேன். (சகோதரன் பிரன்ஹாமும் சபையாரும் சேர்ந்து இவ்வாறு கூறுகிறார்கள்: ''ஏவாள் வஞ்சிக்கப்பட்டதன் காரணம் என்னவெனில்: அவள் ஒருபோதும் முழுமையாக தேவனுடைய வார்த்தையை கைக் கொள்ளவில்லை - ஆசி). சாத்தான் தேவனுடைய வார்த்தையை அவளிடம் மேற்கோள் காட்டினான். ஆனால் அவன் எல்லா சத்தியத்தையும் அவளிடம் கூறவில்லை. அவனுடைய ஸ்தாபனமும் அவ்வாறு தான் செய்து வருகிறது. பார்த்தீர்களா? அவள் வார்த்தையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளத் தக்கதாக அந்த அதிக அளவு நேரம் அங்கே நின்றுவிட்டாள். அவள் வார்த்தையை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. 115.நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியரைப் பொறுத்த மட்டிலும், காரியமானது இவ்வாறு தான் உள்ளது. அவர்கள் வார்த்தையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு பகுதியை மட்டுமே எடுத்துக்கொள்ளத் தக்கதாக, நீண்ட நேரம் தங்கிவிட்டார்கள். வஞ்சிக்கப்பட்ட சபையானது, வார்த்தையின் முழுமையையும் ஏற்றுக் கொள்ளாமல், வார்த்தையின் பாகத்தை மட்டும் எடுத்துக் கொள்ளத்தக்கதாகத் தான் நீண்ட நேரம் தங்கிவிட்டார்கள். அவர்கள் உண்மையும், உத்தமுமாயிருந்த போதிலும், இவ்வாறு ஆகியது. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். “அவள் வஞ்சிக்கப்பட்டாள்'' என்று வேதம் கூறுகிறது. ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஆதாம் தான் தவறு செய்வதை நன்கு அறிந்தேயிருந்தான். ஆனால் அவன் மனைவியோ, தான் செய்கிறதை செய்து விட்ட, விலக்கப்பட்ட அதைச் செய்யுமாறு அவனையும் தூண்டினாள். ஏன், அவன் ஒரு மனிதனாயிருந்தான். அவனுக்கு அது அவ்வாறு இருந்தது. அவன்தான் தவறிழைப்பதை அறிந்திருந்தான். ஆனால் ஏவாள், தான் சரியானதைச் செய்வதாக எண்ணினாள். 116.ஓ, உங்களால் காண முடியவில்லையா? எனவே தான் பவுல், ஒரு ஸ்திரீயானவள் ஒருபொழுதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது என்று கூறினான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள். ''உபதேசம் பண்ணவும், அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும்''. ''என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்பட வில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். மேலும் பவுல் கூறினான், ''அப்படியிருந்தும், (அவள் இழந்து போகப்பட மாட்டாள்). தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலை கொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றினாலே (அவளுக்கு ஒரு கணவன் இருந்தால்) இரட்சிக்கப்படுவாள்.'' ''ஆனால் ஒருபொழுதும் ஸ்திரீயானவளை உபதேசம் பண்ணவோ, அதிகாரம் செலுத்தவோ அனுமதிக்காதீர்கள். அப்படிச் செய்யக்கூடாது'' என்று பவுல் கூறினான். கர்த்தருடைய சிந்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்று நான் எண்ணுகிறேன்'' என்று அவன் கூறினான். 117.“ஏன், தீர்க்கதரிசிகள், அங்கே ,நாங்கள் பிரசங்கித்தாக வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்களே' என்று அவர்கள் கூறுகிறார்கள். ''தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்'' என்று பவுல் கூறினான். அது சரிதான். பவுல்தான் கூறுகிற காரியம் என்ன வென்று நன்கு அறிந்திருந்தான். ஆனால் அவன் கூறினான், “ஒருவன் அறியாதவனாயிருந்தால் அறியாதவனாயிருக் கட்டும்'' என்று. அவ்வளவு தான். அவன் செவிகொடுக்க மனமில்லாதவனாயின், அவனைப் போகவிடுங்கள். அவன் சரியாக அந்த அருவி அரித்த படுகுழியில் போய் விழுவதற்குப் போய்க் கொண்டிருக்கிறான். அவன் அதற்கு நேராகப் போகட்டும். ஆனால் அங்கே, அந்த இருவிதமான ஆவிகள் உள்ளன. 118.காரணம்.... காவல்துறை படையில் அவர்கள் அங்கே பெண்களை சேர்த்து வீதிகளில் நிறுத்தி வைத்திருக்கிறார்களே, அதைப் போல். அந்த தாய்மார்களை வீதிகளிலே அவ்வாறு நிறுத்தியிருப்பது அமெரிக்க கொடிக்கே மிகுந்த இழுக்காகும். ஆயிரக்கணக்கான புருஷர்களுக்கோ வேலையில்லாமல் இருக்கிறது. ஏன், இது ஒரு ஸ்திரீயின் தேசமாயிருக்கிறது. ஒரு பெண்ணானவள் ஆதிக்கத்துக்கு வருவாள். அது ஸ்திரீயை வழிபடும் தேசம். அது கத்தோலிக்க மகதத்தின் கோட்பாடுபற்றியதின் ஆவியாயிருந்தது. ஒரு ஸ்திரீயை கடவுளாக வழிபட வைத்துள்ளது. இங்கே அது .... அது அங்கே அமர்ந்திருந்து கொண்டிருக்கிறது. அது உருவாகி வருவதை நீங்கள் காணவில்லையா? ஒரு உண்மையான, இனிமையான மனைவியை ஒரு மனிதனுக்கு தேவன் கொடுப்பாரெனில், அதைவிட மேலான தொன்று மனிதனுக்கு தேவன் கொடுக்கத்தக்கது வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் அவளோ அதை தாண்டி எதையும் பெற்றுக் கொள்வாள் எனில், அப்பொழுது அவள் இழந்து போகப்படுவாள். அது அப்படித்தான் இருக்கிறது. தேவன் ஒருபோதும் பெண்கள் இந்த மாதிரி இடங்களில் வேலை செய்யவும், இம்மாதிரியான காரியங்களைச் செய்யவும் சித்தங் கொள்ளவில்லை. இந்த பெண்மணிகள் பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாவரும், ஒவ்வொருவரும் சிறு சிறு பிரசங்கிகள் ஆவார்கள். அவர்களுக்கென சொந்தமாக மேய்க்கத்தக்க மந்தையானது அவர்கள் இல்லங்கள் தோறும் உள்ளன. அதுதான் அவர்களின் பிள்ளைகளை மேய்த்தலாகும். அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும். அதுதான் சரி. 119.ஆக, இரு வித்தியாசமான ஆவிகள், ஏறத்தாழ ஒன்றையொன்று ஒத்திருக்குமாப் போல் உள்ளன. ஏவாள் வார்த்தையை ஒத்திருந்த சாத்தான் சொன்னவைகளை நம்பினாள். சாத்தான் கூறினான், “தேவன் கூறியுள்ளார்” என்று. ''ஊள - ஊள'' “தேவன் கூறியுள்ளார்'' ''ஊ ஊ அதுசரி தான்'' ''தேவன் கூறினார்“ ''ஊ ஊ“ “தேவன் கூறினார், நாம், 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்' நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றால், அதற்காக தேவன் நம்மை ஆக்கினைக்குள்ளாக்கமாட்டார். அப்படி ஞானஸ்நானம் பெறுதல் நன்றாக இருக்கவில்லையா?' என்று கூறுகிறார்கள். நீங்கள் அசுத்தமான மாய்மாலக்காரன் ஆவீர் ஆம் ஐயா. தேவன் ஒருபோதும் அதைக் கூறவில்லை. எந்த வகையிலும், அவ்வகையான ஒரு காரியம் இல்லை. அது மரித்ததாய் இருக்கிறது. அவ்விதமான காரியம் ஒன்றும் இல்லை. ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்'' என்று ஒரு நாமம் எங்கேயிருக்கிறது என்பதை எனக்கு கூறுங்கள் பார்க்கலாம். அவ்விதமான ஒரு நாமம் இல்லவேயில்லை. அப்படிப்பட்டது மரித்ததாயிருக்கிறது. நல்லது, அது “மரித்துப் போன” சர்தையின் காலத்தில் தோன்றினது. அப்படிப்பட்ட தொன்று இல்லை. ''உயிரோடிருக்கிறவன் என்ற பெயர் உனக்கு இருக்கிறது. நீ ஒரு கிறிஸ்தவ சபை என்று உன்னை அழைத்துக் கொள்கிறாய். ஆயினும் நீ மரித்ததாகத் தான் இருக்கிறாய், அது சரிதான். 120.“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்ற நாமம் ஒன்று இல்லை. “ஓ நல்லது, அது மற்றதைப் போலவே நன்றாக இல்லையா?'' என்கிறார்கள். அது நல்லதாக இருக்காது. பவுல் அது சரியாக இருக்காது என்று கூறினான். ''நீங்கள் விசுவாசிகள் ஆனதிலிருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். ''அப்படிப்பட்ட தொன்று உண்டென்று நாங்கள் கேள்விப்பட வேயில்லை'' என்றார்கள். ''நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்று கேட்டான். ''வாருங்கள், வந்து மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று பவுல் கூறினான். ''இதைத் தவிர வேறு எதையும் ஒரு தூதன் பரலோகத்திலிருந்து வந்து கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்“ என்று பவுல் கூறியுள்ளான். அதுவே சத்தியமாயிருக்கிறது! இதை நான் கூறுவதற்கு மட்டுமே பொறுப்புள்ள வனாயிருக்கிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஒலிநாடாக்களின் வாயிலாக நான் உங்களுக்கு மட்டும் கூக்குரலிடவில்லை; ஏனெனில், அவைகள் எவ்விடமும் போவதை நான் அறிந்திருக் கிறேன். அதற்காகத் தான் அவைகள் உள்ளன. 121.ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். அவள் வார்த்தையின் ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள். மோவாப் வஞ்சிக்கப்பட்டது. நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் வஞ்சிக்கப்பட்டனர். சபையானது வஞ்சிக்கப்பட்டது. ஸ்தாபனங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன, பாருங்கள். வார்த்தையோடு நிலைத்திருங்கள். அது ஒன்றே வழி. அதோடு சரியாக நிலைத்திருங்கள். வார்த்தையின் எந்தவொரு பாகத்தைவிட்டும் அகன்று விடாதீர்கள். அதோடு நிலைத்திருங்கள். தேவன் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாரோ, அதில் சரியாகச் செல்லுங்கள். யார் என்ன சொன்ன போதிலும், அதைப் பற்றி கவலைப்படாமல், தேவன் வகுத்துள்ள கோட்டில் நில்லுங்கள். 122.நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் தங்களுடைய ஸ்தானத்தை இழந்தனர். அதை நாம் அறிவோம். அவள் நியாயத்தீர்ப்பில் எழும்பிவருவாள். அவள் சத்தியத்தை எப்பொழுதாவது கேட்டிருந்தால் அவள் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அது சரிதான். இயேசுவை எங்கே நீங்கள் விட்டுவிட்டீர்களோ, அவ்விடத்தைத் தவிர வேறு எங்கும் அவரைக் காணமுடியாது. யூதாஸ் எழும்பி வரக்கூடும்... நினைவில் கொள்ளுங்கள். ''நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர், அவர்கள் பிசாசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கக் கூடுமோ?'' என நீங்கள் கேட்கிறீர்கள். நிச்சயமாக அப்படித்தான். “பரிசுத்தமாக வாழ்கிறார்கள்'' என்று கூறலாம். ஆம் ஐயா, யூதாஸும் அவ்வாறே இருந்தான். அவன் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு, தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித்து, பிசாசுகளைத் துரத்தினவனாக இருந்தான். ஏனையோர் இருந்ததைப் போலவே அவனும் ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டான். ஆனால் பெந்தெகொஸ்தே வந்த பொழுதோ, அவன் தன்னுடைய நிறத்தை காண்பித்தான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. அவன் தன் குதிகாலைத் தூக்கி, கர்த்தராகிய இயேசுவை மறுதலித்தான். சபைகளும் அதையே செய்தன. பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பெறும் வேளை வந்த போது, அவர்கள் அதிலிருந்து விலகிப்போனார்கள். ஓ, இவைகளைப் படித்துக் கொண்டிருக்கும் வகுப்பே, இதை நீங்கள் காணவில்லையா? 123.ஓ, இப்பொழுது இன்றிரவில் அந்த மகத்தான தலைக்கல், ஆனால் இன்னும் ஒரு க்ஷணம், இங்கே நமக்கு இன்னும் சற்று நேரம் உள்ளது என்று எண்ணுகிறேன். வேறு ஒரு காரியத்தையும் நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். மிருகத்தின் முத்திரை, நாம் வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷம் 13:15, அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அங்கே வாசியுங்கள். வெளி. 13:15. ''... சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது'' (அது என்னவெனில், 'ப்ராடெஸ்டெண்ட் சபைகளுக்கு. ப்ராடெஸ்டெண்ட் சபைகளுக்குக் கொடுக்கப்பட்டது''. அவனுக்கு வல்லமை இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். ப்ராடெஸ்டெண்ட் சபைகள் உண்டாக்கின. சபைகளின் ஆலோசனை சங்கம் மூலமாக, ப்ராடெஸ்டெண்ட் ஐக்கியம் யாவும் இணைக்கப்படுவதற்கான ஒரு ஸ்தானத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. உலகிலுள்ள சபைகள்யாவுக்குமான ஒருங்கிணைப்பான அந்த மகத்தான கட்டிடத்தைப் பற்றி எத்தனை பேர்கள் படித்து அறிந்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? ஐக்கிய நாடுகள் சபையைப் போலவே அதுவும் அங்கே எழும்பியுள்ளது. அவர்கள் யாவரும், அசெம்பிஸ் ஆஃப் காட்சபையினரும் கூட, அங்கே இணைந்து விட்டனர். அவர்கள் அங்கே கூடிவிட்டார்கள். அவர்கள் இங்கே இருக்கிறார்கள், பாருங்கள். நோய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது'' என்று சொல்லப் பட்டதின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. மீண்டும் அதே காரியத்தை நிச்சயமாகவே செய்கிறார்கள். ஏறத்தாழ தங்களுடைய சுவிசேஷ ஊழிய நிலையையே மறுதலிக்கிறவர்களா யிருக்கிறார்கள். இஸ்ரவேலர் ஏனைய ஜாதிகளுக்கு இராஜாக்கள் இருந்ததைப் பார்த்து, ''எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்தும்'' என்று கேட்டது போல், உலகத்தாரைப் போல் ஆகவிரும்பி, தாங்கள் பெரிதாக ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர். பாருங்கள்? 124.“மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது''. வெளி.13:15 மிருகத்தினுடைய சொரூபம்: அதாவது “ப்ராடெஸ்டெண்ட் ஸ்தாபனங்கள்” கத்தோலிக்கம் அல்ல. இது அமெரிக்காவில் உள்ளது, இதைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாருங்கள். ஏனெனில், வெளிப்படுத்தின விசேஷம் 13-ஆம் அதிகாரம் அமெரிக்காவைப் பற்றினதாகும். பூமியிலிருந்து எழும்பி வருகிற மிருகம்... பாருங்கள். ஏனைய மிருகங்கள் யாவும் தண்ணீரிலிருந்து எழும்பி வருகின்றன. அதன் அர்த்தம் என்னவெனில், ''திரள் கூட்டமான ஜனங்கள்“ என்பதாகும். ஆனால் இங்கேயுள்ள இந்த மிருகமோ, ஒரு ஆட்டுக்குட்டியை போல் ஜனங்களே இல்லாத பூமியிலிருந்து எழும்பி வருகிறது; அதற்கு இரு கொம்புகள் உண்டாயிருக்கிறது, அது ஒரு சர்ப்பத்தைப் போல் பேசினது. அவர்கள் அம்மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணினார்கள், அது ஐரோப்பாவில் உண்டாயிருந்தது. அதற்கு இங்கே ஒரு சொரூபத்தை உண்டு பண்ணினார்கள். சபைகள் யாவையும் ஒன்றாக இணைத்து, அவ்வாறு இந்த ப்ராடெஸ்டெண்ட் ஐக்கியத்தை உருவாக்கி, பின்பு, ஏனைய அனைத்து சபைகளையும் நிர்ப்பந்தித்து ஒன்று சேரச் செய்வார்கள். அப்படி சேராவிட்டால், மிருகத்தின் சொரூபத்தை அவர்கள் பெற்றிருக்காமல், விற்கவோ, வாங்கவோ முடியாதபடி செய்துவிடுவார்கள். 125.இங்கே என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்: அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறு பத்தாறு. (இது யார் என்று நாம் அறிவோம்; அதுதான் ரோமச் சபையின் பரம்பரை குருக்களாட்சியின் போப் ஆகும்). (வெளி.13:16-18). நான் அங்கே போயிருந்த பொழுது நானே அவருடைய ஸ்தலத்தில், அவருடைய சிம்மாசனத்தை அது இருக்கிற வண்ணமாக கண்டேன். இங்கே கத்தோலிக்க காலத்தின் துவக்கத்தில், 3-ம் போனிபேஸ்-ஐ முதல் போப்பாக அவர்கள் ஏற்படுத்தி அமரவைத்த போது இருந்தபடியே அச்சிம்மாசனம் அங்கே உள்ளது. அதன்மேல், அங்கே “வைகாரியஸ் ஃபிலியைடியை (Vicarius Filii Dei) என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அர்த்தம் என்னவெனில், ''தேவகுமாரனுடைய வைகார்” டிஐ'' ''டிஐடி'' (Dei, Deity என்றால் தேவன் என்று அர்த்தம்.-மொழி பெயர்ப்பாளர்). பாருங்கள். “தேவகுமாரனுக்கு பதிலி' அதாவது, தேவகுமாரனைப் போல் உள்ளவர், பூமியில் அவருக்குப் பதிலாக அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தம் கொள்ளும் பெயராகும். வேதாகமத்தைக் கூட மாற்ற சர்வ வல்லமை படைத்தவர், விரும்பும் எதையும் மாற்றிவிட அதிகாரம் படைத்தவர். எனவே, ”மரியே வாழ்க'' என்று கூறும்படி கூறினார். போப் என்ன சொன்னார்? “நமக்கு 'மரியே வாழ்க' என்று ஏற்படுத்திக் கொள்வோம்'' என்றார். அத்துடன் அது முடிவு பெறுகிறது. ஊ ஊ . நாம் இன்னின்னதைச் செய்வோம் என்று போய் சொன்னால், அது தான் அதிகார பூர்வமானது என்கிறார்கள். “தேவனுடைய குமாரனுக்கு பதிலாக அவருடைய ஸ்தானத்தை வகிக்கிறவர்' என்று கூறுகிறார்கள். சமீபத்தில் அவர்கள் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டார்கள்; அதாவது: “மரியாள் அடக்கம் பண்ணப் படவில்லை, அவள் உயிர்த்தெழுந்தாள்'' என்று போப் கூறினார். மரியாளுடைய கல்லறை இன்னமும் இருக்கத் தான் செய்கிறது; அவளை எங்கே அடக்கம் செய்தார்களோ, அவ்விடத்தை அடையாளம் பண்ணிவைத்திருக்கிறார்கள். ஆனால் போப் சொல்லிவிட்டதால், அது உண்மை என்கிறார்கள். பாருங்கள். ஏனெனில், போப் பிழையற்றவராக இருக்கிறார், அவர் தேவனுடைய குமாரனுக்கு பதிலாக உள்ளார், அவர் சொல்வது சரிதான் என்று நம்புகின்றனர். 126.எவராவது, இந்த மிருகமானது யாரைக் குறிக்கிறது, இந்தவல்லமை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய விரும்பினால், வேதம் கூறுகிறது, ஞானமுள்ளவன் எண்களை கணக்குப் பார்க்கக்கடவன் என்று. ஆம், பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்று ஞானமாகும். பாருங்கள்? “ஞானமுள்ளவன் மனுஷனுடைய இலக்கத்தை கணக்குப்பார்க்கக்கடவன்'' என்று கூறப்பட்டுள்ளது. மிருகமானவனின் இலக்கமானது அறுநூற்று அறுபத்தாறு ஆகும். நீங்கள் அந்த பெயரை எடுத்துக் கொண்டு,அதை அகரவரிசையில் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து, அவைகளுக்குச் சரியான ரோம் இலக்கத்தை எடுத்துப் பார்த்தால், அதைக்கூட்டுகையில் அறுநூற்று அறுபத்தாறு தான் வருகிறது. அது சரிதான். 127.“நாம் அந்த மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவோம்'' என்பார்கள். இந்த தேசத்தில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். அது தான் , ஸ்தாபனங்களின் ஒருமித்து கூட்டு சேர்ந்த சபையின் சமஷ்டியாகும். நிக்கொலாய் மதஸ்தினர் ஒன்று சேர்ந்து, தங்களைஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். இறுதியாக அவர்கள் இந்த சகோதரத்துவ ஐக்கியத்தை இணைத்து, கத்தோலிக்கராக ஆகாமல், ஆனால் சகோதர ஐக்கியத்தில் ஒன்றிணைந்து, கம்யூனிசத்தை ஒழித்துக்கட்டமுயலுவார்கள். வேதம் கூறுகிறபடி, தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அவர்களைப் பழிவாங்கவே கம்யூனிசத்தை தேவன் எழுப்பினார். அது மிகவும் சரியாக இருக்கிறது. அவர்கள் சிந்திய இரத்தத்தினிமித்தம் பழிவாங்க அவர்கள் ஒரு மணி நேரமளவும் அந்த மிருகத்திற்கு அதிகாரம் அளித்தனர். அந்த வாட்டிகன் நகரைஅணுகுண்டோ அல்லது மற்ற எதுவுமோதாக்கு கையில், ரோமகுருக்களாட்சி இனி இல்லாமற் போய்விடும். ''உலகில் கொல்லப்பட்ட ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவளில் காணப்பட்டது' என்று வேதம் கூறுகிறது. அவள் அங்கே இருக்கிறாள். இங்கே அதற்குரிய சொரூபம் உள்ளது, அதுவே, சபைகளின் மகாசம்மேளனம் ஆகும். கதவுகளை நாம் அடைத்து விடுவதற்காக வேளையானது அதிக தூரத்தில் இல்லை, அல்லதுஸ்தாபனத்தின் அடையாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விடும். நாம் வாசல்களை அடைத்து விடுவோம். அது சரிதான். அதை விட நாம் நன்கு அறிவோம். 128.இப்பொழுது, இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன்னர், காரியத்தின் கடைத் தொகையை கவனிக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது, தேவனுடைய முத்திரையானது பரிசுத்த ஆவியாகும். நீங்கள் யாவரும் அதை அறிவீர்களல்லவா? நல்லது, பரிசுத்த ஆவியே தேவனுடைய முத்திரை என்று நாம் யாவரும் அறிவோம். வெளிப்படுத்தின விசேஷம் 9ம் அதிகாரம் 1 முதல் 4 முடிய உள்ள வசனங்களில், அவர்கள் யாவருடைய நெற்றிகளில் முத்திரையைப் பெற்றிருந்தார்கள் என்பதைக் காண்கிறோம். 1கொரிந்தியர் 1:22ல் பவுல் கூறுகிறான், அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். ''எபேசியர் 4:30ல் பவுல், “பரிசுத்த ஆவியை துக்கப் படுத்தாதிருங்கள் என்று கூறியுள்ளான். அந்த தூதனானவர் வந்து அவ்வாறு அவர்களுடைய நெற்றியில் முத்திரையிடுகிறார். அவர் வந்து உங்கள் நெற்றிகளில் ஒரு பொட்டு போன்ற ஒன்றை இடுவார் என்ற அர்த்தமல்ல. உங்களுடைய நெற்றி உங்களுக்குக் கிடைக்கும் வெளிப்படுத்துதலாகும், பாருங்கள். உங்களுடையகரமானது, அதைக் குறித்து நீங்கள் கிரியை செய்வதைக் குறிக்கிறது. பாருங்கள், அது ஒரு ஆவிக்குரிய அடையாளமாகும். அவர் ஒரு பெரிய முத்திரையை எடுத்து அவ்வாறு உங்களைக் குத்துகிறதில்லை. ஓ, இல்லை. 129.சில ஆண்டுகளுக்கு முன்பாக என்.ஆர்.ஏ. என்றவொரு நிறுவனம் ஏற்பட்டபோது அதுதான் அந்த காரியம் என்று அவர்கள் கூறினர். அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். அதுவல்லஅது, ஏற்கனவே அது வந்துவிட்டது. ரொம்ப காலத்திற்கு முன்பாகவே அது ஆரம்பித்துவிட்டதாக வேதம் கூறுகிறது. இப்பொழுது அது முடிவடையப் போகிறது. ஆனால் அவர் முத்திரையிடப்பட்டவர்களை அடையாளமிட்டார். பாருங்கள்? முதலாம் முத்திரையானது எவ்வாறு காணப்பட்டது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். அவர்களது கிரியைகள் கிறிஸ்துவின் கிரியைகளாயிருந்தன. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்தார்கள், அவர்கள் குணமடைந்தனர். அவர்கள் எல்லாவிதமான அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தனர். அவர்களுடைய நெற்றிகளில், அவர்தேவனுடைய குமாரன் என்ற வெளிப்பாடு முத்திரையாக இடப்பட்டிருந்தது. அவர்கள் அவரோடுகிரியை செய்து கொண்டிருந்தனர். கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை. அதுவே அதற்குரிய அடையாளமாயிருக்கிறது. 130.நீங்கள் கூறுகின்றீர்கள், “அவர் மூன்றாம், அல்லது இரண்டாவது ஆள்'' என்று. உங்களுக்கு இன்னும் முத்திரை கிடைக்க வில்லை. எனவே அதை விட்டுவிடுங்கள். பாருங்கள், வேதாகமத்தில் அவ்விதமான ஒன்று இல்லையாதலால், அதன் தாள்களில் இருந்து நீங்கள் முடிவடைந்து போய்விட்டீர்கள். ''நல்லது, நாங்கள் ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் பரிசுத்த திரித்துவத்தில் விசுவாசங் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது காகிதத்திலேயே இல்லை, பாருங்கள். ஏனெனில், வேதத்தில் திரித்துவம் என்ற ஒன்று குறிப்பிடப்படவே இல்லை. வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தையை கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். 131.(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி... குமாரனுக்குள், குமாரத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியாக உங்களில் வாசம் பண்ணுகிறார்; அதுவே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாக உள்ளது. அதே தேவன் தான் அவர். பரிசுத்த ஆவியானவரே இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார். 'இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது'' என்று இயேசு கூறினார். ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்கு திரும்பிப் போகிறேன்'' என்று இயேசு கூறினார். மீண்டும் பரிசுத்த ஆவியானவராக. “நான் உங்களோடு இருப்பேன், உங்களில் முடிவு வரைக்கிலும், முடிவு காலம் வரையிலும் இருப்பேன். காலம் முழுவதிலும், முடிவு பரியந்தமும், உங்களுக்குள் இருப்பேன்” என்றார். ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் செய்த கிரியைகள் யாவும் எல்லா காலங்களிலும் விளங்கும், அதுவே விசுவாசிக்குரிய அடையாளமாக காலமெல்லாம் இருக்கும். நீங்கள் போய் பிரசங்கித்தது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள், அப்பொழுது அவர்கள் என்னுடைய ஆவியினால் நிரப்பப் பட்டிருப்பார்கள், அவர்கள் விசுவாசிகளா யிருப்பார்களானால், உலகத் தின்முடிவு பரியந்தமும் இந்த அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும்.'' அவர் மகிமையில் ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். ஒருநாளில் அவர் திரும்பவருவார் என்று நாமெல்லாரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவே தேவனுடைய முத்திரையாக உள்ளது, நாம் அதை அறிவோம். 132.இதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் மட்டுமே முத்திரையிடப்படுகின்றனர். அவர்கள் மீதியாக இருக்கப் போகும் யூதர் கூட்டமாகும். ஆனால் இந்த புறஜாதி மணவாட்டியில், அவர்கள் ஆயிரம் பதினாயிரம் பேர்களானவர்கள் ஆவர்; அவர்கள் முத்திரை யிடப்பட்டவர்கள். ஏனெனில் அவர்கள் காலங்கள் தோறும் இரத்த சாட்சிகளாக இருந்தார்கள், ஒவ்வொரு காலங்களிலும் அவர்கள் இவ்வாறு இருந்து வந்தார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் எழும்புவார்கள். நியாயத்தீர்ப்பின் வெண்கலம் போன்ற பாதங்கள் அந்நாளில் நிற்கையில், என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்? அந்த இரத்த சாட்சிகளும் அங்கே நிற்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் அங்கே நிற்பார்கள்அவர்களின் முன்பாக, இந்த இரத்த சாட்சிகளை மரத்தில் தூக்கி எரித்தும், சிங்கத்தின் குகைகளில் தூக்கி எறிந்ததுமான நிக்கொலாய் மதஸ்தினரே இவர்கள், அந்த இரத்த சாட்சிகள் இவர்களுக்கெதிராக வழக்கை எடுத்துக் கூறி அவர்கள் மேல் குற்றஞ் சாட்டும் வழக்குரைஞர்களாக அல்லது ஜூரிகளாக அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது பரம நீதிபதியானவர், இந்த ஜூரிகளிடம், 'நீங்கள் அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தீர்களா?'' என்று கேட்பார். ''நான் என் ஜீவனை ஒரு சிங்கத்தின் வாயில் விடும் போது, அப்பொழுது என் ஜீவனை இவர்களுக்காக நான் முத்திரையிட்டேன்'' என்பார்கள். ஓ, சகோதரனே! “என்னை விட்டு அகன்று போங்கள் என்று இயேசு கூறியதைப் பற்றி பேசுகிறீர்களே, நரகமானது அவர்களுக்கு நலமாயிருக்கும். அதுதான் சரி. 133.''உறுதியாக பற்றிக்கொள். தாங்களைத் தாங்களே நிக்கொலாய் மதஸ்தினர் என்றும், ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்றும் அழைத்துக்கொள்ளுகிறார்கள், ஆனால் அவர்கள் அப்படியல்ல என்பதை நான் அறிந்திருக்கிறேன்'' பார்த்தீர்களா? ஓ, என்னே ஒருவேளை வருகிறதாயிருக்கிறது, என்னே ஒரு பயங்கரமான வேளையது. தேவன் பழிவாங்குவார் “நான் பழிவாங்குவேன்'' என்று கர்த்தர் கூறுகிறார். 'நான் பதில் செய்வேன்” என்கிறார். ஒவ்வொரு பொல்லாங்கான கிரியைக்கும் நீதியான தீர்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கிற ஒவ்வொரு கிரியையும், அல்லது உங்கள் சிந்தனையும், உங்களுக்கெதிராக அங்கே அந்த மகத்தான காந்த ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் சிந்தையில் தோன்றிய ஒவ்வொரு பொல்லாத எண்ணமும் அங்கே காணப்படும். பிள்ளைகளே, மனந்திரும்புங்கள்! அதிலிருந்து விடுபட ஒரேயொரு வழி மட்டுமே உண்டு, கிறிஸ்துவுக்குள் வாருங்கள். அவருடைய வாழ்வில்பட்ட அவ்வினிய ஐங்காயத்தினுள் நீங்கள் பிரவேசிக்கையில், அவர் சரீரத்திலுள்ள அவ்வைந்து விலையேறப்பெற்ற காயங்களுக்குள் நீங்கள் பிரவேசித்து, அங்கே காயத்தில் ஓடும் இரத்தத்தை நீங்கள் காண்கையில், அங்கே மறைந்து கொண்டு, 'பிளவுண்டு இருக்கும் கன்மலையே, நான் நல்லவனல்ல, என்னை உள்ளே மறைத்துக்கொள்ளும், பிளவுண்ட கன்மலையே' என்று கேளுங்கள். விலையேறப் பெற்ற பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உணருங்கள். உங்கள் சுயத்திற்கு மரித்து, கிறிஸ்துவின் சரீரத்தினுள் பிரவேசித்து, எழும்பி, உங்களைச் சுற்றியுள்ள புதிய உலகிற்குள் விழித்திடுங்கள். நீங்கள் முன்பு சிநேகித்திருந்த பாவங்கள் உங்கள் பின்னாகப் போய்விட்டன. ஓ, வருங்காலமோ, நிகழ்காலமோ அல்லது வேறு எந்த ஒன்றுமே உங்களை அதிலிருந்து பிரித்திடாது. உங்களுடைய மீட்பின் நாள் பரியந்தமும், நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். அவர் யார் என்பதைப்பற்றிய வெளிப்பாடு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மரணத்தி னின்று நீங்கலாகி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் இருதயத்தில் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 134.அப்பொழுது உங்கள் கரத்தின் கிரியைகளை கவனித்து பாருங்கள். இனிமேல் நீங்கள் திருடுவதில்லை, இனிமேல் நீங்கள் தீமை செய்வதில்லை. உங்கள் கரங்கள் எல்லா இரத்தப்பழிகளுக்கும் நீங்கலாயிருக்கின்றன. அப்பொழுது நீங்கள் எழும்பி நின்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எது சரியோ அதையே பேசி, எது சரியோ அதன்படி ஜீவித்து, எது சரியோ அதையே செய்கின்றீர்கள். பரிசுத்த ஆவியானவரும் உங்களோடிருந்து, ஒவ்வொரு நாளும் அற்புத அடையாளங் களைக் காண்பிக்கிறார்; ''நீ என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை, நான் உன்னோடு இருக்கிறேன், இப்பொழுதே நான் உன்னோடு இருக்கிறேன், நீ எங்கிருந்தாலும் சரி, நான் உன்னோடு இருக்கிறேன். இருண்ட வேளைகள் வழியாகவும் எவ்விடத்தும் நான் உன்னோடு செல்லுவேன்“ என்று தேவன் உங்களோடு பேசித் தெரியப்படுத்துகிறார், ஓ, என்னே ஓர் நங்கூரம்! இளைப்பாறும் துறைமுகத்தில் நான் என் ஆத்துமாவை நங்கூரமிட்டேன் இனி கொந்தளிக்கும் கடலலைகள் மேல் பயணமில்லை, ஓ, ஆழ் கடலில் புயல் கொந்தளித்தாலும், நான் என் இயேசுவில் பத்திரமாயுள்ளேன். 135.ஏன் மரணம் கூட ரீங்காரமிட்டுக் கொண்டு, இந்நாட்களில் ஒன்றில் உங்களைச் சுற்றிவந்து, ஒரு வண்டைப்போல் உங்கள் தலையைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே வரக்கூடும். அப்பொழுது நீங்கள் மரணத்தை நோக்கி, ''ஓ மரணமே, உன் கூர் எங்கே?'' என்று கேட்கலாம். பின்னால் அமர்ந்திருக்கிற எனது சிறிய மகள் சாராள் அன்றொரு நாளில் எழுதியிருந்ததைப்போல்: அதாவது அவள் பிரசங்கத்தை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவளும், சகோதரன் காலின்ஸ் அவர்களின் மகளும், நான் என்ன சொன்னேனோ, அதின் பேரில் குறிப்பெடுத்திருந்தனர். நானும், சாராளின் தாயும் அவள் எழுதினவைகளை வாசித்துக் கொண்டிருந்தோம். ''வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்'' (Book of Revelation) என்பதற்கு பதிலாக 'புரட்சிகளின் புத்தகம்'' (Book of Revolutions) என்று எழுதிவிட்டாள். ஆமென், அவள் கூறினாள். முடிவில் நான் மரணத்தைப்பற்றிக் கூறிய அச்சிறு கதையை நீங்கள் அறிவீர்கள். அறிவீர்கள். மரணத்திற்குக் கொடுக்கு இல்லை என்று கூறியதைக் கேட்டிருக்கிறீர்கள். அக்கதை கூறப்பட்டபோது நீங்கள் இங்கே இருந்தீர்களா? ஒரு காலத்தில் மரணத்திற்குக் கொடுக்கு இருந்தது, ஆனால்.... 136.மனுஷகுமாரனா இல்லையா என்பதைப் பற்றி சாத்தான் அதிகம் நிச்சயமில்லாதவனாக இருந்தான். இயேசுவண்டை சாத்தான் வந்து கூறியதை பாருங்கள். நல்லது உம்மால் அற்புதம் செய்யக்கூடுமானால், நீர் ஓர் அற்புதம் நடப்பிக்கிற நபராக இருப்பீரேயானால், நீர் தேவனுடைய குமாரனே யானால், நீர் ஒரு அற்புதம் நடப்பிப்பதை நான் காணட்டும்; இப்பொழுது நீர் பசியாயிருக்கிறீர்; நாற்பது நாட்களாக ஒன்றுமே நீர் புசிக்கவில்லை; நீர் ஏன் அந்தக் கல்லை அப்பமாக்கி, உட்கார்ந்து அதைப் புசிக்கக்கூடாது? நீர் அதை செய்வதை நான் பார்க்கட்டும். அப்பொழுது நீரே தேவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிப்பேன்'' என்று கூறினான். இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக: ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,... ஒவ்வொரு வார்த்தை யினாலும் பிழைப்பான்' என்று கூறினார். ஓ, என்னே! அங்கே சாத்தான், தான் மோசேயை சந்திக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான், அல்லவா? மோசே கற்பனைகள் எழுதிய கற்பலகையை கீழேபோட்டு உடைத்தெறிந்தான். ஆனால் சாத்தான், தான் மோசேயை விடப்பெரியவரை சந்தித்தாக அறிந்தான். 137.பின்பு, சாத்தான், இயேசுவை உயரத்திலே எடுத்துச் சென்று, ''இவ்வுலக இராஜ்யங்களையெல்லாம் பாரும், அதோ அங்கே அமெரிக்கா இருக்கிறது, அங்கே க்ரேட் பிரிட்டன், அங்கே அந்த இராஜ்யங்களெலாம் வரவிருக்கும் ஆண்டுகளில் வரப்போ கின்றன. அவைகள் யாவும் எனக்கு சொந்தமாயுள்ளன நீர் அதை அறிவீர்.' (அவன்தான் அவர்களை ஆளுகிறான்) 'அவைகள் எனக்குச் சொந்தமானவை; நான் அவர்களை ஆட்டுவிக்கிறேன், நானே அவர்களை யுத்தத்திற்கு அனுப்புகிறேன். அவர்களுக்கு என்ன செய்ய நான் விரும்புகிறேனோ அதை நான் செய்கிறேன், அவர்கள் என்னுடையவர்கள், நீர் என்னைத் தொழுது கொண்டால், அந்த இராஜ்யங்களை உமக்குத் தருவேன்'' என்றான். (மத். 4:8-9). அப்பொழுது இயேசு, ''அப்பாலே போ சாத்தானே'' என்றார். எப்படியும் முடிவில், தான் அனைத்துக்கும் சுதந்தரவாளியாகி விடத்தான் போகிறோம் என்பதை அவர் அறிந்திருந்த படியினால், ''அப்பாலே போ சாத்தானே'' என்றார். 138.இறுதியாக அவர்கள் ஒரு நாளில் அவரைப் பிடித்தபொழுது, அவர்கள் ஒரு துணியை எடுத்து அதைக் கொண்டு அவரது முகத்தை மூடினார்கள். அவர்கள் அவரது தலையைச்சுற்றி கட்டி விட்டிருந்தது, ஒரு பழைய அழுக்கான துணியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவரோ அங்கே காயமுற்றவராய், இரத்தம் சிந்தினவராக காட்சியளித்தார். அதிகாலையில் கடுங்குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அவர்கள் அவரை ஏற்கனவே சாட்டையால் அடித்தார்கள், அவரது தோள்கள் வழியாக இரத்தமானது பீறிட்டு ஓடியது, அவர் மேல் சுற்றி எதையோ அவர்கள் எறிந்தார்கள். இரத்தமானது அவரது முதுகில் அப்படியே பசையைப்போல் ஒட்டிக்கொண்டிருந்தது; அவர் சிரசின்மேல் முட்கிரீடத்தை அழுத்தி அணிவித்தார்கள். அவரது முகத்தின் மேல் இரத்தமும், போர்ச்சேவகர் அவரது முகத்தில் துப்பிய எச்சிலுடன் நிறைந்தவராக அங்கே உட்கார்ந்திருந்தார். அது ஒரு கோரமான காட்சியாக இருக்கவில்லையா? (ஓ தேவனே) ''நான் அப்பொழுது அங்கே இருந்திருப்பேனென்றால், அது விஷயத்தில் ஏதாவது செய்திருப்பேன்' என்று நீங்கள் இப்பொழுது கூறலாம். நல்லது, நீங்கள் ஏன் இப்பொழுது அந்த விஷயத்தில் ஏதாவது செய்யக்கூடாது? ஏனெனில் நீங்கள் இருந்தால், இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்கிறீர்களோ, அதையே தான் அக்காலத்தில் இருந்திருந் தாலும் செய்திருப்பீர்கள். 139.அங்கே அவர் பரிகசிக்கப்பட்டு, முகத்தில் காறித் துப்பப்பட்டவராக உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது சீஷன் அங்கே நின்றிருந்தது, “ஓ என்னே! இப்படியும் நடக்கக்கூடுமோ? அந்த மாமனிதர் கல்லறையிலிருந்து மரித்தவனை உயிரோடு எழுப்ப முடிந்தது. இப்பொழுது அவரது நிலையைப் பாருங்கள்” என்று கூறினான். ஆனால் அவனோ, வேதவாக்கியங்களின்படிதான் அக்காரியம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தவறினான். ஆகவே அவரது முகத்தில் எச்சிலும், இரத்தமும் நிறைந்தவராகக் காணப்பட்டார். ஒரு துணியைக் கொண்டு அவரது கண்களை மறைத்து கட்டி, “இதோ இந்த மனிதன் இருதயத்தை பகுத்தறியும் ஆவிக்குரிய வரம் கொண்டவர் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் ஒரு தீர்க்கதரிசி என்றார்கள். மக்களிடம் அவரால் கூற முடிந்தது, கிணற்றண்டையில் நின்றிருந்த அந்த ஸ்திரீயின் பாவங்களைக் கூறிவிட்டார். சீமோனிடம் அவனது தந்தையின் பெயரை கூறினார். அவனது பெயர் யோனா என்பதையும் கூறினார், மற்றும் யாவற்றையும் சங்கதிகளையும் கூறி விட்டார். இப்பொழுது அவ்வாறு அவரால் கூற முடிகிறதா என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்'' என்றார்கள். அவர்கள், ”அவருக்கு ஒரு சிறிய சோதனை கொடுப்போம்'' என்றார்கள். அது அந்த மக்களில் பிசாசு அவ்வாறு கிரியை செய்து கொண்டிருந்ததாகும். அவரது கண்களைத் துணியால் கட்டி, ஒரு குச்சியினால் அவரது தலையில் அடித்து, 'நீ தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தது யார் என்பதைச் சொல்'' என்றார்கள். அவர் தன் வாயைத்திறக்கக் கூட இல்லை. அவர் பேசாமல் அமர்ந்திருந்தார். சாத்தான் கூறினான் “அது தேவனாயிருக்க முடியாது என்று அறிவாயாக''என்று. அதைத்தான் பழைய ஸ்தாபனமானது இன்று கூறுகிறது, ''அந்த உருளும் பரிசுத்தர் கூட்டமானது தேவனுடையதாக இருக்க முடியாது'' என்று. ஆனால் அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது. பாருங்கள்?” அக்காரியங்களையெல்லாம் தேவன் செய்ய வில்லை. அவர்கள் மனோவசியத்தால் கிரியை செய் கிறவர்கள். அவர்கள் குறிசொல்லுகிறவர்கள் என்கிறார்கள். அவர்கள் அது என்னவென்று அறிந்துகொள்ள வில்லை, அவ்வளவு தான். 140.எனவே அவர்கள் அவர் மேல் அங்கியை அணிவித்து மலையின் மேல் ஏறத்தொடங்கினார்கள். அவர் மனிதனாக இவ்வுலகில் இருக்கையில், அவருக்காக மரியாளும், மார்த்தாளும், முழுவதும் தையலேயில்லாமல் தயாரித்தளித்திருந்த அந்த ஒரே அங்கியைத்தான் அணிந்து கொண்டிருந்தார் என்று நான் ஊகிக்கிறேன். அவருக்கிருந்த ஆடையெல்லாம் அதுதான். அதை அவரது முதுகின் மேல் போட்டார்கள். அவர் மலையின் மேல் ஏறிச்செல்லுகையில், அவரது அங்கியின் மேல் சிறு இரத்தக்கறைகள் காணப்பட்டன. அவரோ, அந்த பழைய சிலுவையை இழுத்துக்கொண்டே தள்ளாடிக்கொண்டே சுமந்து சென்றார். அவரது அந்த பலவீனமான சரீரத்தோடு அவர் போகையில் அவர்கள் அவரை சாட்டையால் அடித்துக்கொண்டேயிருந்தார்கள், மற்றும் இவ்வாறான அனைத்து பாடுகளையும் அவர் சகித்துக்கொண்டே சென்றார். அந்த பழைய சிலுவை அவரது தோளில் அவரை அழுத்திக் கொண்டிருக்க, அவர் தள்ளாடியவாறே தொடர்ந்து சென்றார். அந்தச் சிறு சிறு கறைகள் வர வர பெரிதாகி, பெரிதாகி, கடைசியில் ஒரு பெரிய புள்ளியாக கறையாக அவரது அங்கியில் ஆகியது. பழைய சாத்தானானவன், மரணம் என்னும் விஷக் கொடுக்கை உடைய ஒருதேனீயின் ரூபத்தில், அவரண்டை வந்து, ''ஹ ஹ ஹா அவரா? தேவன் அவ்வாறு செய்யமாட்டார், அவர் வெறும் ஒரு மனிதன் தான், அவர் நடிக்கிறார்“ என்றான். அவன் இன்னமும் அவ்வாறே நினைக்கிறான். ''அவர் அவ்வாறு நடிப்பாக செய்கிறார் அவர் தேவனாயிருந்தால், அவன் அவரை கொடுக்கால் கொட்டினால், அவர் மரிக்க முடியாது. எனவே நான் அவரை கொடுக்கால் கொட்டி என்ன நடக்கிறது என்று பார்க்கப்போகிறேன். அவரை சோதித்துப் பார்ப்பேன்” என்றான். 141.எனவே, அவன் இயேசுவை சிலுவையில் அறையச் செய்த பொழுது, அவர் உடலில் தனது கொடுக்கை வைத்துக்கொட்டி னான், ஆனால் சாத்தான் தன் கொடுக்கை வைத்துக்கொட்டிய பொழுது, அவனது கொடுக்கை அவன் இழந்துவிட்டான். அவர் மனிதனை விட மேலானவர். அந்தத் தடவை அவன் தேவனைக் கொட்டிவிட்டான். அக்காரணத்தினால்தான், பவுல் எழுதுகையில், ''ஓ மரணமே...'' என்றான். ஒரு தேனீ ஆழமாக ஒன்றினுள் கொட்டிவிட்டால், அதன் பிறகு இனிமேல் அதனால் கொட்டவே முடியாது என்று அறியுங்கள். அந்த விஷத் தேனியாகிய சாத்தான் ரீங்காரமிடுவான், ஓசையெழுப்புவான், எல்லாம் செய்வான், ஆனால் அவனால் இப்பொழுது கொட்டமுடியாது, ஏனெனில், அவன் ஏற்கனவே தனது கொடுக்கை இழந்துவிட்டான், அவனிடம் கொடுக்கு இல்லை. பவுலின் தலையை வெட்ட அதற்கென ஒரு இடத்தை அவர்கள் கட்டிக்கொண்டிருக்கையில், பவுலைச் சுற்றி அந்த விஷத்தேனீ ரீங்காரமிட்டது, அப்பொழுது அவன், ''ஓ மரணமே, உன் கூர் எங்கே?'' என்றான். கல்லறை கூறியது, “பவுலே நான் உன்னை என்னிடம் சேர்த்துக்கொள்வேன், நான் உன்னை புழுதியில் புரட்டிப் போடுவேன்' என்று. நான் பவுலை சிரச்சேதம் செய்து, குழியில் வீசியெறிந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன். கல்லறை கூறியது, ”நான் உனது சரீரத்தை அழியச்செய்து, அழுகிப் போகச்செய்வேன்'' என்று. “ஓ பாதாளமே, உன் ஜெயம் எங்கே'' என்று பவுல் கூறினான். பாருங்கள்? ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்''. மரணம் தனது கூரை அவனிடத்தில் இழந்தது. ”நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். ஆமென். ''விரும்பினால் இப்பொழுதே தலையை வெட்டிக்கொள்'' என்றான். அதுதான் உண்மையான கிறிஸ்தவ ஆவியாகும். அதுவே காரியம், சகோதரனே. 142.உங்களுக்கு அறிந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டால், மிருகத்தின் முத்திரை எங்ஙனம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அறியுங்கள். நான் இதைப்பற்றிக் கூற விரும்புகிறேன். ஏனெனில், அதைப்பற்றிக் கூறிவிட்டு முடித்துவிடலாம் என்று நான் எண்ணினேன். எவ்வாறு மிருகத்தின் முத்திரையானது பெறப்படுகிறது? அதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதன் விளைவுகள் என்ன? மிருகத்தின் முத்திரையானது என்னவாயிருக்கிறது? எது தேவனுடைய முத்திரையாயிருக்கிறது என்பதை நாம் அறிவோம். தேவனுடைய முத்திரையானது என்ன? நல்லது, எபேசியர் 4:30ஐ எடுத்துக்கொள்வோம். அதைப்பற்றி அங்கே நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம். உங்களில் யாராவது வெளிப்படுத்தின விசேஷம் 9:1-4ஐ எடுக்கலாம். இன்னொரு வசனம் 2 கொரிந்தியர் 1:2. அதைப்பற்றி பல இடங்களில் உள்ளது. அவைகளில் சிலவற்றை நான் குறித்து வைத்துள்ளேன். ஆனால் நாம் எபேசியர் 4:30ஐ எடுத்துக் கொண்டு, அங்கே நீங்கள் தேவனுடைய முத்திரையானது என்னவென்று கண்டுகொள்ளலாம். வேறுபல வசனங்களிலும் இதைப்பற்றிக் காணலாம். முத்திரை என்ற வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொண்டு, உங்களது ஒத்தவாக்கிய அகராதியில் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். எபேசியர் 4:30 - இதைக் கவனியுங்கள். “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” 143.தேவனுடைய முத்திரையானது என்ன? அது பரிசுத்த ஆவியாகும். அது சரி. “தேவனுடைய ஆவியைப் பெற்றிராதவன் என்னுடையவனல்ல என்று தேவன் கூறியுள்ளார் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், நீங்கள் தேவனுடைய பாகமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் அவருடையவர்களாக இருக்கிறீர்கள். அவர் உங்களை முத்திரையிட்டு, உங்களில் இருக்கிறார், உங்களில் கிரியை செய்துகொண்டு இருக்கிறார். அவர் செய்த அடையாளங்களை நீங்களும் செய்கிறீர்கள். வேதத்தைக் கற்கும் வகுப்பில் இங்கு உள்ளோரே, நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் புரிந்து கொண்டுவிட்டீர்களா? தேவனுடையவர்களாக ஆவதற்கு பரிசுத்த ஆவியே தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவிதான் தேவை. அவ்வாறு நீங்கள் பரிசுத்த ஆவியையுடையவர்களாக இருப்பின், இயேசு செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்கிறீர்கள். பார்த்தீர்களா? உங்களுடைய அன்பானது.... அவர்கள் உமது முகத்தில் காரி உமிழ்ந்து, உம்மைச் சுற்றி நின்று அடித்தபோது, உம்மில் கசப்பின் வேர் எதுவுமே இல்லை. அவர் அவர்களை உற்று நோக்கி விட்டு, ''பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்றார். அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் பாருங்கள். 144.அதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவரது இரத்தத்தை சிந்த வேண்டுமென்று, அவரது சொந்தப் பிள்ளைகளே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவர், பூமியிலிருந்து அவர் முளைத்தெழும்பச் செய்த மரத்தினால் உண்டாக்கப்பட்ட சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார்; அவரது சொந்தப் பிள்ளைகள் (பிதாக்களே, உங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், உங்கள் சொந்தப் பிள்ளைகள்). அவருக்கெதிராகக் கூக்குரலிட்டு, ''அவனை அகற்றும், கள்ளனாகிய அந்தப் பரபாஸை விடுதலையாக்கும்'' என்றார்கள். ஓ, நான் அந்த பரபாஸாயிருந்தேன். மரிக்கிறதற்கு பாத்திரவானாயிருந்தவன் நான், அவரோ என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். சிறையில் அந்த பரபாஸ் என்பவன் இருந்த பொழுது, அங்கே அந்த நூற்றுக்கதிபதி மிகுந்த ஓசையோடு நடந்து வந்து கதவைத் திறந்தபொழுது, பரபாஸ் எவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்திருப்பான்? 'இன்னும் சிறிது நேரத்தில் நான் மரித்துப்போய்விடுவேன், நான் ஒரு கொலைக்காரன், நான் ஒரு திருடன். இன்று என்னை அவர்கள் கொன்றுவிடப் போகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்பதை அறிவேன். இன்று பஸ்கா தினமாகும், எனவே நான் உண்மையிலேயே நான் இன்று மரிப்பேன் என்று அறிவேன்'' என்று பரபாஸ் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான். முந்தின இரவு முழுவதும் நடுங்கினவனாக காணப்பட்டான். நிம்மதியற்ற எந்தவொரு பாவியையும் போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். முதலாவதாக, அங்கே அந்த காவலாளி வருகிறான். அப்பொழுது பரபாஸ், “ஓ, ஓ, இதோ இவன் வந்துவிட்டான், நான் போய்விடவேண்டும்'' என்றான். அப்பொழுது சாவியைப் போட்டுக்ளிக் என்று காவலாளி கதவைத்திறந்தான். காவலாளி அட்டென்ஷனில் நின்று, “பரபாஸே,வெளியே வா” என்று அழைத்தான். ''ஊ ஊ ,ஆம், நான் போகவேண்டும் என்பதை அறிவேன். நான் போய்க்கொண்டிருக்கிறேன்'' என்றான் பரபாஸ். 'நீ போகலாம், உனக்கு விருப்பமானபடி செய்து கொள்ளலாம்'' என்றான் காவலாளி. ''என்ன?'' என்றான் பரபாஸ். 'நீ விடுதலையாயிருக்கிறாய், நீ வெளியே போகலாம், நீ போய் உனக்கு விருப்பமானபடி செய்துகொள்'' என்றான். ''நான் விடுதலையாகிவிட்டேனா? நீரல்லவா எனக்கு மரண தண்டனை அளித்தீர்'' என்றான். தேவன் அனைத்து பாவிகளையும் மரணாக்கினைக்குள்ளாக்குகிறார். ''நீர் எனக்கு மரண தண்டனை விதித்துள்ளீரே, அப்படியிருக்க நான் எப்படி விடுதலையாகிபோக முடியும்?'' என்று பரபாஸ் கேட்டான். ''இங்கேவா பரபாஸ், அதோ அங்கே அவர் அந்த மலையின் மேல் ஏறிச்செல்வதைப் பார், சிலுவை கல்லின் மேல் மோதும் போது உண்டாகும் சத்தத்தைக் கேள். அவருடைய கைகளில் அவர்கள் ஆணியறைவதனால் உண்டாகும் சத்தத்தைக் கவனி, அங்கே கதறுகிற அவரை நோக்கு, அவர் முகத்தில் உப்பான கண்ணீரும், இரத்தமும் கலந்து காணப்படுகிறதை பார். பரபாஸே, உனது ஸ்தானத்தை அவர் எடுத்துக்கொண்டார். அவர் உனக்காக மரித்தார்“ ''நான் விடுதலையாவதற்காக அவர் மரித்தார்“ என்றா கூறுகிறீர்கள்” ''ஆம்'' “ஓ நல்லது, நான் மறுபடியும் கொலை செய்ய ஆரம்பிப்பேன். ''ஓ, என்னே ஒரு நன்றியற்றவன் நீ, நீ மரிப்பதற்கு பாத்திரமானவன். 145.மகிமையின் அதிபதி மரித்த அவ்வற்புத சிலுவையை நான் காண்கையில், என்னுடைய பெருமையெல்லாம் வீண் நஷ்டம் தான். ஓ, என்னே கவிஞன் இவ்வாறு பாடியது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. அவர் உயிரோடிருந்து என்னை நேசித்தார், மரித்து என்னை இரட்சித்தார், அடக்கம் பண்ணப்பட்டு, அவர் என் பாவங்களை சுமந்து தொலைவில் அகற்றினார், உயிர்த்து, இலவசமாக என்னை என்றென் றைக்குமாக நீதிமானாக்குகிறார், ஓர் நாளில் அவர் வருவார், ஓ அது மகிமையான நாளாயிருக்கும். 146.அவர் எனக்காக செய்ததை நான் காண்கையில், அவரை நான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்? நான் எங்ஙனம் அதைச் செய்வேன்? பூமியில் எனக்குள்ள நபர் யாவரையும் இழந்துவிட நான் விரும்புவேன். ஸ்தாபனங்களால் நான் உதைத்து எறியப்படவும், யாவற்றாலும் உதைத்து எறியப்படவும் ஆயத்தமாயிருப்பேன். நான் அங்கே நோக்கிப் பார்க்கையில், நான் மரணாக்கினைக்குள்ளாக்கப் பட்டிருக்கையில், அவரோ என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டுவிட்டார். நிச்சயமாக, கர்த்தாவே, யாற்றையும் வீண் நஷ்டமென்று நான் எண்ணுகிறேன். ஓ, நான் சிலுவையை தழுவிக்கொள்ளட்டும். கர்த்தாவே. கன்மலைகள் இரண்டாகப் பிளந்தன, ஆகாயங்கள் இருண்டன, இரட்சகர் தலையை சாய்த்து மரித்தார், அப்பொழுது திரைச்சீலை கிழிந்து வழியை வெளிப்படுத்தியது பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும், முடிவற்ற நாளுக்கும். 147.ஓ, இயேசுவே, நான் உம்மண்டையில் நெருங்கி தங்கியிருக்கட்டும். உமது பக்கத்திலிருந்து என்னை அகற்றிவிடாதேயும், இரத்தம் வடியும் உமது ஐங்காயங்களை நான் காணட்டும். ஓ பரலோகத்தின் அதிபதியே எப்படியாக அவர் எனக்காக மரித்தார் நான் பிழைக்கும்படியாக அவர் மரித்தார். ஆக்கினைக்குட் படுத்தப்பட்ட ஒருவன்... பாவ சங்கிலியால் நரகத்தின் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஆக்கினைக்குட் படுத்தப்பட்ட, குற்றமுள்ளவனாக, என்றென்றும் அழிந்து போயிருக்கும்படியாக இருந்தேன். ஒருவர் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். அதன்பிறகு அவர்கள்.... இங்கே நான் 18 அல்லது 20 வயதினனாக இருக்கையில், ஒரு நாளிலே பரிசுத்த ஆவியானவர். நான், ''நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன்?'' என்று கூறினேன். அவர் கூறினார், ''அவர் உனது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். நீ அங்கே போய்க் கொண்டிருந்தாய். அவர் உன் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். அவர் அங்கே இருக்கிறார் என்று. “ஓ தேவ ஆட்டுக்குட்டியே, ஓ தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன், நான் வருகிறேன். வெறுங்கையனாக நான் வருகிறேன், உமக்குக் கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை. உம்முடைய சிலுவையை நான் பற்றிக்கொள்கிறேன். கர்த்தாவே, என்னி டம் இருப்பதெல்லாம் அது மாத்திரமே'' என்று நான் கூறினேன். அவர் என்னை உள்ளே எடுத்துக்கொண்டார். கெட்ட குமாரனை அவனது தந்தை உடுத்துவித்தது போல், என்னையும் உடுத்துவித்தார். புத்தாடையை எனக்கு உடுத்துவித்தார். அது என்னுடைய ஆடையல்ல, அது அவருடைய நீதியாகிய வஸ்திரமே, அதைக்கொண்டு என்னை உடுத்துவித்தார். ஒரு விவாக மோதிரத்தை, அந்நாளில் நான் மணவாட்டியோடு இருக்கத்தக்கதாக, என் விரலில் அணிவித்தார். இப்பொழுது கொழுத்த கன்று அடிக்கப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது களிகூர்ந்து கொண்டிருக்கிறோம், ஏனெனில், நான் முன்பு மரித்திருந்தேன், இப்பொழுதோ உயிர்த்துவிட்டேன். காணாமற்போனேன், இப்பொழுதோ கண்டுபிடிக்கப்பட்டேன். ஆச்சரியமான கிருபை, அதன் சப்தம் இனிமையானது, அது பாவியான என்னையும் இரட்சித்தது (பரபாஸை விடமோசமான நான்) நான் காணாமற்போனேன், இப்பொழுதோ கண்டு பிடிக்கப்பட்டேன். நான் குருடனாயிருந்தேன், இப்பொழுதோ காண்கிறேன். பயந்திருக்க எனக்குப் கற்பித்தது கிருபையே அச்சம் யாவும் தீர்த்ததுவும் கிருபையே நான் முதலில் விசுவாசித்த வேளையிலே கிருபையானது எத்தனையாய் விலையேறப் பெற்றதாய் காணப்பட்டது! பதினாயிரம் ஆண்டுக்காலங்களாக நாம் அங்கே இருக்கிற வேளையில், சூரியனைப் போல் பிரகாசமாயிருந்த . (இனி நட்சத்திரங்களே இல்லை, ஆனால் சூரியன் தான்) நாம் ஆதியில் ஆரம்பித்ததை விட, அவரைத் துதித்துப் பாடிட நமக்கு நீண்டகாலம் உண்டாயிருக்கும் (நாம் அப்பொழுது நித்தியத்தில் இருக்கிறோம்). ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னில் முந்தி அன்புகூர்ந்தார். ஓ எவ்வளவு அற்புதமானது! 148.இப்பொழுது என்னோடு கூட யாத்திராகமம் 21ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். அவருடைய ஆவியைக் குறித்த ஆலோசனைகள் இப்பொழுது. எவ்வாறு முத்திரையைப் பெறுவது என்பதைப் பற்றி இப்பொழுது பேசப்போகிறோம். நான் உங்களுக்கு அதைக் குறித்து காண்பித்து, அதன் விளைவுகளைப் பற்றிக்கூறிக் கொண்டிருந்தேன். அதோ அங்கே அது இருக்கிறது. எவ்வாறு மிருகத்தின் முத்திரையை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள்? அங்கே உங்களுடைய முடிவு எவ்வாறு உள்ளது என்பதை நான் காண்பிப்பேன். இப்பொழுது, மிருகத்தின் முத்திரை... யாத்திராகமம் 21ம் அதிகாரம். அதைக் குறித்து பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம். அதனால் நீங்கள் அதைக்குறித்து கண்டுகொள்ள முடியும். நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி புதிய ஏற்பாட்டிலும் ஏராளமான வேதவாக்கியங்கள் உள்ளன, அவைகளை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். இப்பொழுது நாம் வாசிப்போம். “மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய பிரமாணங்களாவன: எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால்... (எபிரெயன் என்னப்பட்டவன் ஒரு விசுவாசி என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்)... அவன் ஆறு வருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெற்றுப் போகக்கடவன். ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம் பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண் ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள். அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகம் செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளை யாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவன் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.“ யாத்.21:1-4 149.என்னுடைய நேரமானது முடிந்துவிட்டது என்று நான் அறிவேன். சகோதரன் நெவில் அவர்களே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சகோதரனே, இதை நான் ஆழமாகப் பதிக்க வேண்டும். இங்கு கவனியுங்கள். உங்களுடைய தாய் என்னவாக இருக்கிறார்கள் என்பதோ உங்கள் தந்தை என்னவாக இருக்கிறார் என்பதோ காரியமல்ல. நீங்கள் தான் உங்களுடைய மனைவி அல்ல, பாருங்கள், உங்கள் மனைவிக்கும் இதற்கும் சம்மந்தமல்ல. அவனது மனைவியும் பிள்ளைகளும் காரணமல்ல. அது அந்த நபரைப் பொறுத்ததுதான். உங்களது தாயார் ஒரு பரிசுத்தவாட்டி யாயிருந்திருக்கலாம், உங்களது தந்தை ஒரு பரிசுத்தவானாக இருந்திருக்கக்கூடும்; அதைப்போலவே, ஏசாவின் தாய், தந்தையும் இருந்தார்கள். அவன் நிலையற்றவனாக இருந்தான். பாருங்கள்? ஆனால் அவன், தனிப்பட்ட நபரான உங்களைப் பொறுத்ததுதான் அது. 'என் தந்தை ஒரு பிரசங்கியார்'' என்று கூறலாம். அதற்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. “என் தாயார் ஒரு தேவபக்தியுள்ள பெண்மணி'' எனலாம். 'ஓ, அவள் பரலோகத்தில் இருக்கிறாள்” என்றும் கூறலாம். அது சரியாக இருக்கலாம். ஆனால் உன்னைக் குறித்து என்ன? உன்னைப் பொறுத்துதான் உள்ளது. 150.''அந்த அடிமை... இங்கேதான் அவன்... இப்பொழுது இந்த மிருகத்தின் முத்திரையைக் குறித்து கவனியுங்கள். கிரமமாக நான் ஏற்கனவே கூறியவைகளை மீண்டும் கூற எனக்கு நேரமேயில்லை, ஏனெனில் இன்னும் 20 நிமிடங்களே தான் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு இதைக்கூற விரும்புகிறேன். ஒவ்வொரு ஏழாம் வருஷம் என்று கூறப்பட்ட ஒரு வேளையானது அக்காலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகள்... ஏழாம் ஆண்டில்... இங்கே அமர்ந்திருக்கிற வேதமாணாக்கர்கள், ஊழியக்காரர்கள் இது உண்மை என்று அறிவர்... ஏழாம் ஆண்டுகளில் யாவும் ஓய்ந்திருந்தது. அது யூபிலி வருஷம் என்று அழைக்கப்பட்டது. ஏழாம் ஆண்டில் ஒன்றும் பயிரிடப்படவில்லை. தேசமானது ஓய்ந்திருந்தது. யாவும் அவர்கள் தானியங்களை பொறுக்கமட்டுமே செய்தார்கள். யாவும் ஏழாம் ஆண்டில் ஓய்ந்திருந்தன. ஏழாம் ஆண்டில், அங்கே ஒரு ஆசாரியனானவன் ஒரு எக்காளம் ஊதுவான். ஓரு மனிதன் அடிமையாக இருந்தானென்றால், அவனது கடன்கள் எவ்வளவா யிருந்தாலும், எனக்கு கவலையில்லை. அவன் விடுதலையாயிருக்கிறான். 151.இப்பொழுது, அதுதானே சுவிசேஷ எக்காளத்திற்கு முன்னடையாளமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஒருவேளை நீங்கள் சாத்தானின் சங்கிலியால் கட்டுண்டு , மது அருந்துதல், புகைத்தல், சூதாடுதல், மற்றும் பாவம், அசுத்தமான காரியங்களிலும் ஈடுபட்டு, அதினால் அவனுக்கு ஊழியம் செய்திருப்பீர்கள். ஆனால் சுவிசேஷ எக்காளம் ஊதப்படுகையில், நீங்கள் கேட்கும்பொழுது, நீங்கள் அடிமையாயிருப்பவைகளினின்றும் விடுதலையாகிச் செல்லலாம் என்பதுதான் அதற்கு அடையாளமாக இருக்கிறது. நீங்கள் விடுபட்டு போகலாம். 'விசுவாசம் கேள்வியினால் வரும். இப்பொழுது நீங்கள் பூரண சுவிசேஷத்தைக் கேட்டிருக்கிறீர்கள். அப்பொழுது, நீங்கள் இனிமேல் கட்டுண்டவர்களாக இருக்கத் தேவையில்லை. இப்பொழுது, நீங்கள் உட்கார்ந்து, 'ஓ, நான் அதன் சப்தத்தைக் கேட்டேன். ஆனால் நான் அதற்குச் செவிகொடுக்கவில்லை“ என்று கூறக்கூடும். பாருங்கள்? நல்லது. அப்படியாயின், அது உங்களுக்காக உள்ளது அல்ல. அது செவிகொடுக்கிறவர் எவரோ அவருக்குரியது. அது சரி, உங்களால் செவிகொடுக்க முடிந்தால் மட்டுமே. 152.அவர் இங்கு என்ன கூறியிருக்கிறார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். இதைப்பற்றி நிரூபிக்கப்படத்தக்கதாக, இப்பொழுது கூர்ந்து கவனித்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு உங்கள் சிந்தையை காத்து கவனியுங்கள். ''அந்த வேலைக்காரன்: (இவன் விடுதலை செய்யப்படுவதற்காக உள்ள மனிதன்) என் எஜமானையும் என் பெண் ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்.... (அல்லது, ''நான் நடனமாடச் செல்ல விரும்புகிறேன். யாருக்காகவும் நாட்டியமாடப் போவதை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். நான் இதையோ அதையோ, யாருக்காகவும் விட்டுவிடமாட்டேன், எனது மனைவியானாலும் சரி என் பிள்ளைகளானாலும் சரி, அல்லது நான் நேசிக்கிற இவ்வுலகின் காரியங்களையானாலும் சரி''). ''இப்பொழுது, இங்கே நோக்குங்கள், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் உங்களுக்குச் சொல்லப்போவது என்னவெனில்: நான் அதை விட்டுவிட வேண்டுமென்று நீங்கள் கூறுகிறீர்களா?' என்று கேட்பீர்கள். நீங்கள் ஒன்றையும் நிறுத்த வேண்டாம். நீங்கள் உள்ளே வாருங்கள். அது தானாகவே நின்றுவிடும். ஆனால் நீங்களோ, ''நல்லது, நான் அதைச் செய்யமாட்டேன். நான் அதைச் செய்யவேண்டியதில்லை. நான் சபையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். உங்களையும் இன்னும் வேறு யாரையும் விட நல்லவனாகத்தான் இருக்கிறேன்'' என்று கூறு கிறீர்கள். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், சகோதரனே, உங்களுக்கு சரி என்றால், அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். சத்தியத்திற்கு செவிகொடுங்கள். ''இங்கே கூறப்படுவதை கவனியுங்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவி ...? '' நல்லது. நீங்கள் அவ்வாறே வைத்துக்கொள்ள விரும்பினால், தொடர்ந்து அதில் செல்லுங்கள். எக்காளமானது என்னத்தை ஒலித்துக் கூறியது என்பதைக் கேட்டிருக்கிறீர்கள். அது என்ன ஸ்வரத்தை இசைத்தது என்பதை கேட்டீர்கள். வேதம் கூறியது... (ஓ தேவனே!) அதை நோக்குங்கள் அடுத்த மணி நேரத்திற்குரிய செய்திக்கு இது ஒரு பொருளாக அமையலாம் அல்லவா? ''எக்காளமானது விளங்காத சத்தமிட்டால் . உங்களுடைய ஸ்தாபனங்கள் 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி''என்று கூறினால், அது எக்காளத்தைப் போல் சப்தமிடவில்லை. ''எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?“'. 153.''... வேலைக்காரன் என் எஜமானையும் நேசிக்கிறேன் என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்...'' “என்னை இவ்விதச் செயல்களைச் செய்யும்படி செய்யச் செய்யும் பிசாசை நான் நேசிக்கிறேன், அதெல்லாம் சரிதான். நீங்கள் குறுகின எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் குறுகின புத்தியுள்ளவர்கள். இந்த பெரிய காரியங்களெல்லாம் நமக்கு இருந்தாக வேண்டும். நான் அவைகளை நேசிக்கிறேன். இந்த உலகுக்கு உரிய அக்காரியங்கள் அவைகள். எங்களுக்கு நடனங்கள் உள்ளன. எங்கள் சபையில் சீட்டு விளையாட்டு உள்ளது. அதைப்போன்ற வேறு காரியங்களும் உள்ளது. இவைகளினால் எங்களுக்கு நல்ல நேரம் உள்ளது. அங்கே உங்களுக்கு இருக்கிறவைகளைவிட நல்ல காரியங்கள் எங்களுக்கு உள்ளது' என்று கூறுகிறீர்கள். சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அது சரி. ''... நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை...'' நீங்கள் கூறுகிற அந்த ஆவிக்குரிய சுயாதீனத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள். “அவன் எஜமான் (அது பிசாசாகும்) அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக் கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது... (ஊ! அது என்ன? யார் அந்த கதவு? (சபை யார், “இயேசு கிறிஸ்து என்று கூறுகின்றார் -ஆசி.) ''உனக்கு முன்பாக ஒரு வாசலை நான் வைப்பேன்''. எப்பொழுது மிருகத்தின் முத்திரை வந்தது? திறந்தவாசலை வைத்திருக்கிற இக்காலத்தில் தான் இது மிருகமானது தன் முத்திரையை இடுதலின் இறுதிக்கட்டமாகும்.)... அவனைக் கதவின் அருகேயாவது கதவு நிலையின் அருகேயாவது சேரப்பண்ணி... (அது கல்வாரியைக் குறிக்கிறது. அங்கே எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக் கொண்டிருக்கக்கடவன்.“ ''சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் சுவிசேஷ சத்தியமானது தொனிக்கக் கேட்டும், அதில் நடக்க நீங்கள் மறுத்துவிட்டால், அப்பொழுது தேவன் தாமே உங்கள் காதை, இனி ஒருபோதும் அதைக் கேட்கக் கூடாதபடி அடையாளப்படுத்திவிடுகிறார். அதனால், நீங்கள் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே உள்ள கோட்டை தாண்டி விடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஸ்தாபன சங்கத்தோடு மீதமுள்ள உங்கள் வாழ்நாள் முழுவதும் என்றென்றுமாக சென்று விடுகிறீர்கள். (பிள்ளைகளே, ஒளியில் நடவுங்கள், அதுதான் சரியானது) நீங்கள் அந்த எஜமானை என்றென்றுமாக சேவிப்பீர்கள். 154.உங்களுக்கு விருப்பமில்லை... பாருங்கள், எக்காளமானது முழங்கியது. அதினால் அவன் விடுதலை பெற்றுப்போக முடியும், அது தேவனுடைய கிருபையாயிருக்கிறது. அதுதானே யூபிலி வருடமாயிருக்கிறது. பூர்த்தியடைந்ததாக இருக்கிறது. பாவத்தின் நாளானது முடிவடைந்து விட்டது, சகோதரனே. பாவத்திற்கு ஊழியம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன்; (அவர்கள் ஒலிநாடாவில் கேட்கிறவர்களாயினும் சரி, பார்க்கத்தக்கதாக அமர்ந்திருக்கும் சபையாரானாலும் சரி) பாவத்திற்கு ஊழியம் செய்யும் ஒவ்வொரு வருக்கும் கூறுகிறேன், பாவத்தின் நாளானது முடிவடைந்துவிட்டது. இயேசு மரித்தார், எனவே நீங்கள் இனி பாவத்திற்கு ஊழியம் செய்ய வேண்டியதில்லை. மதக்கோட்பாடுகளுக்கும், ஸ்தாபனங்களுக்கும் முன்பாக நீங்கள் இனி தலைவணங்கத் தேவையில்லை. 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்காகவே விடுதலையாவீர்கள். நீங்கள் விடுதலையாகிச் செல்ல விரும்பினால், குமாரனுக்குள் விடுதலையாகிச் செல்ல விரும்பினால், எல்லாவற்றினின்றும் உங்களை விடுவித்துக் கொண்டு அவரை சேவியுங்கள். வாருங்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவிரும்பாவிடில், அப்பொழுது உங்களுடைய மத ஸ்தாபனமானது. உங்களுடைய எஜமானானவன், அல்லது நீங்கள் யாரை சேவித்துக் கொண்டிருக்கிறீர்களோ அவன், இனிமேல் ஒருபோதும் சுவிசேஷ எக்காளத்தைக் கேட்கவே கூடாதபடி, உங்களுடைய காதைக்குத்தி அடையாளப்படுத்திவிடுவான். தேவன் எப்பொழுதாவது உங்களிடம் பேசி, ''வா, இதுவே தருணம் என்று அழைத்தால், அப்பொழுது, நீங்கள் அவர் பேசுவதைப் புறக்கணித்தால், சத்தியத்திற்கு செவிகொடுக்க முடியாதபடி கடினமடைந்தவராக இருக்கும்படி, அவனுடைய அடையாளத்தை நீங்கள் பெற்றுக் கொண்டுவிடுவீர்கள். அதுதான் பிசாசின் முத்தியைாகும். அதுவே மிருகத்தின் முத்திரை யாகும். அதைப் பார்த்தீர்களா? மிருகத்தின் முத்திரையானது என்ன செய்கிறது? உங்களை மீண்டும் ரோமானியக் கொள்கையில், மத ஸ்தாபனக் கோட்பாட்டில் வைத்துவிடுகிறது. இனி உங்களால் வெளியே வந்து சுதந்திரமடைய முடியாது. அதைத்தான் சதா சேவிக்கிறவர்களாயிருப்பீர்கள். அங்கேதான் மிருகத்தின் முத்திரையானது இருக்கிறது. அது கடினமான விஷயமாகத்தான் இருக்கிறது. நண்பர்களே, அது வெட்டுகிறது. ஆனால் அதுதான்... நான் அதற்கு பொறுப்பாளியல்ல... வேதம் என்ன கூறுகிறதோ அதையே நான் கூறுகிறேன். 155.இப்பொழுது, 'நீ விடுதலையாயிருக்கிறாய்'' என்று முழங்ககுகிற நற்செய்தியாகிய சுவிசேஷ எக்காளம் முழங்குவதைக் கேட்பதற்கு முன்னடையாளமாக, நிழலாக, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள விஷயம் இது. இனி நீ கட்டுண்டு கிடக்கத் தேவையில்லை, நீ முழுவதுமாக கிறிஸ்து இயேசுவுக்குள் விடுதலையா யிருக்கிறாய், இனிபாவங்கள் ஏதுமில்லை. நீங்கள் இனிச் செய்வதில்லை என்று உங்களுக்குத் தெரிவிக்கிறது. நீங்கள் இவ்வுலகை நேசித்தால், வேதம் உங்களுக்குக் கூறுகிறது. ''நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை''. அது உண்மை. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை. அப்படியென்றால், மார்க்கத்தின் பெயரால் இன்று உலகில் நடந்து கொண்டிருக்கிற பெரிய காரியங் களைப்பற்றி என்ன? அவைகள் உலகத்தின் காரியங்கள் ஆகும். பன்றி அடைக்கும் பட்டியில் உள்ள பன்றி தன் உணவை ஆவலுடன் விழுங்குவது போல், மக்களும் உலகத்திற்குரிய இக்காரியங்களை ஆவலுடன் விழுங்குகிறார்கள். “ஓ, இது அருமையா யிருக்கிறது. அதைப்பற்றி ஒன்றும் தவறில்லை'' என்று கூறுகிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள் முத்திரையிடப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டுள் ளார்கள். 156.யூதர்களில் மீதியானவர்கள் என்பது யார் என்பதைப் பற்றியும், இலட்சத்து நாற்பத்து நாராயிரம் பேர் யார் என்பதைப் பற்றியும் புரிந்து கொண்டீர்களா? அவர்கள் எங்கே அமர்ந்திருந்து, காத்துக்கொண்டிருக் கிறார்கள்? இதே மணி வேளையில் தான். புத்தியில்லாத கன்னியர் எண்ணெயை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதையும், அவர்கள் தாமே எழும்பி, நியாயத்தீர்ப்பு நாளில் நல்லவைகளும், பொல்லாங்கானவைகளும் பிரிக்கப்படும் நாளில் பிரிக்கப்படுவார்கள் என்பதை உங்களால் காண முடிந்ததா? எண்ணெயைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை புத்தியில்லாத கன்னிகை அறிந்து, இப்பொழுது நடப்பதைப் போல, அதைத் தேடிச்சென்ற அதே நேரத்தில் மணவாளன் வந்துவிட்டார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? அப்படியாயின் நாம் முடிவுக்கு எவ்வளவு சமீபமாயிருக்கிறோம்? இப்பொழுதே! நமக்கு இன்னும் குறுகிய நேரந்தான் இருக்கிறது. இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. எப்பொழுது என்று என்னால் கூற முடியாது. எனக்குத் தெரியாது. ஒருவேளை இன்னொரு வருடம் பிடிக்கலாம். அது ஒரு வேளை இன்னொரு பத்து வருடங்கள் ஆகலாம். அல்லது நாற்பது ஆண்டுகள் ஆகக்கூடும். அல்லது நாற்பது நிமிடங்கள் மட்டுமேகூட ஆகலாம். எனக்குத் தெரியாது. என்னால் கூற முடியாது. ஆனால்அது சமீபமாக இருக்கிறதென்று மட்டும் எனக்குத் தெரியும். அது மிகவும் சமீபமாயுள்ளது. கர்த்தருடைய ஆவியானவர்... 157.ஒரு சமயமானது வரப்போகிறது, அப்பொழுது முதலாவதாக சபையானது குளிர்ந்து போகிற நிலைக்குப்போக ஆரம்பிக்கும். கடந்த சில ஆண்டுகளில் சபையானது அவ்வாறு குளிர்ந்து போகிற நிலையை அடைய ஆரம்பித்ததை எத்தனை பேர்கள் கவனித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது எதற்குள் போகப்போகிறது? லவோதிக்கேயா. இன்றிரவில் அதிலிருந்து நாம் அந்த சபைக் காலத்திற்குரிய தூதன் இன்னார் என்பதை கண்டுபிடித்து பார்த்து, அவனுடைய செய்தியையும் நாம் கண்டுகொண்டு, அது எப்படி இருக்கும் என்பதையும், லவோதிக்கேயா சபைக்காலத்தின் முடிவில் அவள் நித்தியத்திற்குள் போய் முடிவடைந்து அதற்குள் பரந்து நிற்கிறபொழுது எப்படியிருக்கும் என்பதையெல்லாம் நாம் காணலாம். 158.ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? ஆம், ஐயா. ஓ, தேவனுடைய முத்தியைானது என்னவாயிருக்கிறது? பரிசுத்த ஆவி. மிருகத்தின் முத்திரையானது என்னவாயிருக்கிறது? பரிசுத்த ஆவியை புறக்கணித்தலேயாகும். அந்த இரு பிரிவினர், அவர்கள் ஒருவர் காண்கின்றனர்... நல்லது, அவர்கள் ... பூமியில் எத்தனை பேர் அதைப் பெற்றுக் கொள்ளாமலிருந்தனர்?“ முத்தரிக்கப்படாதவர் யாவருமே மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டனர்.'' எத்தனை பேர்கள் தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்ளவில்லையோ, அவர்கள் யாவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொண்டனர். தேவனுடைய முத்திரையானது பரிசுத்த ஆவியாகும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. அதைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும், அது தேவனுடைய அடையாளம், தேவனுடைய முத்திரை என்று கூறுகிறது. அம்முத்திரையை பெற்றிராதவர்கள் யாவரும், அதை புறக்கணித்தவர்கள் ஆவர். அதை அவர்கள் எவ்வாறு புறக்கணித்துள்ளனர்? அதற்கு செவிகொடுக்க மறுப்பதின் மூலமே. அப்படித்தானே? 159.விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளுகிறீர்கள்? ''செவிகொடுத்தலின் மூலமாக.'' அது எங்கே அடையாளப்படுத்தப்பட்டது? கையிலா? இல்லை. தலையிலா? இல்லை. அது காதிலே தான் அடையாளம் போடப்பட்டது. “செவிகொடுத்தலாகும். அது என்ன செய்தது? அதைக் கேட்கவே மருளுகின் றனர். இனி மேல் வேண்டாம்' என்று நீங்கள் கூறுகிறீர்கள். இனி நான் அதைப்பற்றி கேட்கமாட்டேன், அதனோடு எந்த சம்மந்தமும் எனக்கு வேண்டாம். அதனோடு எனக்கு இனி ஒன்றும் இல்லை'' என்று கூறுகிறீர்கள். அது அவர்களைப் போலவே இருக்கிறது.... சகோதரன் நெவில் அவர்களே, இதை இப்பொழுது நான் விட்டுவிட்டு.... “ஒரு தடவை பிரகாசிக்கப்பட்டவர்கள் மறுதலித்துப்போனால் அவர்களை புதுப்பிப்பது கூடாது காரியம் என்கிற விஷயத்தைப் பற்றி உங்களுக்கு நான் கூறவிருந்தேன். அவர்களால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு இயலாது. அதுதானே எல்லைக் கோட்டில் நிற்கும் விசுவாசிகள். ''ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால் ... எபி.6:4-6 “.... தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணினபடியால்...” எபி.10:29 '... மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாது காரியம்“ எபி.6:6 பாருங்கள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவன் இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் இயலாதகாரியமாகும். அவன் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், அவன் என்ன செய்வான்? பாருங்கள்? ''உடன்படிக்கையின் இரத்தத்தை நம்பி'. ஒருவன் தெரிந்துகொள்ளப்பட்டவனாயிருந்தால், அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தால், அவனால் அவ்வாறு மறுதலிக்க முடியாது. அவ்வாறு செய்வது என்பது அவனுக்கு இயலாத காரியமாகும். 160.இப்பொழுது, இதை நாம் எடுத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறோம். “எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து... முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும்... இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.” கோதுமை மணியோபரம் வீட்டுக்கு களஞ்சியத்தில் சேர்க்க எடுத்துச்செல்லவிருக்கிறது) ஆனால் இந்த ஜீவனை அளிக்கும் மழையானது களை, கோதுமை ஆகிய இரண்டின் மேலுமே பெய்கிறது. அவையிரண்டுமே மழை வருவதைக் குறித்து மகிழ்ந்து களிகூர்ந்து, அது வருவதைப்பற்றி ஒரேவிதமாகத்தான் எண்ணு கின்றன. ஆனால் அவைகளுடைய கனிகளினால் நீங்கள் அவைகளை அறிவீர்கள். அவைகள் களையின் கனிகளையா அல்லது கோதுமை மணியின் கனிகளைக் கொண்டவையா என்பதை அவற்றின் கனியைக் கொண்டு அறிந்துகொள்ளுகிறீர்கள். இப்பொழுது கோதுமையைக் குறித்து... 161.இப்பொழுது, அதைப்பற்றி அறிந்துகொள்வது எவ்வாரெனில்... இந்த எல்லைக்கோடு விசுவாசியைக் குறித்து உங்களுக்கு காண்பிக்கும்படியாக நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்காக நான் இந்த புத்தியில் லாத கன்னிகையை உங்களுக்கு காண்பிக்கிறேன். இஸ்ரவேலரின் மத்தியில், இந்த எல்லைக்கோடு விசுவாசியிலே, அவர்கள் காதேஸ் பர்னேயாவுக்கு வருகையில் என்ன நேரிடுகிறது என்பதைக் கவனியுங்கள். நான் அதைப்பற்றி ஆதியாகமத் திலிருந்து யாத்திராகமம் முடிய முன்னும் பின்னும் எடுத்து, இந்த வகுப்பு அதைக் காணத்தவறக்கூடாது என்பதற்காக நான் உங்களுக்கு முன்னடையாளத் தைக் காண்பித்தேன். 162.யாத்திராகமத்தில் இந்த ஜனங்கள் காதேஸ் பர்னேயாவுக்கு வருகையில்... காதேஸ் பர்னேயா தான் அந்தக்காலத்தில் உலகுக்கே நியாயாசனமாக இருந்தது. அங்கே தான் இஸ்ரவேல் தன்னுடைய நியாயாசனத்தைப் பெற்றது. அந்த மலையில் அவர்கள் பத்துக்கட்டளைகளைப் பெற்றுக்கொள்ள வருகிறவரையிலும், அவர்கள் 11 நாட்கள் பிரயாணம் செய்தார்கள். அங்கே தான் அவர்கள் நியாயத்தீர்ப்பை சந்தித்தார்கள். ''அவர்கள் கடலோரமாக 11 நாட்கள் பிரயாணம் செய்தார்கள்'' என்று வேதம் கூறுகிறது. 11 நாட்கள் பிரயாணம்செய்து, அவர்கள் காதேஸசக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டார்கள். இன்னும் நான்கு நாட்களில் தேவன் அவர்களைக் கானானுக்குள் கொண்டு சென்றுவிடப் போகிறதற்கு இருந்தபோது, அவர்கள் மீண்டும் வனாந்தரத்தில் வந்த வழியே திரும்பிப்போய் வனாந்திரத்தில் அலைந்து திரியும்படி ஆனார்கள். அவர்கள் கட்டளைகளைப் பெற்றார்கள். மீண்டும் திரும்பிப்போனார்கள். அப்புறம் என்ன நேரிட்டது? அவர்கள் மீண்டும் இங்கே வந்து அங்கிருந்து 11 நாட்கள் பிரயாணத்தில், காதேஸ் பரனேயாவில் தங்களுடைய நியாயத்தீர்ப்பண்டையில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 163.என்ன நேரிட்டது? ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவனாக மோசே தெரிந்துகொண்டு, ''நீங்கள் போய் தேசத்தை வேவு பார்த்து, அது எப்படிப்பட்ட தேசம் என்பதைக் கண்டு வாருங்கள்'' என்று கூறினான். அவர்கள் யாவரும் அங்கு சென்று அதை நோக்கினார்கள். அவர்களில் இருவர் போய் ஒரு பெரிய திராட்சைக் குலையை எடுத்துக்கொண்டார்கள். இது இருவர் சுமக்கவேண்டிய அளவுக்கு பெரிய குலையாக இருந்தது. அத்தேசம் எத்தகைய தேசம் என்பதை போய் கண்டறிந்து திரும்பி வந்த பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கே அவர்கள் எமோரியர் மற்றும் இன்னபிற மக்களைக் கண்டார்கள். அவர்களைப்பற்றி இஸ்ரவேலர், ''அவர்கள் இராட்சதர்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் காயீனின் புத்திரராவர். அங்கே முடிவாக அத்தேசத்தை அடைந்து அங்கு இருந்தார்கள். அவன் கூறினான். ''அவர்கள் இராட்சதர்கள்'' அத்தேசத்தை எடுத்துக்கொள்ளமுடியாது. அவர்களு டைய தேசம் முழுமையும் பெரிய மதில் சூழ்ந்த பட்டணங்கள் ஆகும். அவர்கள் கண்களுக்கு நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்''. 164.அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? அவர்கள் முழுமையாக அத்தேசத்தை பார்வையிட்டு விட்டார்கள். அத்தேசத்தின் கனியைக்கூட அவர்கள் ருசிபார்த்துவிட்டார்கள். பாருங்கள், காலேபும் யோசுவாவும் கூட அங்கே போய் அத்தேசத்தின் நிலையை விளக்கும் அத்தாட்சியைத் தங்கள் தோள்களின் மேல் சுமந்து கொண்டு வந்திருந்தனர். காலேபும் யோசுவாவும், ''நாம் அத்தேசத்தைக் கைப்பற்றிட நமக்கு இயலும் என்று கூறினார்கள். பார்த்தீர்களா? ஏன்? ஏனெனில் காலேபும் யோசுவாவும் வார்த்தையை உற்று நோக்கினவர்களாகவே இருந்தார்கள். தேவன் கூறினார், ''இத்தேசம் உங்களுடையது. தேசம் முழுவதிலும் எமோரியரும், ஏவியரும், மற்றும் பல்வேறு ஜாதியினரும் ஆகியோரால் நிறைந்துள்ளது. ஆனால் தேசமோ உங்களுடையது. உங்கள் பாதம்மிதிக்கும் ஒவ்வொரு இடமும் உங்களுக்குச் சொந்தமானதாகும். நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன். அது உங்களுடையது. ஆகவே அதை நோக்கி நடந்து கொண்டேயிருங்கள்'' என்று கூறினார். ஆனால் அவர்களோ, “ஓ இல்லை, அவ்விதமாக நாங்கள் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்கமுடியாது. ஏன் தெரியுமா? ஆர்ச் பிஷப் அல்லது பிஷப்போ அல்லது ப்ரெஸ்பிடரோ, அல்லது வேறு யாருமோ வந்து எங்களையெல்லாம் வெளியே துரத்தி விடுவாரே'' என்றனர். ஹ முன்னே செல்லுங்கள், நாம் அதை அடைவோம். 165.இப்பொழுது, இந்த இருவரும் திரும்பி வந்து, ''அத்தேசத்தை நாம் கைப்பற்றிட நம்மால் இயலும். ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். எனவே நாம் போய் அத்தேசத்தை எடுத்துக்கொள்வோம்'' என்றார்கள். ஆனால் பாருங்கள், இந்த எல்லைக்கோடு விசுவாசிகளோ, தேசத்தின் கனியை ருசி பார்க்க தூரத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள், ''அது மிகவும் ருசியாக இருக்கிறது. ஆனால், ஓ, நம்மால் அத்தேசத்தை கைப்பற்ற முடியாது'' என்றார்கள். இப்பொழுது அது என்ன? இன்றைக்கு விசுவாசி இருக்கிறான். இந்த ஆளை கவனியுங்கள். தேவன் அவனுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். ஊள ஊ. அது சரி. இப்பொழுது முதலில் அவன் இரட்சிக்கப்படுகிறான். அவனுடைய தாய் துணிகளைத் துவைத்து பிழைப்பை நடத்தி, அதைக்கொண்டு அவனை ஒரு கல்லூரிக்கு, பிரசங்கிப்பது எப்படி என்பதற்குரிய கல்வியைக் கற்கும்படி அனுப்பி வைக்கிறாள். அவன் இன்னமும் சிந்திக்கிறான்... பெண்கள் ஒழுக்கக்கேடாக உடையுடுத்திடுவதை அவன் காண்கையில், அது அவனை வெகுவாக மனமுடையச் செய்கிறது. சிகரெட்டுகளின் புகையை முகருகையில் புகைபிடிப்பதை தவிர்க்க அவனால் இயலாமற் போகிறது. அது தவறானது என்பதை அவன் அறிவான். அவன் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. எனவே அவன், “கர்த்தாவே, என்னை பரிசுத்தமாக்கும், அந்தக் காரியத்தை என்னைவிட்டு அகற்றிப்போடும்'' என்று வேண்டும்கிறான். தேவன் அவனிடம், ''நல்லது, நான் அதை உனக்காகசெய்வேன், மகனே, அவை யாவற்றையும் நீ உன்னை விட்டு அகற்றிப்போடு'' என்பார். 166.ஒரு இரவில் அவன் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்று, அங்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பேசப்படுவதைக் கேட்கிறான். அவன் முதல் அடியாகிய நீதிமானாக்குதலை அடைந்து விட்டான், இரண்டாவது கட்டமாகிய பரிசுத்தமாகுதலையும் அடைந்தான். இப்பொழுது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகி விட்டான். பாருங்கள்: ஒன்று, இரண்டு,மூன்று. அவன் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகிவிட்டான். அவன் அங்கே போய்ச் சேருகையில், வேதாகமத்தை நன்கு படிக்கிறான். ''அவர்கள் அவ்வாறுதான் செய்தார்கள். அது சரிதான். ஞானஸ்நானமானது இயேசுவின் நாமத்தில் தான் கொடுக்கப்படவேண்டும். அவர்களும் அப்படித்தான் செய்தார்கள். அது சரிதான். நான் வேதம் முழுவதிலும் படிக்கிறேன். அவர் சரியாக வார்த்தையில் தான் இருக்கிறார்'' என்ற கூறுகிறான். ''பிஷப், நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்கிறான். “அந்த அபத்தமெல்லாம் வேண்டாம்'' என்கிறார். “ஓ அப்படியா?'' என்கிறான். 'அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அந்நிய பாஷைகளில் பேசினார்களே, அவர்கள் இதைச் செய்தார்கள், அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கினார்கள். ஓ ஆம். சரியாக அவ்வாறு தான்.'' என்று கூறுகிறான். அவர்கள் இவ்வாறு தேசத்தின் எல்லையில் இருந்து கொண்டு அந்த நல்ல தேசத்தை நோக்கிப் பார்க்கிறார்கள். “ஓ, நான் இதைப்போய் என் சபைக்கு போதித்து விட்டால்.... ஓ, நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன், மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட். ஓ. பிஷப் என்னை வெளியே தள்ளிவிடுவார், நாங்கள் அதைச் செய்ய முடியாது. அவ்விதமானதொரு கூட்டத்தை எங்கள் சபையில் நடத்திட முடியாது. ஒவ்வொருவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துவிடுவார்கள்” என்று கூறுகிறார்கள். 167.ஒரு தடவை ஒருவன் இதனால் பிரகாசிக்கப்பட்டும், பரம் ஈவை ருசிபார்த்தும், அவன் தெரிந்துகொண்ட அந்த பாதையிலிருந்து அவன் விழுந்துபோனால், அவனைப் புதுப்பிப்பது கூடாத காரியம். ஏனெனில் அவன் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்துவிட்டான். பாவமானது என்ன? அவிசுவாசம் தான். அவன் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டான். அவன் தன்னை சுத்திகரித்த உடன்படிக்கையை, அது ஏதோ பரிசுத்தமில்லாத ஒன்றாக கருதிவிட்டான். அவனை அங்கே கொண்டுவந்த கிருபையின் கிரியைகளை அலட்சியம் செய்துவிட்டான். அங்கே அவனுக்கென இனிமேல் பலியே இல்லை. ஆனால் பயப்படத்தக்க விதமான சத்துருவைப் பட்சிக்கும் தேவ கோபாக்கினையானது காத்துக்கொண்டிருக் கிறது. ''பழிவாங்குதல் எனக்கே உரியது'' என்று கர்த்தர் கூறுகிறார். “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. ஒளியை நீங்கள் காண்கையில் அதிலே நடவுங்கள்! நடவுங்கள்! நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். ஆயினும் தொடர்ந்து நடந்து செல்லுங்கள். கல்வாரியை நோக்கி நடவுங்கள், கல்வாரியின் மேல் அர்த்தமுள்ள பார்வையை பதித்திடுங்கள், நடவுங்கள். நடந்திடுங்கள். 168.ஓ தேவனே, ஒரு நாளில் சபையானது... ஏனோக்கு சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறான். ஐந்நூறு ஆண்டுகள் அவன் தேவனுக்கு முன்பாக நடந்தான். தேவன் கூறியயாவற்றையும் செய்தவனாக இருந்தான் என்ற சாட்சியோடு அவன் ஒளியில் நடந்தவனாக இருந்தான். அவன் தேவனைப் பிரியப்படுத்தினான். கர்த்தர் என்ன கூறினாரோ அவற்றை ஏனோக்கு செய்தான். அவன் ஒரு முன்னடையாளமானவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேழையோ யூதர்களுக்கு முன்னடையாளமாக இருக்கிறது. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராகிய யூதர்களுக்கு முன்னடையாளமாக பேழை இருக்கிறது. நோவாவும் அவனுடைய குடும்பத்தினரு மாகிய பேழையிலுள்ளவர்கள் ஜலப்பிரளயத்தின் வழியாக கடந்துசென்றார்கள். ஆனால் ஏனோக்கோ ஜலப்பிரளயத்திற்கு முன்னால், பரமவீட்டினை அடைந்தான். அதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, ஏனோக்கு தொடர்ந்து ஒளியில் நடந்து சென்றான். ஆகவே அவ்வாறு அவன் நடந்து செல்லுகையில், ஒருநாள் அவனது பாதங்கள் பூமியை விட்டு மேலே கிளம்பிவிட்டதாக உணர்ந்தான். அவன் தொடர்ந்து நடந்துசென்று மரியாமலேயே மகிமைக்குள் நடந்து சென்றுவிட்டான், அப்படித்தான் நடந்தது. தேவன் அவனை எடுத்துக்கொண்டார், ஏனெனில், ''அவன் தேவனுடைய ஒளியில் நடந்தான்' என்ற சாட்சியோடு ஒளியில் நடந்தவனாயிருந்தான். அவன் ஒளியில் நடந்து கொண்டேயிருந்தான். நடவுங்கள். நடந்திடுங்கள். 169.சபையே, நாம் நடந்து செல்வதற்குரிய பாதரட்சைகளை அணிந்து கொள்வோம். ஒளியில் நடவுங்கள், திவ்விய ஒளியதுவே அதினின்று இரக்கத்தின் பிரகாசமான பனித்துளிகள் வநததுவே நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கிறது, இயேசு உலகத்தின் ஒளியாயிருக்கிறார். இப்பொழுது நாம் அதைப் பாடுவோம்: நாம் ஒளியில் நடப்போம், அது திவ்விய ஒளியாம் அதினின்று இரக்கத்தின் பிரகாசமான ஒளி வீசுகிறது இரவும் பகலும் நம்மைச்சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசு உலகத்தின் ஒளியாயிருக்கிறார். ஒளியின் பரிசுத்தரே, இயேசுவே உலகின் ஒளியென்று பிரசித்தம் செய்வீர் அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசு உலகின் ஒளியென முழங்கிடுமே நாம் அச்சுந்தர ஒளியில் நடப்போம் அங்கிருந்து பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகள் சிந்திடுமே அது நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசித்திடும் இயேசுவே உலகின் ஒளியாயுள்ளார். 170.சற்று நேரம் நாம் நம் தலைகளை வணங்குவோம். இங்கு யாருக்காவது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் அனுபவத்தைப் பெற வேண்டுமென வாஞ்சையுள்ளவர்கள் இருப்பார்களாயின். ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, என்னை நினைவுகூருங்கள், சபையே, என்னை நினைவு கூருங்கள். நான் ஒளியில் நடக்க விரும்புகிறேன். என்னில் கசப்பான வேர் எதுவும் இருக்கலாகாது , என்னில் கசப்பான வேர் எதுவும் இருக்கலாகாது, இனிமை என்னில் வேண்டும், நான் தேவனுடைய ஊழியக்காரனாகவே இருக்கவிரும்புகிறேன்'' என்று கூறுங்கள். “கர்த்தாவே என்னை நினைவுகூரும்'' என்று கரத்தை உயர்த்திக்கூறுங்கள். ஆம், இருபது அல்லது அதற்கும் மேலான கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நாம் மெதுவாக ஒன்று சேர்ந்து பாடுகையில், தலைகளை வணங்கிய வண்ணமாகவே இருங்கள்: ஓ, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார் நாம் இவ்வொளியில் நடப்போம், அது சுந்தர ஒளியாம் பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளி னின்று அது வருகிறது இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கிறது. இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். ஒளியின் பரிசுத்தரே, இயேசுவே உலகின் ஒளியென்று பிரசித்தம் செய்வீர் அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசு உலகின் ஒளியென முழங்கிடுமே அது நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசித்திடும் இயேசுவே உலகின் ஒளியாயுள்ளார். நாம் அச்சுந்தர ஒளியில் நடப்போம் அங்கிருந்து பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித் துளிகள் சிந்திடுமே நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசிக்கிறது இயேசுவே உலகத்தின் ஒளியாம். 171.(சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் மேற்கண்ட பாடலை தனக்குள் மெதுவாக பாடுகிறார் - ஆசி). ஆண்டவரே, இந்த ஜனங்கள் சுவிசேஷ ஒளியில் நடக்க விரும்பி இப்பாடலை தங்களுக்குள் மெதுவாக இசைத்துக் கொண்டிருக்கையில், அவர்களின் விலையேறப்பெற்ற இருதயங்களை உம் கரத்தில் எடுத்துக்கொள்ளும், கர்த்தாவே . அவர்கள் உம்முடை யவர்கள் ஆக இருக்கிறார்கள். அவர்களை சுத்தி கரியும், எல்லா தீமையையும், அவிசுவாசத்தையும் அவர்களை விட்டு அகற்றியருளும். உலகின் ஒளியாயிருக்கிற இயேசு அவர்களுக்குள் வரட்டும். இங்கே கைக்குட்டைகள் வைக்கப் பட்டுள்ளன. கர்த்தாவே, இவைகள் பிணியா ளிகளுக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. கர்த்தராகிய இயேசுவே, அவர்களண்டைக்கு வந்து அவர்களை குணமாக்கும், அதினால் அவர்கள் ஒளியில் நடக்க முடியுமே, அனுக்கிரகித்தருளும், கர்த்தாவே. எங்களுக்கு கொடுக்கப்பட்ட போதனைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் எங்களோடு இருந்து, எம்மைக்காத்து, மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி செலுத்துகி றோம். மக்கள் இந்த உஷ்ணமான அறையில் அமர்ந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப் போடும் ஆச்சரியத்தோடும் காத்துக்கொண்டிருக்கி றார்கள். ஏனெனில், வசனமானது வாசிக்கப்படு கையில், தாங்கள் கடைசிக்காலத்தில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். உலகில் களியாட்டம் தான் மிச்சமாக உள்ளது. இந்நாட்களில் ஒன்றில், இந்த வேஷமான, போலியானவைகளெல்லாம் ஒழிந்து போம். தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் நீர் இரட்சிக்க வேண்டுமென, தேவனே, நான் வேண்டுகிறேன். அவர்களை உமது ஆவியால் இரட்சித்தருளும். பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து, அவர்கள் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை, தயவு, சமாதானம், பொறுமை, சாந்தகுணம்,விசுவாசம் ஆகியவைகளை பரிசுத்த ஆவிக்குள் பெற்றுக் கொள்ளும்படி தாரும், கர்த்தாவே . இப்பொழுது உம்முடைய சேவைக்காக அவர்களை நான் உம்மிடம் ஒப்படைப்பேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன். ஆமென். 172.நாம் ஒளியில் நடப்போம் (நாம் பாடும் பொழுது நம்முடைய கரங்களை உயர்த்திடுவோமாக) அது சுந்தர ஒளியாம், பிரகாசமான இரக்கத்தின்பனித்துளிகளினின்று அது சிந்துகிறது, நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறது, ஓ, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் என்னில் முந்தி நேசம் கொண்டு என் இரட்சிப்பை கல்வாரி சிலுவையில் கிரயத்திற்கு வாங்கினதால். 173.ஓ, அவர் அற்புதமானவராக இருக்கவில்லையா? நாம் இப்பொழுது பத்து அல்லது பதினைந்து நிமிட நேரத்திற்கு அல்லது எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரத்திற்கு ஞானஸ்நான ஆராதனையை நடத்து வோம். இங்கே ஒரு இளம்பெண் ஞானஸ்நானம் செய்யப்படுவதற்காக இருக்கிறாள், அது சரிதானே? ('அநேகர் இருக்கின்றனர்'' என்று சகோதரன் நெவில் கூறுகிறார் - ஆசி). மாலையில் உள்ள ஞானஸ்நான ஆராதனையில் ஞானஸ்நானம் எடுக்க வர இயலாமல் இருந்து, காலையில் உள்ள ஞானஸ்நான ஆராதனையில் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? ஒன்று, இரண்டு, மூன்று, இவர்கள் இன்று மதியம் அல்லது மாலை ஆராதனைக்கு முன்பாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வர இயலாமல் இருக்கிறார்கள். பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களுக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உள்ளே பிரவேசிக்க இப்பொழுது ஆயத்தமாக இருக்கிறீர்கள்; நீங்கள் கல்லறைக்குள் போய், பழையவைகளெல்லாம் உங்களுக்கு மரித்ததாக ஆகி, அடக்கம்பண்ணப்படுவதற்காக இருக்கிறீர்கள். இப்பொழுது இதை மனதில் வையுங்கள், அதாவது, நீங்கள் எடுக்கும் ஞானஸ்நானம் ஆனது, உங்களுடைய உள்ளத்தில் என்ன நேரிட்டிருக்கிறதோ அதை வெளியே காட்டுவதாகத்தான் அமைந்துள்ளது. நாம் அச்சுந்தர ஒளியில் நடந்திடுவோம் (ஆயத்தமாகி விடுவோம்) அங்கிருந்து பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகள் சிந்துகின்றன, நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசிக்கிறது ஓ இயேசுவே, உலகின் ஒளியாயிருக்கிறார். 174.ஓ, இந்த மகத்தான ஐக்கியம்! நீங்கள் அதைப்பற்றி நல்லதாக உணரவில்லையா? ஓ, நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணருகிறேன், சவுக்காரத்தைக் கையாண்டு, பழங்காலத்து அழுக்குத் தேய்க்கும் ப்ரஷ் கொண்டு தேய்த்து, அழுக்கை யெல்லாம் அகற்றிடும் ஒரு இடத்தில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு வந்தது போல் நான் உணருகிறேன். என் சகோதரன் கூறினார், ஒருவேளை இன்று காலையில் ஞானஸ்நானம் எடுக்கவிரும்புகிறவர்கள் அனைவம் எடுக்கக்கூடும் என்று. எனவே ஆயத்தமாகுங்கள். ஞானஸ்நானத்திற்கென்றே உள்ள பிரத்தியேக ஆடைகள் இன்றிரவில் ஈரமாக ஆகிவிடும். அதைப்பற்றி பரவாயில்லை. நீங்கள் அவ்வாறு காலையில் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால் செய்யுங்கள். இன்று காலையில் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால் அப்படியே செய்யுங்கள். நாம் இதோடு முடித்துக்கொண்டு கடந்து செல்லவேண்டு மென எண்ணுகிறேன், அப்படித்தானே சகோதரன் நெவில் அவர்களே? நல்லது, ஐயா. எத்தனை பேர்கள் இப்பொழுது தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதை காண விரும்புகிறீர்கள்? ஒருவேளை இதை நீங்கள் இதுவரையிலும் பார்த்திரா விடில், சில நிமிடங்கள் தங்கித்தரித்து, அதைக் கண்டுவிட்டுப்போங்கள். அப்படித் தங்கியிருந்து அதைக்கண்டுபோக முடியாவிடில் பரவாயில்லை, ஆனால் இரவு ஆராதனைக்கு கடந்து செல்வோமாக. அங்கே பெரிய கண்ணாடி இருக்கிறது, அதன் வழியாக ஞானஸ் நானத்திற்காக தண்ணீருக்குள் செல்லும் ஒவ்வொருவரையும் நீங்கள் கண்டுகொள்ளலாம். அதின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும். நான் நிச்சயமாக இருக்கிறேன். ஞானஸ்நானத்தில் நாம் கர்த்தரோடு அடக்கம்பண்ணப்படுகிறோம். ஆமென். அவர் மரித்தது போல் நாமும் அவருடைய மரணத்திற்குள்ளாக அடக்கம்பண்ணப்படுகிறோம். புதிதான ஜீவனுள்ள வர்களாய் நடக்கும்படி, அவருடைய உயிர்த் தெழுதலுக்குள்ளாக நாம் எழும்புகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 175.இன்றிரவில் உள்ள பாடம் எதைப்பற்றியது என்று எத்தனை பேர் அறிவீர்கள்? அதுதான் லவோதிக்கேயா ஆகும். சபைக் காலங்களின் உச்சக்கட்டமானதும் கடைசியானதுமாகும். நல்லது, நாம் ஞானஸ்நான ஆராதனைக்குள் செல்வோம். டெட்டி, நீங்கள் ஒருவேளை நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறீர்களா? (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி... ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்தாகிவிட்டதா? இப்பொழுது சிக்காகோவுக்குப் போக வேண்டிய சிலர் உள்ளனர். ஜெபம்பண்ணுவோம். கர்த்தராகிய இயேசுவே, அவர்கள் ஆராதனை முழுவதிலும் அமர்ந்திருந்து செவிகொடுத்திருக்கிறார்கள். சிக்காகோவுக்கு அவர்கள் புறப்படுகையில், நாங்கள் அவர்களை இப்பொழுது உம்மிடம் அர்ப்பணிக்கிறோம், கர்த்தாவே. அவர்களோடு கூடப்போம், கர்த்தாவே. அவர்கள் ஒவ்வொருவரும் இந்த அற்புது ஒளியை தங்களோடு எடுத்துச்சென்று, அதை அவர்கள் போகும் ஒவ்வொரு இடத்திலும் சிக்காகோ நகரம் முழுவதிலும் பரவச் செய்யட்டும், கர்த்தாவே. அவர்களோடு நீர் இருந்தருளும். மீண்டும் நாங்கள் சந்திக்கிறவரையிலும் அவர்களுடைய ஆவிகள் உம்மில் நங்கூரமிட்டிருக்கட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 176.(சகோ. நெவில் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் - ஆசி) “என் ஜனங்களே, இந்த காலைவேளையில் மற்றொருவிசை இதை கூற விரும்புகிறேன். என் ஊழியகாரனே, நீ என்னுடைய வார்த்தையை கொடுத்துக்கொண்டிருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னை நான் பின்தொடர்ந்து, உன்னொடு தனிமையாய் பேசுவேன். உன்னுடைய பிரயானத்திட்டங்களை உனக்கு காட்டுவேன். நான் உன்னுடனே கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்.; என் ஜனங்களே, இந்த காலைவேளையிலே நான் கூறுவது என்னவென்றால், நான் சர்வவல்லமையுள்ள தேவன். இந்த காலைவேளையிலே நான் உங்களிடத்தில் வரும்படிக்கு இந்த பாத்திரத்தை உபயோகப்படுத்தினேன். இதோ, நீங்கள் என்னுடைய ஆவியை தள்ளிவிட்டு போகவேண்டாம் என்று கூறுகிறேன். உங்களிடத்தில் பேசுகிற சத்தத்தை கைவிட வேண்டாம். நான் உங்களுடனே கூட இருக்கிறேன். உங்களுடைய சித்தம் என்னுடையதாய் இருக்கட்டும். உங்களுடைய சொந்த வழியை விட்டு, உங்களுடைய என்னங்களை விட்டு விலகி என்னை விசுவாசியுங்கள், நான் உங்களுடனே இருக்கிறேன். என்னிடத்தில் வந்து, ஞானஸ்தானத்தில் என்னை பின்பற்றுவீர்களானால், அப்போழுது நான் உங்களை ஆசீர்வதித்து உங்களை பாதுகாப்பேன். நான் உங்களை இன்பத்தின் முழுமைக்கு கொண்டுவருவேன். ஆம், நான் பேசினேன். இதை நிறைவேற்றாமல் இருப்பேனோ?“ என்று கர்த்தர் உரைக்கிறார். நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, ''கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி, உமது நாமத்திற்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். கர்த்தாவே, உமக்கு நன்றி நாங்கள் அங்கீகரிக்கிறோம். கர்த்தாவே, வேதத்தில் ஒரு மனிதன் மேல் ஆவியானவர் இறங்கி, தேவனுடைய இரகசியம் யாவற்றையும் கூறி, என்ன நடக்கப்போகிறது என்பதை எடுத்துரைத்தார். பிதாவே, நீர் மாறாத தேவன் என்பதை நாங்கள் அறிவோம். இங்கே இருக்கிற இந்த தாழ்மையான மேய்ப்பனின் மேல் இன்று காலையில் இறங்கினீர். கர்த்தாவே, ஒரு காலத்தில் இவர் நிக்கொலாய் மதஸ்தரின் சபையில் இருந்தார். ஆனால் நீர் அவரை அசைத்தபொழுது, அவர் ஒளியைக் கண்டு, அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். அவரோடு நீர் பேசத்தக்கதாக அவருடைய இருதயம் உமக்கென்று திறந்ததாய் இருக்கிறது. அவர், தான் என்ன கூறப்போகிறோம் என்பதையே அறியாதவராயிருந்த பொழுது, அவர் எழும்பி நின்று, எங்களுக்கென தீர்க்கதரி சனத்தின் குரலாக இருக்கும்படி, தன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் அசைவாட இடம் கொடுத்தார். பிதாவே, உமக்கு நன்றி. என்னுடைய பயணத் திட்டங்களுக்காக நான் உம்மை நோக்கிப்பார்க்கிறேன். ஆமென். 177.(ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். இன்னொரு சகோதரி அதற்குரிய வியாக்கியானத்தைத் தருகிறார் - ஆசி). நீங்கள் விசுவாசிக்கிறவர் தேவன் நானே. பயப்படாதேயுங்கள். இதோ நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் சீக்கிறமாய் வரப்போகிறேன். ஆம், என்னுடைய ஆவி சியோனிலே என் மக்கள் மேல் இருக்கிறது. நான் அவர்கள் நடுவே கடந்து போவேன். அதை நோக்கிப்பார்த்து விசுவாசியுங்கள் அப்பொழுது அதை பெறுவீர்கள். தீர்கதரிசியின் நாட்களில் நான் பேசினது போல உங்களுடனே இதை பேசுகிறேன். அல்பாவும் ஒமேகாவும் துவக்கமும் முடிவும், முதல்வரும் கடைசியானவரு மானவரை அனுப்புகிறேன். உங்களுக்கு முன்பாக திறந்த வாசலை வைத்து அங்கே நின்றுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்குள் பிரவேசிப்பீர்களானால் அதை பெற்றுக் கொள்வீர்கள். இதோ நான் உங்களுக்கு சொல்லுகிறது என்னவென்றால், என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் நான் அல்பாவும் ஒமெகாவும் துவக்கமும் முடிவுமாயிருக்கிறேன்.“) ஆமென். நீங்கள் அதை பெற்றுக்கொண்டீர்களா? அது என்னவென்று பார்த்தீர்களா? அந்நிய பாஷையில் பேசின அந்த பெண்மணியின் தொனியையும், அதே தொனியில் அந்த சகோதரியின் வியாக்கியானத்தையும் கவனித்தீர்களா? அவர்களிருவரும் வெவ்றுே பெண்கள். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கூட இருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அந்த சப்தத்தில் உள்ள தொனியை கவனியுங்கள், அங்கே பரிசுத்த ஆவியானர் இருக்கிறார். இங்கே ஜனங்களின் மத்தியில் கிறிஸ்து இருக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லையா? அவ்வாறுதான் உள்ளது. 178.சகோதரன் பேட் அவர்களே, நீங்கள் ஏதோ வாசிக்க விரும்புகிறீர்களா? வாசியுங்கள். (சகோதரன் பேட் வெளிப்படுத்தின விசேஷம் 22:16ல் இருந்து, 'சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்' என்ற வசனத்தை வாசிக்கிறார் - ஆசி). ஆமென். தெய்வீக வழிநடத்துதல், அது ஆவிக்குரியதாயிருக்கிறது. சபையின் மக்களுக்குள்ளாக ஆவியானவர் அசைவாடுவதைப் பாருங்கள். அவர்களுக்குள் உலாவி , பேசுகிறார். ஓ, அவர் அற்புதமானவராக இல்லையா? நண்பர்களே, அதைப்பற்றி நாம் எண்ணுகையில், அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அதே காரியம்தான். அது இன்றைக்கு இங்கே இருக்கிறது. அதைப்பற்றி இனிமேல் ஆச்சரியப்படத் தேவையில்லை. என்னுடைய விலையேறப்பெற்ற மக்களே, ஓ, வாருங்கள், அவரை ஏற்றுக்கொள்ளுங்கள், வந்து ஏற்றுக்கொள்ளுங்கள். டெட்டி, நாங்கள் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தப்படுகையில்.... தேவன் உங்களின் இருதயங்களை ஆயத்தமாக்கும்படி வேண்டுகிறேன். “அவர் எங்கே வழிநடத்திச் செல்லுகிறாரோ, நான் அதில் பின் செல்லுவேன்''(பாடல்) நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும்படி ஜீவிக்கின்ற தேவனாலே மற்றும் அவருடைய வார்தையின் புத்திமதியோடு உங்களுக்கு கட்டளையிடுகிறேன். நான் ஏன் இதை செய்கிறேன் என்றால், நினைவில் கொள்ளுங்கள், வேதம் நாம் அவ்வன்னமே செய்யும்படி நம்மை வளியுறுத்துகிறது. பவுலும் வளியுறுத்துகிறார். இதை தவிர வேறொரு காரியத்தை தூதன் போதித்திருப்பானானால், அவன் சபிக்கப்பட்டவன். இதோ அவன் சொன்னபடியாக நானும் என்னுடைய வாழ்கையின் முடிவிலே இதை சொல்லவிரும்புகிறேன், “தேவனுடைய முழு ஆலோசனையை உங்களுக்கு அளிப்பதில் நான் தவறினதில்லை” ஏனென்றால் எந்த மனிதனுடைய இரத்தமும் நம்மேல் இல்லை என்று அறிந்திருக்கிறேன். ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நல்லது. நாம் நம்முடைய களைந்துபோகும்போது பாடுகிற பாடலை பாடலாம். அந்த நேரமட்டுமாக இயேசுவின் நாமத்தை எடுத்து செல் வேதனையும் துயரத்தையும் ஏற்றுக்கொண்ட பிள்ளையின் நாமம் சந்தோஷமும் சொகரியமும் கொடுக்கும் நாமம் எங்குபோனாலும் இதை கொண்டுசெல் விலையேற பெற்ற அந்த நாமம், எவ்வளவு இனிமையானது பூமியில் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமும் நிறைந்த நாமம் விலையேற பெற்ற அந்த நாமம், எவ்வளவு இனிமையானது பூமியில் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமும் நிறைந்த நாமம் அந்த இயேசுவின் நாமத்திற்கு தலை வணங்குவோம் அவருடைய பாதத்தில் சாஷ்டாங்கமாய் பணிவோம் நம்முடைய பயனம் முடிவடைந்த பின்னர் அவரை ராஜாக்களுக்கு எல்லாம் ராஜாவாய் பரலோகத்தில் முடிசூட்டுவோம் 50